என் மலர்
நீங்கள் தேடியது "out in a"
- ரோட்டோரம் கிடந்த குப்பையில் திடீரென தீ பிடித்தது.
- சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், எக்கட்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது அய்யம்பாளையம். இங்கு ஏராளமான வீடுகள் உள்ளது.
இந்த வீடுகளில் உள்ள குப்பைகளை அங்குள்ள ரோட்டோரம் கொட்டி வந்தனர். இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பையில் திடீரென தீ பிடித்தது.
அந்த பகுதியில் வீடுகள் மற்றும் தென்னை மரங்கள் இருந்ததால் தீ பரவாமல் இருக்க அப்பகுதி மக்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து உடனடியாக சென்னிமலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- டிரான்ஸ்பார்மரின் மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.
- அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள்.
ஈரோடு:
ஈரோடு நசியனூர் ரோடு நாராயணவலசு பகுதியில் நேற்று இரவு மின்சார வினியோகம் தடைபட்டு இருந்தது. இரவு 9 மணிஅளவில் அந்த பகுதியில் மின்சார வினியோகம் செய்யப்பட்டது.
அப்போது சம்பத் நகரில் இருந்து நாராயணவலசுக்கு செல்லும் வழியில் சாலையோரமாக உள்ள டிரான்ஸ்பார்மரின் உச்சியில் இணைப்பு கொடுக்கப்பட்ட மின் கம்பிகளில் திடீரென தீப்பற்றியது.
இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தார்கள். அவர்கள் டிரான்ஸ்பார்மருக்கு சிறிது தூரத்துக்கு முன்பே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர்.
மேலும் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீப்பொறி கீழே விழுந்ததால் அதன் அருகில் யாரும் செல்லவில்லை. சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு மின் இணைப்பு தடைபட்டதால் தீ தானாகவே அணைந்தது. இதனால் பெரும் அசம்பா–விதம் தவிர்க்கப்பட்டது.
அதன்பிறகு வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் அங்கிருந்து கடந்து சென்றார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது. டிரான்ஸ்பார்மர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.