search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Outside Off Stump"

    • இந்த தொடரில் 8 முறை அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்தை சீண்டி அவுட் ஆகி உள்ளார்.
    • மற்ற 2 இன்னிங்களில் ஒன்றில் நாட் அவுட். மற்றொன்றில் பேட்டிங் செய்யவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரில் 4 போட்டிகள் முடிவில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 185 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 181 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் 4 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

    மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ராகுல் 13, ஜெய்ஸ்வால் 22, சுப்மன் கில் 13, விராட் கோலி 6, ரிஷப் பண்ட் 61, நிதிஷ் ரெட்டி 4 என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    முன்னதாக இந்த இன்னிங்சில் விராட் கோலி 6 ரன்னில் போல்ண்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதுவும் அவுட் சைடு ஆப் ஸ்டம்புக்கு சென்ற பந்தை தொட்டு ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவுட் சைடு அப் ஸ்டம்ப் பந்தை சீண்டி இந்த தொடரில் மட்டும் 8-வது முறையாக அவுட் ஆகி உள்ளார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் 10 இன்னிங்சுகளில் 8 முறை இந்த மாதிரி அவுட் ஆகியுள்ளார்.

    மற்ற 2 இன்னிங்களில் ஒன்றில் நாட் அவுட். மற்றொன்றில் பேட்டிங் செய்யவில்லை. முதல் டெஸ்ட்டில் 2-வது இன்னிங்சில் 100 நாட் அவுட்டில் இருந்தார். அவர் சதம் அடித்தவுடன் இந்தியா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 3-வது டெஸ்ட் மழையால் டிரா ஆனது. அதனால் விராட் கோலி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    விராட் கோலிக்கு பல முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறினார். ஆனால் அதையெல்லாம் அவர் யோசிப்பாரா இல்லையா என்பது தெரியவில்லை என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சச்சின் வீடியோவை மீண்டும் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

    ×