search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "overturn"

    • விரகனூர் சுற்றுச்சாலையில் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை அருகே, விரகனூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இருந்து பழைய பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி இன்று காலை புறப்பட்டது.விரகனூர் சுற்றுச்சாலை ரவுண்டானாவில் இருந்து டிரைவர் லாரியை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    லாரியில் இருந்த பேப்பர் கழிவுகள் ரோட்டில் சிதறின. இந்த விபத்தில் சிக்கிய லாரி டிரைவரை அங்கிருந்த வர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர் செல்வின் தலைமையில் தெப்பக்குளம் போக்கு வரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் லாரியில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறியடிக்கும் வகையில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. #CabinetBill #DalitLaw #SupremeCourt
    புதுடெல்லி:

    மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சுபாஷ் காசிநாத் மகாஜன் என்ற ஓய்வுபெற்ற அதிகாரி, தன் மீதான எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட நடவடிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

    அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மீது கொடுக்கப்படும் புகாரின் பேரில் அவர்களை உடனடியாக கைது செய்து விடக்கூடாது என்று கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    மேலும், டி.எஸ்.பி. தலைமையில் விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் மட்டுமே மேல்அதிகாரி அனுமதியுடன் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது, சட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடும் என்று கூறின. வட மாநிலங்களில் பயங்கர வன்முறை வெடித்தது.

    இதையடுத்து, உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும், மறுஆய்வு செய்யக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    அதே சமயத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முறியடிக்கும் வகையில், புதிய மசோதா கொண்டுவர வேண்டும் என்று பா.ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் போர்க்கொடி உயர்த்தினார். எஸ்.சி., எஸ்.டி. அமைப்புகள் 9-ந் தேதி நாடுதழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    இந்நிலையில், அந்த அமைப்புகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது.

    அதில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏற்கனவே இருந்த ஷரத்துகள் மீண்டும் இடம்பெறும் வகையில், புதிய மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    மரபுசாரா ஹைட்ரோ கார்பன் எடுக்கும் கொள்கைக்கு மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    விவாகரத்துக்கு தொழுநோயை ஒரு காரணமாக காட்டக்கூடாது என்பதற்கான தனிநபர் சட்ட திருத்த மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்காக பல்வேறு மதத்தினரின் விவாகரத்து சட்டங்களில் திருத்தம் செய்யப்படுகிறது.

    தூய்மை பாரதம் திட்டத்துக்கு 2018-2019 நிதிஆண்டில், ‘நபார்டு’ வங்கி மூலமாக ரூ.15 ஆயிரம் கோடி நிதி திரட்ட மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    பொதுத்துறையை சேர்ந்த ஐ.டி.பி.ஐ. வங்கியின் 51 சதவீத பங்குகளை எல்.ஐ.சி. நிறுவனம் வாங்குவதற்கு மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 7 மாநிலங்களில், புதிதாக 13 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 
    ×