search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "overturned in the"

    • வேன் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் தக்காளிகளுடன் தலைகுப்புற கவிழ்ந்தது.
    • கடத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கர்நாடகா மாநிலத்தில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி கொண்டு ஒரு மினி வேன் நேற்று இரவு சத்தியமங்கலம் ரோட்டில் கோபி செட்டிபாளையம் வழியாக வந்து கொண்டு இருந்தது.

    அந்த வேன் நேற்று இரவு கோபிசெட்டி பாளையம் அடுத்த இண்டியம் பாளையம் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த வேன் திடீரென எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள பள்ளத்தில் தக்காளிகளுடன் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த வேனில் டிரைவர் மற்றும் கிளீனர் என 2 பேர் வந்தனர். இதில் அவர்கள் லேசான காயத்து டன் உயிர் தப்பினர். மேலும் தக்காளிகள் அந்த பள்ள த்தில் சிதறி கிடந்தன.

    இது பற்றி தகவல் கிடைத் ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிழ்ந்த லாரியை மீட்டனர். மேலும் காயம் அடைந்த 2 பேரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×