என் மலர்
நீங்கள் தேடியது "P Susheela"
- பின்னணி பாடகி பி.சுசிலாவுக்கு 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை 30.9.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி சிறப்பிக்கிறார்.
சென்னை:
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11.07.2024 அன்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்படி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்டவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல மொழிப் பாடல்களைப் பாடியவரும், 'தென்னிந்தியாவின் இசைக்குயில்' என்றும், 'மெல்லிசை அரசி' என்றும் பாராட்டப்பட்டுள்ளவரும், முத்தமிழறிஞர் கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்ட வருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும் 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை 30.9.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கிச் சிறப்பிக்கிறார்.
- தாய்மொழி தெலுங்கு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாகத் பேசத் தெரியும்.
- நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சினிமா பின்னணி பாடகி பி.சுசீலா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒடியா, சமஸ்கிருதம், துளு மற்றும் படகா உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 17,695 பாடல்களை பாடியுள்ளார்.
சிங்களப் படங்களுக்கும் பாடியுள்ளார். அவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சரளமாகத் பேசத் தெரியும்.
திருப்பதியில் பிரபல பின்னணி பாடகி சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
திருப்பதி ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் 21-வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும் ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசீர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இந்த விழாவில் பிரபல பின்னணி பாடகி பி. சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே நிச்சயமாக இருக்க முடியாது.
- தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட புகழை பெற்ற பாடகி அவர்.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை நடைபெற்றது.
இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்கு டாக்டர் பட்டம் பெற்ற பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே நிச்சயமாக இருக்க முடியாது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட புகழை பெற்ற பாடகி அவர்.
அதே போல் இசையில் அறிஞர் பி.எம்.சுந்தரம் பன்முக திறமை கொண்டவர். மிகப்பெரிய இசை மரபில் பிறந்து இசைத் துறைக்கு அரிய தொண்டாற்றி வருபவர்.
மங்கல இசை மன்னர்கள் மரபு தந்த மாணிக்கங்கள் போன்ற இசைத் துறையில் முக்கியமான நூல்களை படைத்தவர். எல்லாவற்றுக்கும் மேல் கலைஞர் மனதில் இடம் பிடித்தவர்.
இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எங்கள் தஞ்சை மன்னை சார்ந்தவர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோட முதலமைச்சரான நான் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருக்கிறதால்தான் மக்கள் எண்ணற்ற பிரதிபலிக்கிற வகையிலான இது போன்ற முடிவுகள் எடுக்க முடிகிறது.
அதனால்தான் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் முதலமைச்சரே இருக்க வேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
அதற்காக சட்ட முன் வடிவுகளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி இருக்கிறோம்.
இது தொடர்பான சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை. சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பான வழக்கை விசாரித்துக் கொண்டு வருகிறது. நல்ல செய்தி வரும் என்று எதிர் பார்ப்போம். வர வேண்டும் என்று எதிர் பார்ப்போம்.
செய்திகளில் பார்த்திருப்பீர்கள், நாளிதழில் படித்திருப்பீர்கள். மாநில அரசின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையில், நேற்றைய தினம், நீதிபதிகள் கருத்துக்களை அதில் சொல்லி இருக்கிறார்கள். ஒத்திசைவு பட்டியலில் இருப்பதை கல்வி மானிய பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.
இப்படி மாற்றினால்தான் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர்கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும். நான் தமிழ்நாட்டிற்காக மட்டும் இப்படி சொல்லவில்லை. இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களை சேர்த்துதான் சொல்கிறேன். நான் அடிக்கடி சொல்வது போல கல்விதான் ஒருவருடைய நியாயமான சொத்து. அந்த கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு எந்த தடையும் இருக்க கூடாது என்பதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை.
இந்த தருணத்தில் 2 அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்திற்கான அரசு மானியம் ரூ. 3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதி ஆண்டில் இருந்து வழங்கப்படும்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையம், நூலகம் மற்றும் கற்றல் மேலாண்மை அமைப்பு முறை அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழ் என்பது 3 எழுத்து.
- மூன்றெழுத்தை கொண்டுதான் எனது தந்தை எனக்கு சுசீலா என்று பெயர் வைத்து தமிழ் சுசீலாவாக ஆக்கியுள்ளார்.
முனைவர் பட்டம் பெற்ற பின்னணி பாடகி பி.சுசீலா தமிழ்த்தாய் வாழ்த்து பாடி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
என்னை தமிழ்ப் பெண்ணாக ஏற்றுக்கொண்டவர் கருணாநிதி. அவருடைய இதயம் யாருக்கும் தெரியாது. அவரைப் போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல மனசு உள்ளது.
தமிழ் என்பது 3 எழுத்து. அந்த மூன்றெழுத்தை கொண்டுதான் எனது தந்தை எனக்கு சுசீலா என்று பெயர் வைத்து தமிழ் சுசீலாவாக ஆக்கியுள்ளார் என்று கூறினார்.
- பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன்.
- பாடகி சுசீலாவின் பாடல்களை நான் எப்போதும் வெளியூருக்கு காரில் செல்லும் போது காரில் போட்டு கேட்டுக்கொண்டே செல்வேன்.
சென்னை:
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-
இன்று இசைப் பல்கலைக்கழகம் சார்பில் பத்மபூஷன் பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் என 2 இசை மேதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளோம்.
இதன் மூலம் டாக்டர் பட்டமும் பெருமை அடைகிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். அவரது பாடல்களை நான் எப்போதும் வெளியூருக்கு காரில் செல்லும் போது காரில் போட்டு கேட்டுக்கொண்டே செல்வேன். எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. அதை அடிக்கடி நான் பாடியும் இருக்கிறேன்.
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை.
காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை.
உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை.
அதனால்தான் மேடைக்கு வந்த உடனே அம்மையாரை பார்த்த உடனே வணக்கம் சொல்லி விட்டு நான் உங்கள் ரசிகன் என்று சொன்னேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக டாக்டர் பட்டம் வாங்க மேடைக்கு வந்த பி.சுசீலா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையை பிடிக்க முயன்றபோது தடுமாறி இருக்கையில் அமர்ந்தார். அருகில் இருந்த அமைச்சர்கள் அவரை தாங்கி பிடித்தனர்.
- நீடாமங்கலத்தை சேர்ந்த இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரத்துக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
- நிகழ்ச்சியில் இணை வேந்தரான அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பேராசிரியர்கள், செனட் உறுப்பினர்கள் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை:
இந்தியாவின் முன்னணி திரைப்படப் பின்னணி பாடகி இசைக்குயில், மெல்லிசை அரசி பி.சுசீலா.
ஆந்திராவை சேர்ந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல இந்திய மொழிகளில் 40 ஆண்டு காலமாக 25 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
இசையரசியான இவரை கவுரவிக்கும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
இந்த விழாவில் நீடாமங்கலத்தை சேர்ந்த இசையியல் அறிஞர் பி.எம்.சுந்தரத்துக்கும் கவுரவ டாக்டர் பட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் இணை வேந்தரான அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பேராசிரியர்கள், செனட் உறுப்பினர்கள் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.