search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padappai"

    • லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை.

    படப்பை:

    கடலூரை சேர்ந்தவர் தர்மதுரை(வயது29). இவர் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து குன்றத்தூர் நெடுஞ்சாலையில் நத்தம்பாக்கம் நோக்கி சென்றார். புதுநல்லூர் பகுதியில் வந்த போது மாடு ஒன்று திடீரென குறுக்கே வந்தது.

    இதில் மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. கட்டுப்பாட்டை இழந்த தர்மதுரை மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தார். அந்த நேரத்தில் பின்னால் வந்த சிமெண்ட் கான்கிரீட் கலவை லாரி தர்மதுரை மீது மோதியது.

    லாரியின் சக்கரத்தில் சிக்கிய தர்மதுரை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து பலியான தர்மதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குன்றத்தூர் நெடுஞ்சாலையில் அதிக அளவில் மாடுகள் சுற்றி வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மாடுகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    படப்பை அருகே மரக்குடோனில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    படப்பை அருகே உள்ள செரப்பனஞ்சேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மரக்கட்டையில் பொருட்களை பேக்கிங் செய்யும் நிறுவனம் உள்ளது.

    இதற்கு தேவையான மரத்தை அருகில் உள்ள குடோனில் வைத்திருந்தனர். நேற்று இரவு திடீரென குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.

    கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பகுதியில் இருந்து 4 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் குடோனில் இருந்த மரக்கட்டைகள் எரிந்து நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் இருக்கும்.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    படப்பை அருகே வியாபாரி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதுர்:

    படப்பையை அடுத்த நாவலூர் குடியிருப்பை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 58). அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்திருந்தார். இவரது மகன் ரவிக்குமார்.

    நேற்று முன்தினம் சவ ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பழனியப்பனையும், அவரது மகன் ரவிக்குமாரையும் அதே பகுதியை சேர்ந்த பாண்டியன், சதீஷ் தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த பழனியப்பன் பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ரவிக் குமாருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கொலை தொடர்பாக படப்பை பகுதியில் பதுங்கியிருந்த பாண்டியன், சதீஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×