என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Painter die"
- பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை முதலாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர்
- அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது
நெல்லை:
நெல்லை பேட்டையில் உள்ள ரகுமான்பேட்டை முதலாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் ஷேக் அப்துல் காதர்(வயது 53). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று கங்கை கொண்டானில் உள்ள மான்கள் சரணாலயம் அருகே ஒரு கட்டிடத்தில் பெயிண்டிங் வேலைக்காக சென்றிருந்தார். அப்போது வேலையை முடித்துவிட்டு இரவில் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்கு குறுக்காக நடந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்படட ஷேக் அப்துல் காதர் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அங்கு விரைந்து சென்று உயிரிழந்த ஷேக் அப்துல் காதர் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.