என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvBAN"

    • வங்கதேச கடந்த வருடம் இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது.
    • இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    வங்கதேச கிரிக்கெட் அணி மே மாதம் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த தொடர் ஏற்கனவே நடைபெற இருந்தது. ஆனால், இரண்டு அணிகளுக்கும் அதிக அளவில் போட்டிகள் இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த நிலையில் மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு வங்கதேச அணி பாகிஸ்தான் சென்றிருந்தது. அதற்கு முன் கடந்த வருடம் பாகிஸ்தான் சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது. இரண்டு போட்டிகளிலும் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது.

    பைசாலாபாத், முல்தான், லாகூரில் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட், நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான், வங்காள தேசம் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய வங்காளதேசம் 38.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹிம் 64 ரன்களும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 53 ரன்களும் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் ஹல் உக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். முகமது ரிஸ்வான் 63 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 39.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    • வங்காளதேச அணி பாகிஸ்தானில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • பாகிஸ்தான், வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமது உள்ளிட்ட வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    காயம் காரணமாக கடந்த 12 மாதத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் களம் காணாத இவரது வருகை நிச்சயம் வங்காளதேச அணிக்கு வலு சேர்க்கும்.

    வங்காளதேச டெஸ்ட் அணியின் விவரம் வருமாறு:

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹமுதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷட்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ரானா, ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது

    • வங்காளதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி ராவல்பிண்டியிலும், 2-வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 30-ம் தேதி கராச்சியிலும் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இத்தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வங்கதேச அணி மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் வங்கதேச அணியில் தொடக்க வீரர் மஹ்முதுல் ஹசன் ஜாய் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்படுகிறது.

    அதேசமயம் தொடரில் இருந்து விலகியுள்ள மஹ்முதுல் ஹசன் ஜாயிற்கு பதிலாக மாற்று வீரராக யாரையும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.

    வங்கதேச டெஸ்ட் அணி:

    நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஜாகிர் ஹசன், ஷத்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்ஃபிக்கூர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் குமார் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஷோரிஃபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது.

    பாகிஸ்தான் டெஸ்ட் அணி:

    ஷான் மசூத் (கே), சவுத் ஷகீல், அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், அப்ரார் அகமது, பாபர் ஆசாம், காம்ரன் குலாம், குர்ரம் ஷாஜாத், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, சர்ஃபராஸ் அகமது, ஷாஹீன் அஃப்ரிடி

    • சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் அடுத்த ஆண்டு நடத்துகிறது.
    • இதற்காக மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    கராச்சி:

    வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, 2-வது டெஸ்ட் போட்டி கராச்சி நேஷனல் பேங்க் மைதானத்தில் ஆகஸ்ட் 30-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்தப் போட்டியை நேரில் பார்த்து ரசிப்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும், ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தால் ரசிகர்களுக்கு முழு தொகையும் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவித்தது.

    அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. இதற்காக மைதானத்தை (கேலரி உள்ளிட்ட இடங்கள்) புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களின் பாதுகாப்புதான் எங்களது முதன்மை நோக்கம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

    1996-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கராச்சி மைதானத்தில் நடந்தன. அதன்பின் நடைபெற இருக்கும் ஐசிசி தொடர் (சாம்பியன்ஸ் டிராபி) இதுவாகும்.

    இந்நிலையில், பாகிஸ்தான்-வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சிக்கு பதில் ராவல்பிண்டியில் நடைபெறும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 448 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
    • அந்த அணியின் முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார். சவுத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினர்.

    4-வது விக்கெட்டுக்கு இணைந்த சேர்ந்த சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் ஜோடி 240 ரன்கள் எடுத்தது. சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வங்கதேசம் முதல் இன்னிங்சில் இன்னும் 132 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்து வலுவான நிலையில் உள்ளது.
    • அந்த அணியின் முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வங்கதேச அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 93 ரன்னில் அவுட்டானார். மொமினுல் ஹக் 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 316 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 55 ரன்னும், லிட்டன் தாஸ் 52 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. லிட்டன் தாஸ் 56 ரன்னில் ஆட்டமிழந்தார். 7வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிமுடன், மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பாக ஆடிஅய் முஷ்பிகுர் ரஹிம் சதமடித்து அசத்தினார். மெஹிதி ஹசன் அரை சதம் கடந்தார்.

    7-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்த நிலையில், முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டாகி இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். மெஹிதி ஹசன் 77 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் பாகிஸ்தானை விட 117 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களைக் குவித்தது.
    • பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 448 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுத் ஷகீல் 141 ரன்னில் அவுட்டானார். சயீம் அயூப் அரை சதம் அடித்து 56 ரன்னில் அவுட்டானார்.

    வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து அடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 565 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்னில் அவுட்டானார். ஷட்மன் இஸ்லாம் 93 ரன்னிலும், மெஹிதி ஹசன் 77 ரன்னிலும், லிட்டன் தாஸ் 56 ரன்னிலும், மொமினுல் ஹக் 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலிம் ஷஹீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    117 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வங்கதேச வீரர்கள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முகமது ரிஸ்வான் 51 ரன் எடுத்தார்.

    வங்கதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி எளிதில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
    • ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆட்ட நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் கூறியதாவது:

    ராவல்பிண்டி பிட்ச் நாங்கள் எதிர்பார்த்ததை போல் அமையவில்லை. இந்த பிட்ச் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது தவறாகிவிட்டது.

    முதல் இன்னிங்சை 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய முடிவுஎடுக்கப்பட்டது. டிக்ளேர் செய்ததற்கான காரணம் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தான்.

    ஆனால் வங்கதேச வீரர்கள் முதல் இன்னிங்சில் மிகவும் ஒழுக்கத்தையும் நோக்கத்தையும் வெளிப்படுத்தினர். முஷ்பிகுர் மற்றும் மிராஸ் நன்றாக பேட்டிங் செய்தனர்.

    பந்துவீச்சிலும் வங்கதேச அணியை கட்டுப்படுத்த தவறிவிட்டோம். சில தவறான கணிப்புகள் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

    இந்த டெஸ்ட் போட்டியில் செய்த தவறுகளை சரிசெய்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடரை சமன் செய்ய முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
    • இதனால் பாகிஸ்தான் அணி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    வங்கதேச அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றத்திற்குப் பிறகு வெளியான ஒரு வீடியோ, அந்த அணியின் ஒற்றுமை எப்படிப்பட்டது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    அந்த வீடியோவில், கேப்டன் ஷான் மசூத், வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடியின் தோளில் கை வைத்து பேசுகிறார். அப்போது ஷாகின், கேப்டனின் கையை தோளில் இருந்து தட்டிவிடுகிறார். இந்த சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து சிலர் கேப்டனை அனைவர் முன்னிலையிலும் இவ்வாறு அவமதிப்பது அணிக்கு நல்லதல்ல. கிரிக்கெட் போன்ற விளையாட்டில் இதுபோன்ற செயல்களால் வெற்றிபெற முடியாது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பாகிஸ்தானிடம் தொடர்ந்து 13 முறை தோல்வியை சந்தித்த வங்கதேசம் அணி தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 13 தோல்விகள் என்ற தொடர் தோல்வி முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினேன்.
    • என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்க்கு பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி.

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது ராவல்பிண்டியில் நடந்து முடிந்துள்ளது. இப்போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதுடன், அந்த அணிக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றியைப் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக முஷ்ஃபிக்கூர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஆட்டநாயகன் விருது வென்றதற்காக கிடைத்த பரிசுத்தொகையை வங்கதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்ப்பணிப்பதாக முஷ்ஃபிக்கூர் ரஹிம் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்த பரிசுத் தொகையை, வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடை அளிக்க விரும்பினேன். எனவே, நான் அவர்களுக்கு இந்த பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்.

    வெளிநடுகளில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை என்பதால், இது இதுவரை என்னுடைய ஆட்டங்களில் மிகச்சிறந்த ஆட்டமாக நான் பார்க்கிறேன். மேலும் இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் இங்கு வந்ததில் இருந்து தீவிரமாக தயாராகினோம். அதேசமயம் இந்த டெஸ்ட் தொடருக்கு முன், இரண்டரை மாத இடைவெளி இருந்தது.

    மேலும் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி வீரர்களுடன் அணியின் மற்ற வீரர்களும் நிர்வாகமும் அங்கு இருந்தனர். என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்க்கு பயிற்சியாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என்னால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறேன்.

    இவ்வாறு ரஹிம் கூறினார்.

    • முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது.
    • ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும்.

    வங்கதேசம் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் அணி வீழ்த்தி வங்கதேசம் சாதனை படைத்தது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சொந்த மண்ணில் வங்கதேசம் அணி முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத்துக்கு முன்னாள் வீரர் ரமீஷ் ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் உகூறியதாவது:-

    முதலாவதாக அணி தேர்வில் தவறு ஏற்பட்டிருந்தது. நீங்கள் பிரதான சுழல் பந்துவீச்சாளர் இல்லாமல் இருந்தீர்கள். இரண்டாவதாக நம்முடைய வேக பந்துவீச்சாளர்களுக்கு இருக்கும் நற்பெயர் முடிவுக்கு வந்துவிட்டது.

    இந்த தோல்வியை ஒரு நம்பிக்கை மீது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஆகும். இந்திய அணி ஆசியக் கோப்பையின் கடந்த ஆசியக் கோப்பையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சின் பலவீனத்தை வெளியில் காட்டிவிட்டது. இப்போது பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

    நம்முடைய வேகப்பந்துவீச்சாளர்களின் வேகம் குறைந்து விட்டது. 125 முதல் 135 கிலோமீட்டர் வேகத்தில் வங்கதேசம் வேகப்பந்து வீச்சாளர்கள் அவர்களை விட சிறப்பாக இருந்தார்கள். ஷான் மசூத் கேப்டனாக உள்நாட்டில் நிரூபிக்க வேண்டும். ஷான் மசூத் தற்பொழுது கேப்டனாக தோல்வியில் இருக்கிறார்.

    ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி தோற்றுப் பொழுது சூழ்நிலை கடுமையாக இருந்தது என்று நினைத்தேன். பாகிஸ்தான் அணி அங்கு தொடரை வெல்வது சாத்தியம் கிடையாது. ஆனால் நீங்கள் இப்பொழுது சொந்த நாட்டில் வங்கதேசம் அணிக்கு எதிராக தோற்று இருக்கிறீர்கள். கேப்டனாக ஷான் மசூத் கண்டிஷனை சரியாக புரிந்து கொள்ளவில்லை.

    மேலும் பிஎஸ்எல் மற்றும் கவுண்டி போட்டிகளில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் ராவல்பிண்டி ஆடுகளத்தில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எப்படி தேர்ந்தெடுத்தார் என்பதுதான் எனக்குப் புரியவில்லை? என்று கூறியிருக்கிறார்.

    ×