என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PAKvSA"
- பாகிஸ்தான் 46.4 ஓவரில் 270 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது
- தென்ஆப்பிரிக்கா 47.2 ஓவரில் இலக்கை எட்டி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டி குறித்த தகவல்கள்:-
1. உலகக் கோப்பையில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 7-வது போட்டியாக இது அமைந்தது.
2. பாகிஸ்தான் அணியை 1999 உலகக் கோப்பைக்குப்பின் (ஒருநாள் மற்றும் டி20) தென்ஆப்பிரிக்கா முதன்முறையாக வென்றுள்ளது.
3. உலகக் கோப்பையில் தென்ஆப்பிரிக்கா 2-வது அதிகபட்ச சேஸிங் ஆகும். இதற்கு முன் 2011-ல் இந்தியாவுக்கு எதிராக 297 ரன்களை சேஸிங் செய்துள்ளது. தற்போது 271 ரன்னை எட்டியுள்ளது. 1999-ல் இந்தியாவுக்கு எதிராக 254 ரன்கள் சேஸிங் செய்துள்ளது.
4. பாகிஸ்தான் 270 ரன்களுக்கு மேல் அடித்து 1975-ல் இருந்து 2019 வரை 14 போட்டிகளில் ஒருமுறைதான் தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் 3 முறை 270 ரன்களுக்கு மேல் அடித்து, 2 முறை தோல்வியை சந்தித்துள்ளது.
5. இந்த போட்டியில் 18 பேட்ஸ்மேன்கள் கேட்ச் மூலம் அவுட்டானார்கள். இதன்மூலம் உலகக் கோப்பையில் கேட்ச் மூலம் அதிக பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த போட்டியாக இது அமைந்துள்ளது.
6. சென்னையில் ஐந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் நான்கு போட்டிகளில் சேஸிங் செய்த அணிகளே வெற்றி வாகை சூடின.
- 3 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 21 ரன்கள் எடுக்க தென்ஆப்பிரிக்கா போராடியது
- ஷம்ஸி- மகாராஜ் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்துக் கொடுத்தது
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த உலகக் கோப்பையில் கடைசி வரை மிகவும் த்ரில் ஆக சென்ற போட்டிகளில் இதுதான் முதன்மையான போட்டி என்றால் மிகையாகாது.
முதலில் விளையாடிய பாகிஸ்தான் 270 ரன்கள் குவித்தது. சென்னை ஆடுகளத்தில் 270 ரன்களை சேஸ் செய்ய கடினம் என்பதால் பாகிஸ்தான் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது.
ஆனால், தென்ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் டெம்பா பவுமா 27 பந்தில் 28 ரன்கள், டி காக் 14 பந்தில் 24 ரன்கள் அடிக்க 9.5 ஓவரில் தென்ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் சேர்த்தது.
அதன்பின் மார்கிராம் அணியை வழி நடத்திச் சென்றார். சிறப்பாக விளையாடிய அவர் சதம் அடிப்பதுடன் அணியை வெற்றி பெற வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்கிராம் 91 ரன்கள் எடுத்த நிலையில் 41-வது ஓவரின் 2-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுதான் இருந்தது. ஓவர்கள் அதிகமாக இருந்ததால் தட்டி தட்டி ரன்கள் சேர்த்தனர். இருந்த போதிலும் 260 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் ஒரு விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில் 11 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்ஸி, மகாராஜ் ஆகியோர் களத்தில் நின்றனர். 46-வது ஓவரை ராஃப் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை ஷம்ஸி எதிர்கொண்டார். அப்போது லெக்சைடு ஷம்ஸியை உரசிக் கொண்டு பந்து சென்றது. விக்கெட் கீப்பர் பந்தை பிடித்ததும் அப்பீல் செய்தார். ஆனால் நடுவர் வைடு என அறிவித்தார். பாகிஸ்தான் மேல்முறையீடு (Review) செய்ய வில்லை. ரீபிளேயில் வைடு இல்லை எனத் தெரிய வந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு ஒரு ரன் கிடைத்தது.
இதே ஓவரின் கடைசி பந்தை ஷம்ஸி எதிர்கொண்டார். அப்போது பந்து காலில் பட்டதும், நடுவரிடம் அப்பீல் கேட்டனர். அவர் அவுட் கொடுக்கவில்லை. இதனால் மேல்முறையீடு (Review) செய்தனர். அப்போது பந்து லெக் ஸ்டம்பை தாக்கியது தெரியவந்தது. ஆனால் நடுவர் முடிவு என 3-வது நடுவர் அறிவித்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியது.
அவுட்டாவதில் இருந்து ஷம்ஸி தப்பித்தார். தென்ஆப்பிரிக்காவும் தோல்வியில் இருந்து தப்பியது.
அடுத்த ஓவரை இருவரும் சமாளித்து 3 ரன்கள் சேர்த்தனர். 47-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நவாஸ் வீசினார். நவாஸ் லைக்சைடு பந்து வீச, மகாராஜ் சிறப்பாக விளையாடி பந்தை பவுண்டரிக்கு விரட்ட தென்ஆப்பிரிக்கா ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த காலங்களில் மழை போன்ற காரணங்களால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றி பலமுறை பறிபோய் உள்ளது. இதனால் அந்த அணியை அதிர்ஷ்டம் இல்லாத அணி என்பார்கள். ஆனால், நேற்றைய போட்டியில் அதிர்ஷ்டம் கைக்கொடுத்ததால், தென்ஆப்பிரிக்கா வெற்றியை ருசித்தது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடமும் பிடித்தது.
- பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார்
- தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா மீண்டும் இடம் பிடித்துள்ளார்
உலகக் கோப்பையில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
டாஸ் வென்ற பாபர் அசாம், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறோம். ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு முக்கியம். அந்த வகையில் இந்த போட்டியை அணுகுவோம். அனைத்து துறைகளிலும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டியுள்ளது" என்றார்.
பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி நீக்கப்பட்டு, வாசிம் ஜூனியர் சேர்க்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா அணியில் டெம்பா பவுமா இணைந்துள்ளார்.
- அரையிறுதி ஆட்டங்கள் மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது
- இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும்
இந்தியாவில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐந்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஆனால் இந்தியா ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது.
அக்டோபர் 8-ந்தேதி (ஞாயிறு): இந்தியா- ஆஸ்திரேலியா
அக்டோபர் 14-ந்தேதி (சனி): நியூசிலாந்து- வங்காளதேசம்
அக்டோபர் 18-ந்தேதி (புதன்): நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 23-ந்தேதி (திங்கள்): பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 27-ந்தேதி (வெள்ளி) பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா
- தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது
- டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
டி20 உலகக் கோப்பையில் இன்று தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணி 9 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணியை விட தென் ஆப்பிரிக்கா 15 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதனால் இப்போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்ற நிலை இருந்தது.
ஆனால் சிறிது நேரத்தில் மழை நின்றதால் மீண்டும் போட்டி தொடங்கியது. போட்டி நேரம் பாதிக்கப்பட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற 14 ஓவர்களில் 142 ரன்கள் ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை நோக்கி பயணித்த தென் ஆப்பிரிக்கா, 14 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி, 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் டெம்பா பவுமா 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் ஷாகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி குரூப்2 புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியது. அரையிறுதி வாய்ப்பிலும் நீடிக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்