என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "PAKvsENG"
- முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 800 ரன்களுக்கு மேல் குவித்தது.
- ராவல்பிண்டியிலும் அதுபோன்று இங்கிலாந்து அணி குவிக்குமா? என கேள்வி எழுப்பியபோது குழப்பம்.
பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றன. தொடரை தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது.
நேற்று முன்தினம் கடைசி போட்டி தொடர்பாக இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பதில் அளித்தார்.
அப்போது ஒரு செய்தியாளர் முல்தானில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து இன்னிங்ஸ் மற்றம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதேபோல் ராவல்பிண்டி டெஸ்டிலும் இங்கிலாந்து அணி 800-க்கும் அதிகமாக ரன்கள் குவிக்குமா? என கேள்வியை கேட்டார். ஆனால் இந்த கேள்வியை அவரால சரளமான ஆங்கிலத்தில் சரியா முறையில் கோர்த்து கேட்க முடியவில்லை.
இதனால் பென் ஸ்டோக்ஸ்க்கு என்ன கேட்க வருகிறார் என்பது விளங்கவில்லை. மீண்டும் அதே கேள்வியை கேளுங்கள் என்றார். செய்தியளார் அதே கேள்வியை கேட்டார். ஆனால் முந்தைய கேள்வியில் இருந்து வார்த்தைகள் பல மாறியிருந்தன. இப்போதும் செய்தியாளரால் கேள்வியை சரியாக கோர்க்க முடியவில்லை. இடையில் நிறுத்தி நிறுத்தி பேசினார். இந்த முறையில் பென் ஸ்டோக்ஸ்க்கு புரியவில்லை.
— صالح (@salehhh1997) October 23, 2024
என்னடா சோதனை இது... என நினைத்த பென் ஸ்டோக்ஸ், தாடையில் கை வைத்துக் கொண்டு, மீண்டும் ஒருமுறை உங்கள் கேள்வியை கேட்கவும் என்றார். இந்த முறையில் செய்தியாளர் அந்த கேள்வியை கேட்டார். பென் ஸ்டோக்ஸ் உன்னிப்பாக கவனித்தார்.
இந்த முறை ஓரளவிற்கு கேள்வியை புரிந்து கொண்ட பென் ஸ்டோக்ஸ் "அப்படி நடந்தால் சிறப்பாக இருக்கும்" என பதில் அளித்தார்.
இந்த வீடியோ தற்போது இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- இரு அணிகளும் நேற்று கார்டிப்பில் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் மோத இருந்தன.
- 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ஓவலில் நடக்கிறது.
கார்டிப்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் நேற்று கார்டிப்பில் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் மோத இருந்தன.
ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் அப்போட்டி கைவிடப்பட்டது. இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ஓவலில் நடக்கிறது.
- டி20 உலக கோப்பை வரலாற்றில் இரு அணிகளும் மூன்றாவது முறையாக மோத உள்ளன.
- இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்ப்பு
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8-வது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டி20 உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3-வது முறை. கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலக கோப்பை லீக் சுற்றில், பாகிஸ்தான், இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த போதும், கோப்பையை வென்றது. 2010-ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த டி20 உலக கோப்பை சூப்பர் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பௌலிங்கில் சிறப்பாக செயல்படுவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 68 ரன்கள் விளாசினார்.
கராச்சி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடி முகமது ரிஸ்வான் -பாபர் ஆசம் ஜோடி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளம் அமைத்தது. முகமது ரிஸ்வான் 68 ரன்களும், பாபர் அசாம் 31 ரன்களும் சேர்த்தனர். இப்திகார் அகமது 28 ரன்கள், ஹைதர் அலி 11 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து தரப்பில் லூக் வுட் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆதில் ரஷித் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்