என் மலர்
நீங்கள் தேடியது "Paladinni Bats"
- அரண்மனை வளாகத்தில் மரங்களில் ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் தங்கியுள்ளது.
- பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அதற்கு தேவையான மரங்களை வளர்க்க வேண்டும்.
தஞ்சாவூர்:
பறவை இனத்திலும் விலங்கு இனத்திலும் சேராத பாலூட்டும் இனமாக உள்ளது வவ்வால்கள்.
வவ்வால்களில் ஆயிரக்கணக்கான ரகங்கள் இருந்தாலும் தற்போது வரை 1200 வகையான வவ்வால்கள் உள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
வவ்வால்கள் பல வகையில் இருந்தாலும் அவை பெரும்பாலும் பழங்கள், பூக்கள், பூச்சிகள் உள்ளிட்டவற்றை உண்டு வாழ்ந்து வருகின்றன.
இயற்கையை பாதுகாப்பதிலும் வேளாண்மை பாதுகாப்ப திலும் மிகப்பெரிய பங்கு வகிக்கக்கூடியது.
இதில் பழம் தின்னி வவ்வால்கள் இயற்கையின் மிகப் பெரும் நண்பனாக விளங்குகிறது.
பழங்களை பறிக்கும் வவ்வால்கள் அவற்றை அங்கே உண்ணுவது கிடையாது.
வேறு இடத்திற்கு வந்து உண்பதால் அந்த இடத்தில் சிந்தும் விதைகள் மூலம் ஆயிரக்கணக்கான புதிய மரங்கள் உருவாகின்றன.வவ்வால் இனம் அழிந்தால் காடுகள் அழியும்.
காடுகள் அழிந்தால் வவ்வால் இனம் அழியும் அப்படி ஒரு ஒற்றுமையுடன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வரும் இனங்களில் வவ்வாலும் ஒன்று.
தஞ்சாவூரின் மையப் பகுதியில் நாயக்க மன்னர் காலத்திலும், அதனைத் தொடர்ந்து மராட்டியர் மன்னர் காலுத்திலும் கட்டப்பட்ட அரண்மனையைச் சுற்றிலும் மிகப்பெரிய சுற்றுச்சுவர் உள்ளது.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரண்மனை வளாகத்தில் 7 அடுக்குகளைக் கொண்ட கோயில் போன்ற கட்டுமான தோற்றத்தை ஏற்படுத்தும் ஆயுத கோபுரம், மணிகோபுரம் ஆகியவை உள்ளது.
இவைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே பலவகையான மரங்களும் உள்ளது.
இந்த மரங்களில் பல ஆயிரக்கணக்கான பழந்தின்னி வவ்வால்கள் கடந்த பல ஆண்டுகளாக தங்கியுள்ளது.
பகலில் மரங்களில் தொங்கியபடி ஓய்வெடுக்கும் வவ்வால்கள் மாலைப் பொழுதில் அப்பகுதியில் சாரை சாரையாக பறந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவு வரை உணவு தேடி மீண்டும் அதே இடத்திற்கு பகலில் வருகிறது.
இந்த அரண்மனை வளாகம் முழுவதும் கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மரங்கள் இருந்த நிலையில் தற்போது மரங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.
இதனால் வவ்வால்களின் எண்ணிக்கையும் பாதியாக குறைந்துள்ளது.
அழிவின் விளிம்பில் உள்ள பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க அதற்கு தேவையான மரங்களை வளர்க்க வேண்டும்.
அது இருக்கும் இடத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று பறவைகள் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.