என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Pali"
- ஜெயச்சந்திரன் கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார்.
- சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தென்மங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 50). கரடிப்பாக்கத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி செய்தார். இவர், இவரது உறவினர் ரவிச்சந்திரன் (49) என்பவருடன் விழுப்புரம் சென்று, நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடந்து தென்மங்கலத்திற்கு செல்ல சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
இதில் ஜெயச்சந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் சிவக்குமார் (30), அவரது மனைவி ஆனந்தி (25) ஆகியோர் படுகாயமடைந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜெயச்சந்திரன் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணியளவில் இறந்து போனார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பழனிசாமி சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் பணியாற்றினார்.
- ராசாப்பாளையம் அருகில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மனப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரை என்கிற பழனிசாமி (வயது 55). மின்வாரிய அதிகாரி. இவர் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் பணியாற்றினார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கண்டரக்கோட்டையில் இருந்து பண்ருட்டிக்கு சென்றார்.ராசாப்பாளையம் அருகில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விரைந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்தோஷ்குமார் (28), விவசாயி, இவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
- அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிழக்குத் தெரு சேர்ந்தவர்மாணிக்கவேல் இவரது மகன் சந்தோஷ்குமார் (28), விவசாயி,இவர்,நேற்று இரவு 7 மணிக்கு நடுக்குப்பம் 4 முனை ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியதுங இதில் சந்தோஷ்குமாருக்கு நெற்றியில் பலத்த அடிபட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர்புதுவை பீம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்