என் மலர்
நீங்கள் தேடியது "Palm Climbing Workers"
- தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுக்கிறது.
- பனைத் தொழில் என்பது ஆண்டுக்கு 6 மாத காலம் மட்டுமே நடைபெறும்.
தென்காசி:
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு மீனவர்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுக்கிறது. இதே போல பனை தொழிலாளர்களுக்கும் கொடுக்க வேண்டும். பனைத் தொழில் என்பது ஆண்டுக்கு 6 மாத காலம் மட்டுமே நடைபெறும். மீதமுள்ள 6 மாத காலம் தொழில் இன்றி அவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். மீனவர்களுக்கு 61 நாட்கள் மட்டுமே மீன்பிடி தடைகாலம் இருந்து வருகிறது. ஆனால் பனை தொழிலாளர்களுக்கு 180 நாட்களுக்கு மேல் தொழில் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. ஏற்கனவே பனை தொழில் அழிந்து வருகிறது.
தமிழக அரசு பனை வளர்ப்பதற்கும், பனையைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கும் ஒதுக்கீடு செய்த கோடிக்கணக்கான ரூபாயை பனைத் தொழிலை மேம்படுத்துவதற்கும், எந்திரங்கள் மூலமாக பனையில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை உணவு பொருட்களாக தயாரிப்பதற்கும் எந்திரங்களை கண்டுபிடிக்க நிதி ஒதுக்கீடு செய்தால் பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளி பிறக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆறு மாத காலம் மட்டுமே தன் தொழிலை செய்து மீதி 6 மாத காலம் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற அனைத்து பனை தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு மீனவர்களுக்கு வழங்கப்படுவதை போல மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் வீதம் நிவாரணமாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.