என் மலர்
நீங்கள் தேடியது "Panakudi"
- ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டார பெருங்குளம் கிட்டத்தட்ட 250 ஏக்கர் பாசன பகுதி பெறக்கூடிய குளமாகும்
- தற்போது வரை தண்ணீர் வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டார பெருங்குளம் கிட்டத்தட்ட 250 ஏக்கர் பாசன பகுதி பெறக்கூடிய குளமாகும். இந்த குளத்திற்கு கொடுமுடி அணையிலிருந்து கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடபட்டது. தற்போது வரை 27 நாள் ஆகியும் இதுவரை தண்ணீர் வரவில்லை. அதனால் இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்யக்கூடிய விவசாயிகள் விவசாயம் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
மேலும் இந்த தண்ணீர் முதல் குளமான பண்டாரப் பெருங்குளத்துக்கு தான் வழங்க வேண்டும். ஆனால் தற்போது வரை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
மொத்தம் 52 குளங்கள் இருக்கிறது அந்த குளங்களுக்கு வழங்கிய பிறகு கடைசியாக தான் இந்த பண்டார பெருங்குளத்துக்கு தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இது குறித்து ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. ஊடக பிரிவு தலைவர் ராதை காமராஜ் கூறியதாவது :-
பண்டாரபெருங்குளம் ராதாபுரம் பகுதியில் மிகப்பெரிய குளம். இந்த குளத்தை நம்பி கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளது.
இந்த குளத்திற்காகவே கொடுமுடி அணையில் இருந்து வடமலையான் கால்வாய் என்ற தனி கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. நாளடைவில் இந்த குளம் புறக்கணிக்கப்பட்டு விட்டது.
மேலும் புதிதாக 20- க்கும் மேற்பட்ட குளங்கள் இந்த வடமலையான் கால்வாயில் சேர்க்கப்பட்டு அந்த குளங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் பண்டார பெருங்கு ளத்திற்கு வரவேண்டிய தண்ணீர் வழங்கப்படாமல் கிட்டத்தட்ட 27 நாட்க ளாகிறது.
கடைமடை குளத்திற்கு தான் முதலில் தண்ணீர் வழங்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் உத்தரவு. தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் வழங்க கோரி மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை.
குளத்தின் மறுகால் மற்றும் மதகுகள் உடைந்து முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குளத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை போர் கால அடிப்படையில் உடனடியாக வழங்க வேண்டும். உடைந்த மறுகால் மற்றும் மதகுகளை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தோட்டத்தில் சிறுத்தை புலியின் கால்தடம் இருந்தது.
- வெகுநேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அரிராம் புகார் தெரிவித்து உள்ளார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அடுத்த ரோஸ்மியா புரத்தை சேர்ந்தவர் அரிராம். இவருக்கு சொந்தமான தோட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இதில் விவசாயம் பார்த்து வருவதோடு 30-க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது தோட்டத்தில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று வழக்கம் போல அதிகாலையில் தோட்டத்திற்கு அரிராம் சென்றார்.

சிறுத்தை புலி கால் தடம்
அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை சிறுத்தை புலி கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. மேலும் 2 ஆடுகளை அது தூக்கி சென்றதும் தெரியவந்தது. இவரது தோட்டத்தில் சிறுத்தை புலியின் கால்தடம் இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் வெகுநேரமாகியும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என அரிராம் புகார் தெரிவித்து உள்ளார்.
- தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு.
- வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
பணகுடி:
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி பிரசித்தி பெற்றது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருவது வியப்பை அளித்து வருகிறது.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுத்தது அந்த காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது. நாகரிக காலத்தில் அந்த வழக்கம் மறைந்து போனாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றளவும் இளவட்டக் கல்லைச் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 55, 60, 98, 114 மற்றும் 129 கிலோ எடை கொண்டதாகவும் முழு உருண்டையாக வழுக்கும் தன்மை கொண்டதாக எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக்கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.
இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழுமாறு செய்யவேண்டும்.

தமிழரின் உடல் பலத்திற்கும், வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை காணமுடிகிறது . இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம் பெண்களும் தங்களை தயார்படுத்தி விளையாடினர். இப்போட்டியில் உரலை ஒரு கையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற்றது.
இதில் 55 கிலோ இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜகுமாரி என்ற பெண்மணி 23 முறை கழுத்தை சுற்றி முதலிடத்தை பிடித்தார். 2-வது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.

ஆண்களுக்கான 98 கிலோ இளவட்ட கல்லை கழுத்தை சுற்றி போடும் போட்டியில் முதல் பரிசை விக்னேஸ்வரனும் 2-வது பரிசை பாலகிருஷ்ணனும் தட்டி சென்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் பொன்னாடை அணிவித்து கவுர விக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடலிவிளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள நெருஞ்சி காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி பவளஜோதி (வயது 30). கணவன்-மனைவிக்கிடையே குடும்பத்தகராறு காரணமாக அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 4-ந்தேதி அவர்க–ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுரேஷ் மண்எண்ணையை எடுத்து பவளஜோதி மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து அலறித்துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பவளஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புன்னியவாளன்புரத்தில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- பொன்ராஜ் என்பவரது கடையில் போலீசார் சோதனை செய்தனர்.
நெல்லை:
பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வதாஸ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புன்னியவாளன்புரத்தில் உள்ள ஒரு கடையில் புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பொன்ராஜ்(வயது 55) என்பவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 26 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமை–யாளரான பொன்ராஜை கைது செய்தனர்.
- பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் என்ற துரை. இவரது மனைவி லதா(வயது 41).
- கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நெல்லை:
பணகுடி அருகே உள்ள சிதம்பராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ் என்ற துரை. இவரது மனைவி லதா(வயது 41).
காமராஜ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் தான் சம்பாதித்த பணத்தில் ரூ.12 லட்சத்திற்கு கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வந்துள்ளார்.
ஆனால் அதில் பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்பதால் லதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனம் உடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பழவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று லதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் பாரத் ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
- விழாவில் மாணவ - மாணவிகளின் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது.
பணகுடி:
பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் பாரத் ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது.
மாணவர்களுக்கு விளக்கம்
பள்ளியின் தாளாளர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிர்வாகி ஜெயராஜ் கலந்து கொண்டார்.
விழாவில் மாணவ - மாணவிகளின் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் லாரன்ஸ் பேசும்போது, ஆசிரியர் தினம் கொண்டாடுவதின் நோக்கம் குறித்தும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்குரிய வழிமுறைகளை குறித்தும் எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் ஜெயபரமேஷ், துணை முதல்வர் சித்ரா மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் செய்திருந்தனர்.
- பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த கொத்தன்குளத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.
- ராஜசேகரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.5,800 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்
நெல்லை:
பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த கொத்தன்குளத்தில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பாரில் புதுமனை செட்டிகுளத்தை சேர்ந்த ராஜசேகர்(வயது 48) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
பணம் பறிப்பு
நேற்று முன்தினம் இரவு அவர் பணியில் இருந்தபோது அங்கு 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் ராஜசேகரை தாக்கி அவரிடம் இருந்து ரூ.5,800 பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இதுதொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் கிடைத்த அடையாளங்களை வைத்து தேடி பார்த்ததில் குமரி மாவட்டம் மண்டைகாடு பாலன்விளையை சேர்ந்த வேல்முருகன்(36), லீபுரத்தை சேர்ந்த வைகுண்டராஜன்(32) ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
கைது
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து பணம் மற்றும் செல்போனை மீட்டனர். கைதான வேல்முருகன் மீது குளச்சல், மண்டைகாடு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
- ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த வைகுண்ட மணி என்பவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- கணவன்-மனைவியி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பணகுடி:
பணகுடியை அடுத்த ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பர வடிவு. இவரது மகன் வைகுண்ட மணி. இவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த சுபேகா என்ற பெண்ணை கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவியி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வைகுண்ட மணி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில வாரங் களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் தங்கியிருக்கும் சுபேகாவிடம், தன்னுடைய குழந்தையை காட்டும்படி வைகுண்ட மணி கூறி உள்ளார்.
ஆனால் சுபேகா குழந்தையை காட்ட மறுத்து விட்டதாக கூறப் படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.
- காவல்கிணறு நெடுஞ்சாலையில் சென்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
- விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் அந்த நபர் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.