என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchangam"

    • இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்.
    • சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

    காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் 2026-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள் பாலித்து வருகிறார்.

    இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும். இதில் நாட்டில் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வது வழக்கம்.

    சனிப்பெயர்ச்சி விழா 2025 மார்ச் மாதம் நடப்பதாக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனால் இக்கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவில்லை.

    இந்த நிலையில் வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதி காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    இதனை நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் முன்னிலையில் சிவச்சாரி யார்கள் பஞ்சாங்கம் வாசித்து அறிவித்தனர்.

    இதில் சிவாச்சாரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.
    • உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் கோவிலின் சுவாமி சன்னதி எதிரே உள்ள சோமாஸ்கந்தர் சன்னதி அருகே பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் குருக்கள் சிவமணி, 2025 ஏப்ரல் 14-ந்தேதி முதல் 2026 ஏப்ரல் 13-ந்தேதி வரை பஞ்சாங்கத்தின் முக்கிய தகவல்கள் குறித்து வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-

    மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும். அந்நிய நாடுகளின் முதலீடுகள் அதிக அளவில் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளது.

    தங்கம், வெள்ளி விலை இன்னும் உச்சத்தை தொடும். மருந்து பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். நிலக்கரி, இரும்பு, சுரங்கங்கள், பெட்ரோலிய கிணறு போன்றவற்றில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.

    ரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும். இந்த ஆண்டு மழை அதிகமாகவே இருக்கும். விவசாயம் நன்றாக இருக்கும். அரசியல் கட்சி தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்லைன் வர்த்தகம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறை பின்னடையும். உலக அளவில் புதிய நோய் தாக்குதல் வரலாம்.

    வெளிநாடுகளில் சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்படுவர். இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் கடும் பாதிப்பு ஏற்படும். மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும்.

    விளையாட்டு துறையில் இந்தியா தங்கப்பதக்கம் பெறும். எல்லையில் பதற்றம் இருக்கும். உலகத்தில் ஆங்காங்கே மத கலவரம், போர் அபாயம் இருக்கும். உலக அளவில் உணவுப்பொருட்களின் உற்பத்தி குறையும். அணு ஆயுத உற்பத்தி அதிகரிக்கும் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ளன.

    இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்படுமா? மீனாட்சி அம்மன் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் தகவல்

    தமிழ் புத்தாண்டையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று கோவில் ஸ்தானிக பட்டர் ஹாலஸ், வாக்கிய பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன்னிலையில் வாசித்தார். அதில், "விசுவாவசு வருடத்தில் விவசாயம் செழிக்கும். தங்க நகை வியாபாரம் அதிகரிக்கும். நாட்டில் பதவி மாற்றம், ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தர்மகாரியங்கள், தவங்கள் நடைபெறும். அதிக மழை, வெயில், குளிர் மற்றும் தீ விபத்துகளும் ஏற்படும். புதிய வரிவிதிப்பின் மூலம் விலைவாசி உயரும். அதனால் நாட்டில் போராட்டங்கள் ஏற்பட்டு, அரசியல்வாதிகளால் அணி மாற்றம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும்.
    • பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமேசுவரம் :

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே வைத்து பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அதன்படி நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் பஞ்சாங்கம் உள்ளிட்ட பஞ்சாங்கங்கள் வாசிக்கப்பட்டன. சஞ்சீவி பட்டர் வாசித்தார்.

    பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-

    இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும். இந்தியா தனது சொந்த முயற்சியில் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பல அரிய சாதனைகளை படைக்கும். வங்கிகளில் திடீர் பண பற்றாக்குறை ஏற்பட்டு நிவர்த்தி ஆகிவிடும். பணவிரயம் ஏற்படும். உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு பஞ்சமின்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பல தங்கப்பதக்கங்களை பெறுவர்.

    ஜவ்வாது, சதுரகிரி, மேகமலை, மூணாறு போன்ற பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும். இந்த ஆண்டு கம்பளி, நூல் ஆடை, ஆபரணங்கள் விலை உயரும். பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். கோழிகளுக்கு புதிய வகை நோய் உருவாகும். இதனால் கோழிகள் இறக்க நேரிடும். சந்தைகளில் கோழிகளின் விலை உயரும்.

    புதிய வகை விஷக்காய்ச்சல் அதிகமாக பரவும். அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களுக்கு பல நெருக்கடிகள் உண்டாகும். ரசாயன பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். சன்னியாசிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் பல தொல்லைகள் ஏற்படும்.

    மழை அதிகளவு பெய்து மழை நீரானது ஆற்று வழியாக கடலில் கலக்க நேரிடும். குறிப்பாக வட மாநிலங்கள் மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படும். பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும். பல நிறுவனங்களை அரசாங்கம் தனியார்மயமாக்க நேரும். மின்சார பொருட்களின் விலை உச்சத்தை தொடும். பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்களும் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன.

    பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.. இந்த பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியில் கோவிலின் ஆய்வாளர் பிரபாகர், பேஷ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-4 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி இரவு 11.11 மணி வரை

    பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: சித்திரை விடியற் காலை 4.34 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்த அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். மதுரை ஆளவாய் அண்ணல் மாணிக்கம் விற்றருளிய லீலை. விருதுநகர் சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் வீதி உலா. குறுக்குத்துறை முருகப் பெருமான் பவனி. சோழசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-செலவு

    கடகம்-உதவி

    சிம்மம்-உறுதி

    கன்னி-பணிவு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-அமைதி

    தனுசு- உயர்வு

    மகரம்-முயற்சி

    கும்பம்-பொறுமை

    மீனம்-நட்பு

    • முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-5 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி இரவு 11.26 மணி வரை

    பிறகு சப்தமி

    நட்சத்திரம்: சுவாதி விடியற்காலை 5.23 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை

    மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய காட்சி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. விருதுநகர் சுவாமி கைலாச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-சாந்தம்

    கடகம்-களிப்பு

    சிம்மம்-பெருமை

    கன்னி-வெற்றி

    துலாம்- பிரீதி

    விருச்சிகம்-ஆர்வம்

    தனுசு- கீர்த்தி

    மகரம்-வரவு

    கும்பம்-வாழ்வு

    மீனம்-ஆர்வம்

    • திருவல்லிக்கேணியில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-6 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி இரவு 11.09 மணி வரை

    பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: விசாகம் காலை 5.40 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று வாஸ்து நாள் (காலை 7.23 மணி முதல் 7.59 மணி வரை வாஸ்து செய்ய நன்று). திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை சோமசுந்தரர் உலவாய்க்கோட்டையருளிய திருவிளையாடல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சனம். குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி. திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் பவனி. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தேர்ச்சி

    ரிஷபம்-தடை

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-ஆக்கம்

    சிம்மம்-பாசம்

    கன்னி-வாழ்வு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- பாராட்டு

    மகரம்-பெருைம

    கும்பம்-அமைதி

    மீனம்-கடமை

    • திருவல்லிக்கேணியில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்
    • மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, விருஷபாரூட தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-7 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி இரவு 10.23 மணி வரை

    பிறகு நவமி

    நட்சத்திரம்: அனுஷம் காலை 5.30 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை

    மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    மதுரை சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, விருஷபாரூட தரிசனம். சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை. குறுக்குத்துறை முருகப் பெருமான் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. குலச்சிறை நாயனார் குருபூஜை, திருப்பதி ஸ்ரீ ஏழுமலை யப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபி ஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-தேர்ச்சி

    மிதுனம்-யோகம்

    கடகம்-நலம்

    சிம்மம்-சிறப்பு

    கன்னி-நன்மை

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- முயற்சி

    மகரம்-சோதனை

    கும்பம்-திறமை

    மீனம்-பணிவுபஞ்சாங்கம்

    • இன்று வரலட்சுமி விரதம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-8 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி இரவு 9.09 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: கேட்டை விடியற்காலை 4.53  வரை பிறகு மூலம்.

    யோகம்: மரண/அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று வரலட்சுமி விரதம், திருச்சானூர் ஸ்ரீபத்மாவதி தாயார் திருமஞ்சன சேவை, சகஸ்ரநாம அர்ச்சனை. மதுரை சோமசுந்தரர் வளையல் விற்றருளிய காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் பவனி. விருது நகர் சுவாமி, அம்பாள் விருஷபாரூட தரிசனம், ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    நாளைய ராசிபலன்

    மேஷம்-நிம்மதி

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-கடமை

    கடகம்-வாழ்வு

    சிம்மம்-இன்பம்

    கன்னி-பாசம்

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-நிறைவு

    தனுசு- சலனம்

    மகரம்-கீர்த்தி

    கும்பம்-சிந்தனை

     மீனம்-போட்டி

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்
    • குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-9 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி இரவு 7.32 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 3.54 மணி வரை பிறகு பூராடம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    குச்சனூர் சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை சோமசுந்தர பெருமான் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல். தென்காசி, கடையம் தலங்களில் தெப்போற்சவம், குங்கிலியக்கலய நாயனார் குருபூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மாற்றம்

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-பிரீதி

    கடகம்-மேன்மை

    சிம்மம்-உழைப்பு

    கன்னி-பரிசு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-நற்செய்தி

    தனுசு- உண்மை

    மகரம்-கடமை

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-பண்பு

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேவை.
    • மதுரை சொக்கநாதர் புட்டுத் திருவிழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-10 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: ஏகாதசி மாலை 5.38 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.39 மணி வரை பிறகு உத்திராடம்

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னாருடன் எழுந்தருளல். மதுரை சொக்கநாதர் புட்டுத் திருவிழா, சுவாமி-அம்பாள் விருஷபாரூடராய் தரிசனம். குறுக்குத்துறை முருகப் பெருமான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு திருமஞ்சன சேைவ.

    நாளைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-பாராட்டு

    கடகம்-நன்மை

    சிம்மம்-களிப்பு

    கன்னி-வெற்றி

    துலாம்- ஊக்கம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- நிறைவு

    மகரம்-சுகம்

    கும்பம்-சாந்தம்

    மீனம்-பயணம்

    • சிவன் கோவில்களில் சுவாமி ரிஷப வாகனத்தில் பவனி.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-11 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி பிற்பகல் 3.29 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 1.12 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை

    மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று பிரதோஷம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். மதுரை சுந்தரேசுவரர் விறகு விற்றருளிய காட்சி. விருதுநகர் சொக்கநாதர் ரதோற்சவம், ஏகாந்த சேவை. குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி. திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர், திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை சமேத மகாலிங்க சுவாமி, திருவொற்றியூர் தியாகராஜர் ரிஷப வாகனத்தில் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இரக்கம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-இன்பம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-பிரீதி

    கன்னி-விவேகம்

    துலாம்- பரிசு

    விருச்சிகம்-சலனம்

    தனுசு- அனுகூலம்

    மகரம்-பெருமை

    கும்பம்-தேர்ச்சி

    மீனம்-பாசம்

    • வடபழனி, திருப்போரூர் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
    • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்டத்தேரில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-12 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திரயோதசி நண்பகல் 1.10 மணி வரை பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: திருவோணம் இரவு 11.35 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைக்கு ஒணம் பண்டிகை. ருக் உபாகர்மா. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்டத்தேரில் பவனி. குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி. உப்பிலியப்பன் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-அமைதி

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-உயர்வு

    கடகம்-லாபம்

    சிம்மம்-வரவு

    கன்னி-பிரீதி

    துலாம்- நட்பு

    விருச்சிகம்-செலவு

    தனுசு- நிறைவு

    மகரம்-பக்தி

    கும்பம்-வெற்றி

    மீனம்-மாற்றம்

    ×