search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pandakal mukurtam"

    • நாளை காலை நடக்கிறது
    • அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பல்வேறு திரு விழாக்கள் நடைபெறுகிறது.

    இதில் முக்கிய திருவிழாவாக 10 நாட்கள் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா திகழ்கிறது. 10 நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர்.

    10-ம் நாள் அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் 2668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

    மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் தீப தரிசனம் காண தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

    இந்து ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 14 -ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    கார்த்திகை தீபத்திரு விழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி நாளை காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் துலா லக்கினத்தில் நடைபெற உள்ளது.

    பந்தக்கால் நடும் நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை காலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

    பின்னர் கோவில் ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் நடும் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெறும்.

    பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணா மலையார் அருள்பெற வருமாறு கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், உறுப்பினர்கள் டிவிஎஸ் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், டாக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ×