search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pangudi"

    • வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ -மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
    • 33 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் படித்தபோது நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர்.

    பணகுடி:

    வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப்பள்ளியில் 1989-90-ம் ஆண்டு பிளஸ்- 2 வகுப்பில் பயின்ற மாணவ-மாணவிகளின் 33 ஆண்டுகளை கடந்த சந்திப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

    வெளிநாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மாணவ -மாணவிகள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 33 ஆண்டு களுக்கு பிறகு பள்ளியில் படித்த போது நடந்த நிகழ்வுகளை பரிமாறி கொண்டனர். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக பாடல் பாடியும், முன்னாள் மாணவியின் மகள் பரத நாட்டி யம் ஆடியும் சந்திப்பு நிகழ்ச்சியை வெகுவாக கவர்ந்தனர்.

    • முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • டாக்டர் ஜோசப் சகாயம் மருத்துவ குழுவினரால் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி மற்றும் நாகர்கோவில் ஜோசப் சகாயம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பொது மருத்துவ முகாம் சிறப்பு நிலை பேரூராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. முகாமில் பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி தமிழ்வாணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சகாய புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.டாக்டர் ஜோசப் சகாயம் மருத்துவ குழுவினரால் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது இ.சி.ஜி, ரத்த பரிசோதனைகள் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது. கவுன்சிலர் முகமது அலீம் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
    • நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடியில் பா.ஜனதா சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மேலும் பாரத பிரதமரின் மன்கீபாத் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    அப்போது மத்திய அமைச்சர் வி.கே.சிங் நிருபர்களிடம் கூறுகையில், நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் கட்டணம் செலுத்தாமல், இலவசமாக தங்களது வாகனங்களில் செல்லலாம் என்றார்.

    இதில் பா.ஜனதா தெற்கு மாவட்ட தலைவர் தமிழ் செல்வன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் செல்வக்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×