search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panguni month full moon puja"

    • சிறப்பு தீபாராதனை நடந்தது
    • பக்தர்கள் கிரிவலம் சென்றனர்

    வேலூர்:

    வேலூர் வேலப்பாடி பகவதி மலையடிவாரத்தில் பழமை வாய்ந்த வேப்பங்காடு பகவதி அம்மன் பன்னபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் பங்குனி மாத பவுர்ணமியை யொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதில், பகவதி அம்மா கலந்து கொண்டு அம்மன், சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, அலங்காரம் செய்து தீபாராதனை காண்பித்தார்.

    பூஜையில் வேலப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய் தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட் டது. பக்தர்கள் கோவிலை சுற்றி கிரிவலம் வந்து அம்மனை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை தலைவர் தமிழ்புகழேந்தி செய்திருந்தார்.

    ×