search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pannari forest"

    • விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றையானை வழி தவறி ஊருக்குள் நுழைந்தது.
    • சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து குறைந்ததும் வனத்துறையினர் யானையை விரட்டினர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் ஒற்றையானை வழி தவறி ஊருக்குள் நுழைந்தது.

    சத்தியமங்கலம் அடுத்த உக்கரம் கிராமத்தின் வழியாக வந்த யானை வயல்வெளிகளை கடந்து நம்பியூர் காராப்பட்டு, கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒடைய க்குளம், காசிப்பாளையம் பகுதியில் சுற்றியது.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் யானையை விரட்டும் பணியிலும் ஈடுபட்டனர். இதற்காக வனத்துறை சார்பில் 50 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

    பகல் நேரம் என்பதால் யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபடவில்லை. பின்னர் மாலை நேரம் ஆனதும் டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அது வந்த திசையிலேயே மீண்டும் விரட்ட ஆரம்பித்தனர்.

    அப்போது யானை கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றைக் கடந்து சென்றது. யானையை வனத்துறையினர் நேற்று மதியம் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பண்ணாரி வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனால் யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாறி மாறி சென்று வனத்துறையி னருக்கு போக்கு காட்டியது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் யானையை விரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

    சத்தியமங்கலம் மைசூர் சாலையில் போக்குவரத்து குறைந்ததும் வனத்துறையினர் யானையை விரட்டினர். ஒரு வழியாக இரவு 9 மணி அளவில் பண்ணாரி வனப்பகுதிக்குள் யானை சென்றது.

    தொடர்ந்து அந்த யானை மீண்டும் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ×