என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Parasite"
- பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுத்தார்.
- ஆனால், பாராளுமன்றத்திற்குள் மோதலை தேர்வு செய்தார்.
பிரதமர் மோடி நாடாளுமன்ற மக்களவையில் நேற்றுமுன்தினம் பேசும்போது தற்போதைய காங்கிரஸ் ஒட்டுண்ணி. கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் காங்கரஸ் கட்சியின் பொதுசெயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் பாஜக-தான் ஒட்டுண்ணி. பிராந்திய கட்சிகளை சாப்பிட்டது என பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில், அதேபோல் மாநிலங்களவை கூட்டத்தொடரில் இரண்டு குறிப்பிட்ட விசயங்களை பார்த்திருக்க முடியும். ஒன்று இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் புதிய, ஆக்ரோஷம், புத்துயிர் பெற்றது.
அதேவேளையில் பிரதமர் மோடியின் அணுகுமுறை மற்றும் நடத்தையில் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியாததையும் காண முடிந்தது.
பாராளுமன்றத்திற்கு வெளியில் ஒருமித்த கருத்துக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பாராளுமன்றத்திற்குள் மோதலை தேர்வு செய்தார். அங்கே மாற்றத்திற்கான எந்த ஆதாரங்கள் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகளின் புதிய மற்றும் ஆக்ரோஷம், செயல்பாட்டிற்கான ஆதாரங்கள் இருந்தன.
இது கூட்டணி ஆட்சிக்கான அதிகாரம் என்பதையும், மக்களை அழைத்துச் செல்வதற்கான அதிகாரம் என்பதையும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத மற்ற அனைத்துக் கட்சிகளின் பேச்சைக் கேட்பதற்கான ஆணை என்பதையும் அரசாங்கம் உணர்ந்து கொள்ளும் என நம்புகிறோம்.
ஒட்டுண்ணி (பாஜக) மட்டுமே அந்த வார்த்தையை பயன்படுத்த முடியும். நீங்கள் ரெக்கார்டுகளை எடுத்து பார்த்தீர்கள் என்றால், எத்தனை பிராந்திய கட்சிகள் பாஜக-வால் சாப்பிடப்பட்டது என்பது தெரியும்.
இன்று பிஜு ஜனதா தளம். காலநிலை மாற்றத்தை பார்க்க முடியும். மாநிலங்களவையில் இந்தியா கூட்டணியுடனே அவர்கள் நின்றார்கள். ஆகவே, யாரேனும் ஒட்டுண்ணி என்றால் அது பாஜக-தான்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியை மூன்று முறை தொடர்ந்து மக்கள் நிராகரித்துள்ளனர். 2029-ம் ஆண்டிலும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும். 543 தொகுதிகளில் 99-ல் வெற்றிபெற்று 100-க்கு 99 தொகுதிகளை வென்றதுபோல் காங்கிரஸ் மக்களை மக்களை ஏமாற்ற பார்க்கிறது. பாஜக கூட்டணி தோற்றதைபோல் ஒரு தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
13 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடங்கள் கூட கிடைக்கவில்லை. பாஜகவுக்கு நேர் எதிராக நின்ற இடங்களில் 26 சதவீத இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. 1984-க்குப் பிறகு 10 மக்களவை தேர்தலில் ஒருமுறை கூட 250 இடங்கைள தாண்டியது கிடையாது.
தற்போது இருப்பது ஒட்டுண்ணி காங்கிரஸ். கூட்டணி கட்சிகளை ஒட்டி வாழும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. தங்களுக்கு ஆதரவாக இருப்பவர்களை ஒட்டுண்ணி போல உறிஞ்சுகிறது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்ட இடங்களில் எல்லாம் தோல்வி, வாக்கு வங்கி குறைவு. கூட்டணி கட்சி பலத்தை தன் பலமாக காட்ட முயலும் ஒட்டுண்ணி காங்கிரஸ்.
தமிழகம், பீகாரில் ஜூனியர் பார்ட்னராக தேர்தலை எதிர்கொண்டது. 13 மாநிலங்களில் ஜீரோவான காங்கிரஸ் தன்னை ஹீரோவாக காட்டுகிறது.
- ’பாரசைட்’ திரைப்படம் நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது.
- இந்த படத்தில் லீ சுன் கியுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'பாரசைட்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த படத்தில் லீ சுன் கியுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகர் லீ சுன் கியுன் கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான 'லவ்வர்ஸ்' என்னும் சிட்காம் தொடரில் அறிமுகமானார். 2014-ஆம் ஆண்டு இவர் நடித்த 'எ ஹார்ட் டே' திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடைசியாக இந்த ஆண்டு வெளியான 'ஸ்லீப்' என்ற படத்தில் லீ சுன் கியுன் நடித்திருந்தார்.
48 வயதாகும் லீ சுன் கியுன் இன்று (டிசம்பர் 27) சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கில் தனது காரின் உள்ளே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மரணம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லீ சுன் கியுன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது.
- ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது.
மடத்துக்குளம் :
உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் அதிக அளவில் கரும்பு சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் இடைக்கணுப் புழுக்களால் பெருமளவு சேதம் ஏற்படுகிறது. இந்த இடைக்கணுப் புழுக்களை ரசாயன மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அதேநேரத்தில் டிரைக்கோடிரெம்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்த முடிகிறது.
இந்த ஒட்டுண்ணிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மாவட்டம் தோறும் ஒட்டுண்ணி உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்துக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி மையம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் உள்ள பழைய வேளாண்மைத்துறை அலுவலக கட்டிடத்தில் உள்ளது.
இந்த மையத்தில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு ஒட்டுண்ணி உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இந்த உற்பத்தி மையத்தில் தற்காலிகப் பணியாளர் மூலம் உற்பத்தி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-
இங்கு உற்பத்தி செய்யப்படும் டிரைக்கோடெர்மா கைலோனிஸ் என்ற ஒட்டுண்ணி மூலம் கரும்பில் இடைக்கணுப் புழு மற்றும் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்த முடியும்.அட்டைகளில் ஒட்டி வழங்கப்படும் இந்த முட்டைகளை கரும்பின் சோகையில் கட்டி விட வேண்டும். ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடியில் 2.5 சிசி அளவில் ஒட்டுண்ணி அட்டைகளை கட்டினால் போதுமானது. ஒரு சிசி என்பது 100 முட்டைகள் அடங்கிய தொகுப்பு ஆகும்.
இந்த அட்டைகளை மாலை நேரத்தில் வயலில் கட்ட வேண்டும். கண்டிப்பாக குறைந்த பட்சம் ஒரு வாரத்துக்கு எந்தவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தெளிக்கக் கூடாது. இந்த முட்டைகளிலிருந்து வெளி வரும் சிறிய ரகக்குழவி இடைக்கணுப் புழு, தண்டு துளைப்பான் போன்றவற்றின் முட்டைகளை அழிக்கிறது. இதனால் அவற்றின் இனப்பெருக்கம் தடைப்பட்டு முழுமையாக கட்டுப்படுத்தப்படுகிறது. இதுபோல பருத்தியில் காய்ப்புழு, நெல்லில் இலைமடக்குப்புழு ஆகியவற்றையும் இந்த ஒட்டுண்ணி மூலம் கட்டுப்படுத்த முடியும். இதுதவிர கத்தரி, வெண்டை போன்ற காய்கறிப்பயிர்களிலும் புழுக்களைககட்டுப்படுத்த இந்த ஒட்டுண்ணியைப்பயன்படுத்தலாம்.
தற்போது ஒட்டுண்ணி உற்பத்திக்காக வேளாண்மை பல்கலைக்கழகத்திலிருந்து கார்சேரா அந்துப்பூச்சியின் முட்டைகள் பெறப்பட்டு அவற்றை கம்பு, நிலக்கடலை, ஈஸ்ட் ஆகியவை அடங்கிய கலவையில் இட்டு மூடி வைத்து இனப்பெருக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அந்துப்பூச்சிகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் கருமுட்டைகள் அழிக்கப்பட்டு அதில் ஒட்டுண்ணிகள் வளர்க்கப்படுகின்றன. பின்னர் இந்த முட்டைகள் அட்டைகளில் ஒட்டப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகிக்கப்படும். இவ்வாறு வேளாண்துறையினர் கூறினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்