என் மலர்
நீங்கள் தேடியது "parineeti chopra"
- பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.
கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு மணிநேரமும் 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர். அவ்வகையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக இந்தியா மாறி வருவதாக புள்ளிவ்விரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார்.
அதில், உங்கள் வீட்டு பெண்களை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று சொல்வதை விடுத்து, உங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள். அப்பா, அண்ணன், கணவன், நண்பன் என அனைவருக்கும் பெண்களை மதிக்க சொல்லிக் கொடுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்கிறது.
- உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மம்தா பானர்ஜி கெடு விதித்துள்ளார்.
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பெண் பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட பிறகு அவருடன் சஞ்சய்ராய் உல்லாசமாக இருந்துள்ளான். வாக்குமூலத்திலும் இதை அவன் தெரிவித்துள்ளான்.
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கெடு விதித்துள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்திற்கு பிரபல நடிகை பரினீதி சோப்ரா காட்டமான கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "உங்களுக்கு படிப்பதற்கு அத்தனை கடினமாக இருந்தால், அவளுக்கு எப்படி இருந்திருக்கும் என்று எண்ணி பாருங்கள்? அருவருப்பாகவும், பயங்கரமாகவும் உள்ளது. அவனை அவனது அந்தரங்க உறுப்பில் தொங்கவிட்டு கொன்றுவிடுங்கள்," என குறிப்பிட்டுள்ளார்.
- பரினிதி சோப்ரா -ராகவ் சத்தாவின் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
- இதற்காகவே பிரபலமான சமையல் கலைஞர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
நடிகை பரினிதி சோப்ரா, ராகவ் சத்தா இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு அது தொடர்பான நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த திருமணத்தில் கரண் ஜோகர்,சானியா மிர்சா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். திருமண நிகழ்ச்சியில் சிறப்பு உணவு வகைகள் பரிமாறப்பட இருக்கின்றன. இதற்காகவே பிரபலமான சமையல் கலைஞர்கள் அழைக்கப்பட இருக்கிறார்கள்.
ராகவ் சத்தா -பரினிதி சோப்ரா
இந்த திருமண நிகழ்வை வழக்கம்போல் பிரபலமான ஓடிடி தளம் ஒளிபரப்ப உரிமம் கேட்டு வருகிறது. ஆனால் பரினிதி சோப்ரா தரப்பில் நண்பர்களுக்கு பலத்த கெடுபிடிகளை போடநேருமே என்று யோசிப்பதாக கூறப்படுகிறது. நீண்டநாள் காதலர்கள் திருமணத்தில் இணைவதையடுத்து பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.