என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » parotta master suicide
நீங்கள் தேடியது "parotta master suicide"
மதுகுடிக்க கூடாது என்று மனைவி திட்டியதால் மனமுடைந்த புரோட்டா மாஸ்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முருகன் (வயது 57). இவர் சேலத்தில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால், விடுமுறையில் வீட்டுக்கு வந்து இருந்தார். இவருக்கு தினசரி மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால், நேற்று வீட்டில் இருந்தபோது மதுகுடிக்க போவதாக கூறியுள்ளார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், மதுகுடிக்க கூடாது என்று அவரது மனைவி லட்சுமி, சத்தம் போட்டுள்ளார். இதில் மனம் உடைந்த முருகன், நேற்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
X