என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parotta"

    • நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் உடலுக்கு நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு.
    • பரோட்டா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    மக்கள் விரும்பி உண்ணும் உணவாகவும், அதே நேரம் அதிக பழிச்சொல்லுக்கு உள்ளாகும் உணவாகவும் இருப்பது, பரோட்டா. தெரு ஓர கடை முதல் `பைவ் ஸ்டார்' ஓட்டல் வரை பலவிதமான சுவைகளில் ருசிக்கப்படும் பரோட்டா மீது மூன்றுவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

    ஒன்று: பரோட்டா மைதாவை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. அதில் நார்ச்சத்து இல்லை.

    இரண்டு: போஸ்டர் ஒட்டும் பசைப் பொருள் போன்றுதான் மைதாவை குழைத்து பரோட்டா தயாராகிறது. அதனால் அது குடலின் தசைச்சுவர்களில் ஒட்டிக்கொள்ளும்.

    மூன்று: பரோட்டா செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் ஜீரண கட்டமைப்புகள் நெருக்கடிக்குள்ளாகும்.

    * மைதாவில் நார்ச்சத்து இல்லையா?

    மைதாவில் நார்ச்சத்து இருக்கிறது. நார்ச்சத்தில் நீரில் கரைபவை, நீரில் கரையாதவை என இரண்டு வகை உண்டு. சத்துக்களின் அடிப்படையில் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பலனை கொண்டவைதான். நார்ச்சத்து கொண்ட உணவு என்றாலே அது வைக்கோல் போன்றோ தும்புகள் போன்றோ இருக்கும் என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் நார்ச்சத்து கொண்ட உணவுகள் எல்லாம் தோற்றத்தில் அப்படி இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

    கோதுமை மாவில் கரையும் மற்றும் கரையாத இரு வகை நார்களும் உள்ளன. மைதா மற்றும் அரிசி மாவில் கரையும் நார்ச்சத்து உள்ளது. சர்க்கரை, குளுகோஸ் பவுடர் போன்றவைகளில் நார்ச்சத்தே இல்லை. இன்னொரு விஷயம், நார்ச்சத்து இருந்தால் மட்டுமே அது நல்ல உணவு என்ற அர்த்தம் இல்லை. இதய நலனுக்கு நார்ச்சத்து கொண்ட உணவுகள் ஏற்றது என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியர்கள் அன்றாடம் உண்ணும் பலவகையான உணவுகளில் நார்ச்சத்து இருக்கவே செய்கிறது.

    * மைதாவின் பசை குடலில் ஒட்டிக்கொள்ளுமா?

    செகன்ட்ஷோ சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவைக் கடந்து வீடு திரும்புபவர்கள் சாலை ஓரங்களில் சுவரொட்டி ஒட்டுபவர்களை பார்த்திருப்பார்கள். போஸ்டரில் பசை கூழை தேய்த்து ஒட்டுவார்கள். அதை பார்த்தவர்களில் சிலர் பரப்பிவிட்ட கருத்துதான், மைதாவின் பசை குடலில் ஒட்டிக்கொள்ளும் என்பது! மனித உடல் அமைப்பும், இயக்கமும் விஞ்ஞானரீதியாக உணரப்பட்டவை. எந்த உணவும் குடலில் ஒட்டிப்பிடிக்காது.

    மனித குடல் பைப் போன்றது அல்ல. அதை ஒரு பம்ப் போன்றது என்று எடுத்துக்கொள்ளலாம். உண்ணும் உணவு, இந்த பம்பின் செயல்பாட்டால் முன்னோக்கி சென்று கொண்டிருக்கும். நாம் எதை சாப்பிட்டாலும் அந்த பம்ப் செயல்பட்டுக்கொண்டேதான் இருக்கும். அதுபோல் குடலின் சுவர்களிலும் சில விசேஷ கட்டமைப்புகள் உண்டு. சுவர்களில் திசுக்கள் தொடர்ச்சியாக உருவாக்கப்படுவதும், அவை உணவோடு அடிக்கடி பெயர்ந்து போவதும் நடந்துகொண்டே இருக்கும். இந்த இயக்க நிலையின் அடிப்படையில் எந்த உணவும் போஸ்டரை ஒட்டும் பசை போன்று குடலோடு ஒட்டிக்கொள்ளாது.

    * பரோட்டா ஜீரணமாவது கடினமா?

    இந்த குற்றச்சாட்டு வித்தியாசமானது. ஏன் என்றால் பரோட்டா தாமதமாக செரிமானம் ஆவது அதன் குறையல்ல, நிறை. உண்ணும் உணவுகளில் கிளைசெமிக் இன்டக்ஸ் குறிப்பிடத்தக்கது. விரைவாக செரிமானமாகக்கூடியதாக கருதப்படும் கஞ்சி, ஆப்பம், இட்லி போன்றவைகள் கிளைசெமிக் இன்டக்ஸ் அளவில் உயர்ந்தவை. இவை உடலின் மெட்டபாலிக் செயல்பாட்டை கோளாறாக்கக்கூடும். இவைதான் சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், இதயநோய், உடல்பருமன் போன் றவைகளுக்கு காரணமாக இருக்கின்றன. அதனால் தாமதமாக செரிமானமாகும் உணவுகளை நோக்கி உலகம் திரும்பிக்கொண்டிருக்கிறது. பரோட்டோ போன்று தாமதமாக செரிமானமாகும் உணவுகளை சிறிதளவு சாப்பிட்டாலும் நிறைய சாப்பிட்டது போன்ற உணர்வைத்தரும்.

    நாம் சாப்பிடும் எல்லா உணவுகளிலும் உடலுக்கு நல்லதும் உண்டு. கெட்டதும் உண்டு. அதுபோன்ற சராசரி உணவுதான் பரோட்டாவும். அளவோடு, அதிக இடைவெளி விட்டு எல்லா உணவுகளையும் உண்பதுபோல் இதையும் உண்ணலாம். காரமான சைடு டிஷ்களோடு சேர்த்து கண்டபடி பரோட்டா சாப்பிட்டு உடல் நலனை கெடுத்துக்கொண்டால் அது பரோட்டாவின் குறை அல்ல. சாப்பிட்டவரின் குறை. பரோட்டா பற்றி சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

    • குழந்தைகளுக்கு கொத்து பரோட்டா செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
    • ரோட்டு கடையில் செய்யும் கொத்து பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்..

    தேவையான பொருள்கள்:

    பரோட்டா - 2

    முட்டை - 1

    வெங்காயம் - 2

    எண்ணெய் - 4 ஸ்பூன்

    தக்காளி - 1

    பச்சை மிளகாய் - 2

    உப்பு - தேவையான அளவு

    பூண்டு - 8 பல்

    கறிவேப்பிலை - ஒரு கொத்து

    கொத்தமல்லி - தேவையான அளவு

    இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்

    தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

    செய்முறை:

    * தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * பரோட்டாவை சிறிது துண்டுகளாக பிரித்து தனியாக வைக்கவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ப.மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    * அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    * தக்காளி குழைய வதங்கியதும் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவேண்டும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, தனி மிளகாய் தூள் சேர்ந்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

    * அடுத்து துண்டுகளாக நறுக்கிய பரோட்டாவை சேர்த்து மிதமான தீயில் மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.

    * 10 நிமிடம் கழித்து கொத்தமல்லி சிறிது சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.

    * சுட சுட சுவையான ரோட்டு கடை கொத்து பரோட்டா தயார்.

    * இதில் சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து உண்டால் சுவையாக இருக்கும்..

    பாசிப்பருப்பு, கோதுமை மாவு சேர்த்து செய்யும் இந்த பரோட்டா மிகவும் சுவையானது. செய்வதும் மிகவும் சுலபம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பாசிப்பருப்பு - 1 கப்
    கோதுமை மாவு - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு

    செய்முறை

    பாசிப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.

    கோதுமை மாவை உப்பு மற்றும் மிளகாய் பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    இதனுடன் ஊறவைத்த பாசிப்பருப்பை கலந்து மீண்டும் பிசைந்து கொள்ளவும்.

    பிறகு பிசைந்த மாவை பரோட்டாவாக தேய்த்து வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த பரோட்டாவை போட்டு சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான மூங்தால் பரோட்டா தயார்.

    ×