என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "parties"
- அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
- கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.
ஆடை அணிகலன்களோடு பெண்களின் அழகிற்கு அழகு சேர்ப்பதில் சிகை அலங்காரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. எத்தனையோ வகையான சிகை அலங்காரங்கள் இருந்த போதும் சில தலைமுறைகளுக்கு முன்னாள் பிரபலமாக இருந்த கொண்டை அலங்காரங்களுக்கு இன்றும் மவுசு அதிகம்.
நவீன இந்திய கொண்டை
குட்டையான மற்றும் அடர்த்தியான முடி உள்ள பெண்களுக்கு இந்த வகையான கொண்டை பொருத்தமாக இருக்கும். பண்டிகைகள் மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள இது சரியான தேர்வாகும். கவுன்கள் மற்றும் முழங்கால் வரையிலான ஆடைகள் அணியும்போது இந்த வகையான சிகை அலங்காரம் கூடுதல் அழகு சேர்க்கும். ஓவல், வட்டம் மற்றும் வைரவடிவ முகத்தோற்றம் கொண்ட பெண்கள் நவீன இந்திய கொண்டை அலங்காரத்தை தேர்வு செய்யலாம்.
பன் கொண்டை
எல்லா வயது பெண்களுக்கும் பொருத்தக்கூடிய எளிமையான கொண்டை வகை இது. பார்ட்டிகளுக்கும், பயணங்களுக்கும், அலுவலக நிகழ்ச்சிகளுக்கும் இந்த வகை கொண்டை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது பன் கொண்டையில் பூக்கம் மற்றும் அணிகலன்கள் கொண்டு அலங்கரித்தால் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும்.
டாப் பன் கொண்டை
டாப் பன் கொண்டை அலங்காரம் பார்ட்டிகள். திருமண வரவேற்புகள் மற்றும் மேற்கத்திய பின்னணி கொண்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது அலங்கரித்துக்கொள்ள சரியான தேர்வாகும். நீளமான முடி கொண்ட பெண்களுக்கு இந்த வகை கொண்டை அழகுக்கு அழகு சேர்க்கும்.
ஆஃப் பன் கொண்டை
ஆஃப் பன் கொண்டை எனப்படும் இந்த கொண்டை இன்றைய இளம் பெண்களிடம் பிரபலமாக உள்ளது. விருந்துகளில் கலந்து கொள்பவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் இது சிறந்த தேர்வாகும். குட்டையான அல்லது நடுத்தரமான நீளம் கொண்ட கூந்தல் உள்ள பெண்களுக்கு இந்த வகை கொண்டை மிகவும் பொருத்தமாக இருக்கும்.
சைடு பன் கொண்டை
பக்கவாட்டு கொண்டை எனப்படும் இந்த கொண்டை அலங்காரம் நேர்த்தியான மற்றும் அழகான தோற்றம் அளிக்கும். இந்த வகை சிகை அலங்காரம் விருந்துகள், திருமணங்கள், குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது அலங்கரித்துக்கொள்ள ஏற்றது.
லோ பன் கொண்டை
கனமான அலங்கார பொருட்கள் இல்லாமல் எளிமையாக செய்யப்படும் இந்த வகை கொண்டை அலங்காரம் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் அல்லது சாதாரண பண்டிகை நாட்களில் கலந்துகொள்வதற்கு ஏற்றது.
மெஸ்ஸி டாப் பன் கொண்டை
நேரமில்லாமல் அவசரமாக கிளம்பக்கூடிய நிகழ்வுகளுக்கு ஏற்ற கொண்டை அலங்காரம் இது. சில நொடிகளில் செய்யக் கூடிய இந்த வகை சிகை அலங்காரம் எளிமையாக இருந்தாலும் உங்களுக்கு வசீகரமான தோற்றத்தை கொடுக்க கூடியது.
- இரு தரப்பினரிடையே மோதல்; 2 கிராமங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
- 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது26). இவர் புல்ல நாயக்கன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றது.
இதையடுத்து அருகில் விசாரித்து ரவி என்பவரி டம் சென்று பெட்ரோல் கேட்டுள்ளார். அதற்கு அவர் இங்கு பெட்ரோல் கிடைக்கும் என யார் சொன்னது என விசாரித்த தாகவும், இதுகுறித்து இரு வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு வரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாகவும் கூறப்படு கிறது.
இவர்களின் வாக்கு வாதத்தை கேட்டு இருவருக்கும் தெரிந்த நபர்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இந்த நிலையில் சிலர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். கலைந்து செல்லும் போது ஒரு தரப்பினர் மேலையூர் கிராமத்தில் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சரவணகுமார் அளித்துள்ள புகாரில், ரவி தரப்பினர் தங்களிடம் அவதூறாக பேசி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி தரப்பில் அளிக்கப் பட்டுள்ள புகாரில் சரவண குமார் தரப்பினர் வீட்டுக்குள் புகுந்து பெண்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டு களை கூறி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. பரளச்சி போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் நிலையில் 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், அரசியல் கட்சிகளுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வனி உபாத்யாயா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், ஊழல், இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 13-ம் தேதி நடைபெறும் எனவும் நீதிமன்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், குற்றபின்னணி உடைய அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என அஸ்வனி உபாத்யாயா தொடர்ந்த மற்றொரு வழக்கில், அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்து இருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. #SupremeCourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்