search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "party members"

    • திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ம.தி.மு.க. தலைமை அறிவிப்பின்படி, திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு திருப்பூர் காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் பணி துணைச் செயலாளர் சேதுபதி தேர்தல் ஆணையாளராக செயல்பட உள்ளார். தொடர்ந்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மாநகர் மாவட்ட புதிய நிர்வாகிகள் காலை 11 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள பெரியார், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    எனவே இந்த இரு நிகழ்ச்சிகளிலும் வட்டக்கழக நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், மாநகர் மாவட்ட, மாநில நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக வருகை தந்து சிறப்பித்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்தனர்
    • நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

    திருப்பத்தூர்:

    பாரதிய ஜனதா கட்சி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சி ஏலகிரி மலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் கவியரசு தலைமை வகித்தார். 100-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

    மாவட்ட பொது செயலாளர் தண்டாயுதபாணி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் திலகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மாலை தலைமைக்கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. #ParliamentElection #TTVDhinakaran
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இது தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு சென்னை அசோக் நகரில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை ஏற்று ஆலோசனை வழங்க உள்ளார். இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்காக ஆற்ற வேண்டிய களப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. #ParliamentElection #TTVDhinakaran

    வாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என்று தினகரன் பொய் சொல்கிறார் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #OPanneerSelvam #TTVDhinakaran
    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 449 கோவில்களில் பொது விருந்து நடந்தது.

    சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடந்த பொது விருந்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கும் பிரச்சனை முடிந்து போனது. மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மா, கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளராக இருந்தார். அவரது மறைவுக்கு பின் யாருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இதற்கு மாற்றாகத்தான், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது.

    இதற்கு அ.தி.மு.க. பொதுக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் ஒப்புதல் கொடுத்துள்ளது. சிலர், தேவையில்லாமல் பிரச்சனையை நீதிமன்றம் மூலம் கிளப்பி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது எடுபடாது.

    உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை சந்திக்க தயாராக உள்ளோம். திருப்பரங்குன்றம், திருவாரூரில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். வேட்பாளர்கள் குறித்து உயர்மட்டக்குழு முடிவெடுத்து அறிவிக்கும்.

    அ.தி.மு.க.வில் முறைப்படி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. நேரில் சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது.


    ஆனால் டி.டி.வி.தினகரன் வாக்காளர் பட்டியலை வைத்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை செய்து வருகிறார். அது உறுப்பினர் சேர்க்கை ஆகாது. வாக்காளர்களை கட்சி உறுப்பினர்கள் என்று தினகரன் பொய் சொல்கிறார். அனைத்து தேர்தலையும் சந்திக்க அ.தி. மு.க. தயாராக உள்ளது.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது மருத்துவமனைக்கு செல்லும் முன்பு வீட்டில் நானும், அமைச்சர்களும் சென்று பார்த்தோம். மருத்துவமனையில் முதல்-அமைச்சர் சென்று பார்த்தார்.

    ராஜாஜி மண்டபத்தில் கருணாநிதி உடலுக்கு முதல்-அமைச்சர், நான் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினோம். எனவே இந்த பிரச்சனையை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPanneerSelvam #TTVDhinakaran
    தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக தொண்டர்கள் அமைதி பேரணி நடத்தி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர். #DMK #Karunanidhi #RIPKarunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 7-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது இழப்பைத் தாங்க முடியாத தொண்டர்கள் கண்ணீரஞ்சலி, இரங்கல் கூட்டம் என பல்வேறு வழிகளில் தங்களது துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    தி.மு.க. தலைவரின் நினைவிடத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கருணாநிதியின் நினைவிடத்துக்கு தொண்டர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் தொகுதி தி.மு.க. சார்பில் இன்று அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதேபோல் பல்வேறு பகுதிகளில் தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தி வருகின்றனர். #DMK #Karunanidhi #RIPKarunanidhi
    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் தகனத்துக்கு இடம் தர மறுத்தது நியாயமற்றது என வைகோ தெரிவித்துள்ளார். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தின் அருகில் இடம் தர தமிழக அரசு மறுத்துள்ளது. அதற்கு சட்டரீதியாக பல்வேறு காரணங்களையும் தெரிவித்துள்ளது.

    இதையடுத்து திமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வைகோ, கோடான கோடி உள்ளங்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு கலைஞர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அண்ணா நினைவிடத்தில் இடம்தர மறுப்பது நியாயமற்றது எனவும், இடம் தர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #RIPKalaignar #Karunanidhi #DMK #கலைஞர்
    திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து திமுக தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து கண்ணீர் கடலாய் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். #RIPKalaignar
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடந்ததாக காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

    இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தனர்.  நேற்று மாலை முதல் தொண்டர்களின் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், தற்போது கருணாநிதி மாலை 6.10 மணியளவில் தனது இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார். இந்த தகவல் அறிந்த அவரது தொண்டர்கள் கடும் அதிர்ச்சியும், சொல்ல முடியா துன்பமும் அடைந்துள்ளனர். மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது தொண்டர்கள் மீண்டும் அவர் எழுந்து வர மாட்டாரே எனும் அதீத துன்பத்தோடு, தங்கள் கண்ணீர் வற்றும் படி கதறி அழுது தங்கள் துன்பத்தை வெளிக்காட்டி வருகின்றனர். #RIPKalaignar
    ×