என் மலர்
முகப்பு » Pathfinder
நீங்கள் தேடியது "Pathfinder"
- வாலிபர் ஒருவர் சங்கீதாவிடம் நைசாக பேச்சுகொடுத்து கவனத்தை திசைதிருப்பினார்.
- சங்கீதா கையில் இருந்த பையை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சல்போட்டார். உஷாரான வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருப்பனந் தாழ்வார் தெருவை சேர்ந்த–வர் செங்குட்டுவன். அவரது மனைவி சங்கீதா (வயது 33). இவர் நேற்று இரவு சிதம்பரம் வந்தார். பஸ் நிலையம் அருகே உள்ள டீ கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சங்கீதா–விடம் நைசாக பேச்சு–கொடுத்து கவனத்தை திசை–திருப்பினார். உடனே அந்த வாலிபர் சங்கீதா கையில் இருந்த பையை பறித்து கொண்டு ஓடினார். அதிர்ச்சியடைந்த சங்கீதா கூச்சல்போட்டார். உஷாரான வாலிபர் அங்கி–ருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் சங்கீதா புகார் செய்தார். கை பையில் 2 பவுன் நகை மற்றும் ரொக்கப்பணம், ஏலச்சீட்டுக்கு உரிய ரசீது–கள் இருந்ததாக தெரிவித்தார். போலீசார் வழக்கு––பதிவு செய்து வழிப்பறி கொள்ளையனை தேடி வருகிறார்கள்.
×
X