search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pathirana"

    • இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்குகிறது.
    • பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.

    இலங்கை சென்று இருக்கும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்றுள்ளது.

    இதைதொடர்ந்து, இலங்கையில் உள்ள ஆர்பிஎஸ்சி மைதானத்தில் நாளை இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்த போட்டி வரும் 7ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் மதீஷா பதிரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் விலகியுள்ளனர்.

    இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை அணியின் பீல்டிங் பயிற்சியின்போது மதுஷங்காவின் இடது காலில் காயம் ஏற்பட்டது.

    3வது டி20 போட்டியில் கேட்ச் பிடிக்க டைவிங் செய்யும்போது பதிரனாவின் வலது தோள்பட்டையில் லேசான சுளுக்கு ஏற்பட்டது.

    இதனால், செவ்வாயன்று பல்லேகலேயில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் பதிரனா பந்துவீசவில்லை.

    மேலும், காயம் அடைந்து விலகிய வீரர்களுக்குப் பதிலாக முகமது ஷிராஸ் மற்றும் எஷான் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அதேநேரத்தில், குசல் ஜனித், பிரமோத் மதுஷன் மற்றும் ஜெப்ரி வான்டர்சே ஆகியோர் அணியில் காத்திருப்பு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார்.
    • டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார்.

    தர்மசாலா:

    ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் 53-வது லீக் ஆட்டம் இன்று மாலை 3.30 மணிக்கு தர்ம சாலாவில் நடக்கிறது.

    இதில் ருதுராஜ் கெய்க் வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-சாம்கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் தொடர்ந்து இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை சூப்பர் கிங்சுக்கு இருக்கிறது. பஞ்சாப் கிங்சுக்கு பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை சி.எஸ்.கே. பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீரர் பதிரனா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சில் துருப்பு சீட்டாக இருக்கிறார். மலிங்கா போன்று பந்து வீசும் அவர் 6 ஆட்டத்தில் 13 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 28 ரன் கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றி யது அவரது சிறந்த பந்துவீச்சாகும்.

    உலக கோப்பை விசா நடைமுறைக்காக நாடு திரும்பியதால் அவர் சென்னையில் கடந்த 1-ந் தேதி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்றைய ஆட்டத்திலும் அவர் ஆடுவது சந்தேகம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது அவர் அணியோடு இணைந்துள்ளார். இதனால் இன்று விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தை மாதிரி என்று பதிரனா தெரிவித்துள்ளார். இது தொடர்ச்சியாக அவர் கூறியதாவது:-

    டோனி என்னை நன்றாக கவனித்து கொள்கிறார். நான் என்ன செய்ய வேண்டும் என்று அதிகமான அறிவுரையை வழங்குகிறார். நான் களத்தில் இருந்தாலும், வெளியே இருந்தாலும் அவர் கூறும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

    எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி எனது தந்தையாவார். எனது தந்தைக்கு பிறகு அவர் தான் (டோனி), எனது தந்தையின் பங்களிப்பில் உள்ளார்.

    வீரர்களை எப்படி கையாள வேண்டும் என்று அவருக்கு தெரியும். அவரிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால் நிச்சயமாக அவரிடம் சென்று கேட்பேன்.

    இவ்வாறு பதிரனா கூறினார்.

    பதிரனா கடந்த ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டத்தில் 19 விக்கெட் கைப்பற்றி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற முக்கிய கரணமாக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின
    • களத்திற்குள் வர மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர்

    நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இலங்கை -வங்காளதேசம் அணிகள் மோதின. அந்த போட்டியில் இலங்கை அணியின் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். அப்போது அவரின் ஹெல்மட்டில் ஏதோ பிரச்சனை வந்தது. இதனால் நேராக க்ரீஸிற்குள் வராமல் மாற்று ஹெல்மட் கொண்டு வருவாறு அணியினருக்கு சிக்னல் கொடுத்தார். இதனால் ஷகிப் அல் ஹசன் அடுத்த பந்தை வீசுவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் வங்கதேச அணி வீரர்கள் நடுவர்களிடம் டைம் அவுட் முறையீடு செய்தனர்.

    எம்சிசி விதியின் படி, ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து வெளியேறினால், அடுத்த பேட்ஸ்மேன் 3 நிமிடங்களுக்குள் க்ரீஸில் இருக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் 3 நிமிடங்களுக்கு மேல் நேரம் எடுத்து கொண்டதால், நடுவர்கள் அவருக்கு அவுட் கொடுத்தனர். இதனால் சோகமடைந்த மேத்யூஸ், உடனடியாக ஷகிப் அல் ஹசன் மற்றும் நடுவர்களிடம் முறையீடு செய்தார்.

     ஆனால் மேத்யூஸ் விளக்கங்களை ஏற்காத நடுவர்கள் உடனடியாக அவுட் கொடுத்தனர். இதன் மூலம் எந்த பந்தையும் எதிர்கொள்ளாமல் ஏஞ்சலோ மேத்யூஸ் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். உலகக்கோப்பை வரலாற்றிலேயே டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரனானார் மேத்யூஸ்.

    இதற்கு ரிவெஞ்ச் கொடுக்கும் விதமாக உலககோப்பைக்கு பின்பு நடந்த வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி வீரர்கள் கைகடிகாரத்தை காட்டுவது போன்று புகைப்படம் எடுத்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    அப்போதிலிருந்தே இலங்கைக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான மோதல் கிரிக்கெட் களத்தில் மட்டுமில்லாது சமூக வலைத்தளங்களிலும் வெடிக்க ஆரம்பித்தது.

     இந்நிலையில் இந்த மோதலுக்கு முடிவுக்கட்டும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இலங்கை அணி வீரர் பத்திரனாவும் வங்கதேச அணி வீரர் முஸ்தாபிஜூர் ரஹ்மானும் இணைந்து பகத் பாசிலின் ஆவேசம் படத்தின் புகழ்பெற்ற காட்சியை ரீல்ஸ் செய்துள்ளனர்.

    அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

    • இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

     இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியில் அறிமுகமான மதீஷா பதிரனா 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் கைப்பற்றி 66 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதில், 16 வைடுகள் அடங்கும். சென்னை அணியில் இடம் பெற்றிருந்த பதிரனா அசத்தலான பந்து வீச்சால் சென்னை மக்களின் மனதை கவர்ந்தார். டி20-யில் பட்டைய கிளப்பிய பதிரனா, ஒருநாள் போட்டியில் சோதப்பியது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    முதல் 3 ஓவர்களில் 7 வைடுகளை வீசிய அவர் அடுத்த 5 ஓவர் முடிவடைய நிலையில் 9 வைடுகளை வீசியுள்ளார்.

    இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி வரும் 4ஆம் தேதி நடக்க இருக்கிறது.

    • பதிரனாவின் குடும்பத்துடன் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சகோதரி விஷுகா பதிரனா இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.
    • இந்த சீசனின் சிறந்த டெத் பௌலர் என சொல்லும் அளவுக்கு அவர் கடைசிகட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

    ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக மதீஷா பதிரனா பார்க்கப்படுகிறார். இந்த சீசனின் சிறந்த டெத் பௌலர் என சொல்லும் அளவுக்கு அவர் கடைசிகட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

    இளம் வீரரான பதிரனாவின் இந்த எழுச்சிக்கு டோனியும் ஒரு முக்கியமான காரணம் என அவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் மதீஷா பதிரனாவின் குடும்பத்துடன் டோனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது சகோதரி விஷுகா பதிரனா இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார்.

    அதில், மதிஷாவைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார். என்று தல டோனி கூறியபோது மல்லி பாதுகாப்பான கைகளில் இருப்பதை இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்த தருணங்கள் நான் கனவு கண்டதையும் தாண்டியது.

    எனக் கூறியிருக்கிறார்.

    இலங்கை ரசிகர்களே உங்களுக்காக ஒரு வைரத்தை டோனி பட்டைத்தீட்டிக் கொண்டிருக்கிறார் என வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே குறிப்பிட்டிருந்தார்.

    ×