என் மலர்
நீங்கள் தேடியது "pavurchathiram"
- பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்.
- 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஜெகன் (வயது 19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை அவர் குளித்து விட்டு தனது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூரை அருகே துணியை காய போட சென்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் ஜெகன் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1,604 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
- சம்பவத்தன்று தலைமை ஆசிரியை ஜான்சி ராணி அறையில் இருந்து வெளியே வந்து மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,604 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஜான்சி ராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் தனது அறையில் இருந்து வெளியே வந்து அந்த வழியாக வந்த மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரது அலுவலகத்தின் மேற்கூரை பூச்சு திடீரென இடிந்து விழுந்தது.
அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லாததால் எவ்வித பாதிப்பு மற்றும் உயிர் சேதம் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். தகவல் அறிந்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக பழைய கட்டிடங்களை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
- லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்து சென்று பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார் சென்றது.
- போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூர் மேல தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை எடுத்து சென்று பாவூர்சத்திரத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வைத்து மாணவர்களுக்கு விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதனை கண்ட முருகன் அங்கேயே ஆட்டோவை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் ஆட்டோ மற்றும் 336 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 1.42 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
- திருவிழாவின் 6-ம் நாளான நாளை மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.
தென்காசி:
பாவூர்சத்திரம் காமராஜர் நகர் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாவூர்சத்திரம் சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்றத்தின் சார்பாக 22-ம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 6-ம் நாளான நாளை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கும்ப ஜபம், மூல மந்திர ஹோமம், யாகசாலை பூஜை,சஷ்டி ஹோமம் தீபாராதனை ஆகிய நிகழ்ச்சியும், மாலை 3 மணி அளவில் யாகசாலை பூஜை,ஹோமம் அதனைத் தொடர்ந்து சூரசம்ஹாரமும் நடைபெற உள்ளது.
இரவு 7 மணி அளவில் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும். எனவே பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் பக்தர்கள் அதிகம் கூடுவர் என்பதால் பாதுகாப்பு பணியில் பாவூர்சத்திரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
- சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
தென்காசி:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது.
சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு கும்பஜெபம், மூலமந்திரஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனையும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர், பாவூர்சத்திரம், செட்டியூர், பனையடிப்பட்டி, செல்வவிநாயபுரம், திப்பணம்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், நாட்டார்பட்டி, கல்லூரணி உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் . தொடர்ந்து அம்மன் தபசு மண்டபம் செல்லுதல், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தீபாராதனையும், மாலை 6 மணிக்கு பக்தர்கள் சுவாமி காட்சி அருளுதல், இரவு 8 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்திலிருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பாவூர்சத்திரம் விவேகானந்தர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
- பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன்
- கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்
நெல்லை:
பாவூர்சத்திரம் செங்குந்தர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் ஜெகநாதன்(வயது 35). ஜவுளி வியாபாரி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பம் நடத்த மறுப்பு
கடந்த 20 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வர நேற்று முன்தினம் ஜெகநாதன் சென்றுள்ளார்.
ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ஜெகநாதன் தனது வீட்டுக்கு வந்து தூங்க செல்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டார். நேற்று காலை வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் சந்தேகம் அடைந்த முருகேசன் உள்ளே சென்று பார்த்துள்ளார்.
தற்கொலை
அங்கு ஜெகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஜெகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது அறையில் ஒரு கடிதம் இருந்தது. அதனை போலீசார் எடுத்து சென்றுள்ளனர். அதில் சாவுக்கு காரணமானவர் குறித்த பெயர் விபரங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் விசாரைணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
- கல்லூரி, பள்ளி பஸ்கள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
தென்காசி:
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மேல் புறம் இருந்து பாவூர்சத்திரம் மார்க்கெட் சாலை வரை செல்லும் பகுதியில் நான்கு வழிச்சாலையின் ஓரம் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவு நீர் மழை நீர் செல்வதற்காக மூடப்பட்ட நிலையில் வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே மிகவும் தாழ்வாக உயர் அழுத்த மின் வயர்கள் சென்று கொண்டு உள்ளன. நடந்து செல்லும் நபரின் தலை தட்டும் அளவிற்கு செல்வதால் உடனடியாக அதனை சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்தினர் சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் அவ்வழியே அதிகளவில் கனரக வாகனங்களான கல்லூரி, பள்ளி பேருந்துகள் மற்றும் மார்க்கெட் செல்லும் லாரிகள் செல்வதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை உடனடியாக மாற்றி அமைப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியினர் இடையே எழுந்துள்ளது.
- சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது.
- தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார்.
தென்காசி:
பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தொழில் முனைவோர்கள் இணைந்து அரசு மானிய கடன் பெறுவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வி.ஏ.எம்.நவீன அரிசி ஆலை லட்சுமி சேகர் தலைமை தாங்கினார்.பொன்னொளிர் ஏஜென்சி அருணாச்சல முத்துச்சாமி , கோவா கேட்டரிங் சுரேஷ், எஸ்.ஆர்.எஸ்.ஹார்டுவேர்ஸ் சுப்புராஜ், ரஜினி பத்திர எழுத்தாளர் ரஜினி, கிளாசிக் கம்ப்யூட்டர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். கே.ஆர்.பி. நவீன அரிசி ஆலை உரிமையாளர் இளங்கோ தொகுத்து வழங்கினார்.
பொன் அறிவழகன் தொடக்க உரையாற்றினார்.கோல்டன் டிரேடர்ஸ் செல்வராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள் தொழில் மானிய கடன் பெறுவது குறித்து விளக்கினார். பைம் தொழில் உற்பத்தி நிறுவனத்தின் நிர்வாகி சிவக்குமார் தொழில் ஆரம்பிப்பது குறித்து பேசினார்.நிகழ்ச்சியை ராஜாதி ராஜா நவீன அரிசியாலை ஆனந்த் ,நண்பா கேக் சங்கரபாண்டியன், ராஜாமணி திருமலை கொழுந்து, ஆனந்த், ஹோம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் கே.எஸ். சினேகா பாரதி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். சுடர் பரமசிவம் நன்றி கூறினார்.
- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
- தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
தென்காசி:
பாவூர்சத்திரம் ரெயில்வே கேட், தண்ட வாளம், கடவுப்பாதை பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காலை 8 மணிக்கு ரெயில்வே கேட் மூடப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் தென்காசி-நெல்லை சாலையில் செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. தென்காசி யில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் கடபோகத்தி, குபேர பட்டணம், சடையப்பபுரம், பாவூர்சத்திரம் வழியாகவும், நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் வாகனங்கள் பாவூர்சத்திரம்- கடையம் சாலை, மலையராமபுரம், கல்லூரணி, செல்வ விநாயகபுரம் வழியாக தென்காசி சாலையில் வந்தடைந்து வழக்கமான சாலையில் சென்றது. இதனால் வாக னத்தில் செல்வோர் சிரமத்திற்குள்ளானார்கள்.
- செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய மக்கள் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
- மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்த வேண்டாம்.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் புரத்திலிருந்து மேலப்பாவூர் செல்லும் பிரதான சாலையை அடைய அப்பகுதி மக்கள் அருகில் இருக்கும் ரெயில்வே தரை பாலத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக ரெயில்வே தரைப்பாலம் முழுமையாக மழை நீரால் நிரம்பி காணப்படுகிறது.
எனவே அச்சாலையை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் யாரும் மழை நீர் முழுமையாக வடியாத வரையில் அந்த ரெயில்வே தரை பால வழியினை பயன்படுத்த வேண்டாம் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- இன்று காலையில் நடைபயிற்சி சென்ற சிலர் அதனை பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
- மேல அரியப்பபுரம் பகுதி நாடாகண்ணுபட்டி கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பது தெரிய வந்தது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள மேட்டூர் ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்ட நிலையில் வாலிபர் உடல் ஒன்று கிடந்தது.
ரெயிலில் அடிபட்டு பலி
இன்று காலையில் நடைபயிற்சி சென்ற சிலர் அதனை பார்த்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரெயிலில் அடிபட்டு இறந்தவர் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேல அரியப்பபுரம் பகுதி நாடாகண்ணுபட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரத்குமார் (வயது 25) என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை சுப்பிரமணியன் இறந்ததால் தனது தாயுடன் அவர் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
நேற்று இரவில் வெய்காலிப்பட்டி அருகே உள்ள மேட்டூர் ெரயில் தண்டவாளத்தை இரவு 12:15 மணிக்கு கடக்க முயன்றுள்ளார். அப்போது நெல்லையில் இருந்து தென்காசி வழியாக சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் தூக்கி வீசப்பட்ட சரத்குமார் உடல் 3 துண்டுகளானது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
- பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளி விளையாட்டு துறை சார்பாக மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இண்டியன் அகாடமியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டனர்.
அதில் இசக்கி சந்துரு 53 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், பால் மணி 60 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும்,கோமதி சங்கர் 90 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், சுகுமார் 45 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கமும், கிஷோர் கவிஷ் வெண்கல பதக்கமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களும் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களை பயிற்சியாளர் மாஸ்டர் கணேஷ் மற்றும் ராம்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.