என் மலர்
நீங்கள் தேடியது "Pawn fraud"
- போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
- ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சிக்கிய ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நகைக்கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 இடங்களில் ஏமாற்றினர்
- 2 வாலிபர்கள் கைது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே அச்சமங்கலம் பகுதியில் அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அப்பகுதி பொது மக்களிடம் வெள்ளி கொலுசு கொடுத்து அதனை அப்பகுதியில் உள்ள நகை அடமான கடையில் ரூபாய் 10 ஆயிரத்துக்கு அடமான வைத்து பணம் பெற்று தந்தால் உங்களுக்கு கொலுசுக்கு ரூபாய் ஆயிரம் தருவதாக கூறியதன் பேரில் அப்பகுதி பொது மக்கள் சிலர் அந்த வெள்ளி கொலுசு பெற்று கொண்டு அடமான கடையில் வெள்ளி கொலுசு வைத்து பணம் பெற்று அந்த வாலிபரிடம் பணம் கொடுத்தனர் அதற்காக அவர்கள் ரூபாய் ஆயிரம் வழங்கியுள்ளார்.
அப்போது சிறுது நேரத்தில் நகை கடையின் உரிமையாளர் அடமான கடையில் வைத்து இருந்த கொலுசு பரிசோதித்த போது அந்த கொலுசு போலியானது தெரியவந்தது இதனையெடுத்து நகை கடை ஊழியர்கள் வெள்ளி கொலுசு வைத்த நபரிடம் நேரடியாக சென்று தாங்கள் கொடுத்த வெள்ளி கொலுசு போலியானது என தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அந்த வாலிபரை மடக்கி பிடித்து ஜோலார்பேட்டை போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஜோலார்பேட்டை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று சேலம் பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலிஷ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
அப்போது விசாரணையில் சேலம் மாவட்டம் சேலம் அடுத்த அம்மணி கொண்டலாம்பட்டி அரசமரத்து காட்டூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (வயது 38) சேலம் நெத்திமேடு அழக கவுண்டர் தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 36) என தெரிய வந்தது
இவர்கள் போலி வெள்ளி கொலுசு நூதன முறையில் 5 இடங்களில் அடமான வைத்து மோசடி செய்தது தெரியவந்தது
இதனையடுத்து அவர்களிடமிருந்து போலி வெள்ளி கொலுசுகள் மற்றும் ரொக்க பணம் ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.