என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Payasam"

    • பாஸ்தாவில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • இன்று பாஸ்தாவில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    மக்ரோனி - 1 கப்

    பால் - 2 1/2 கப்

    சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்

    கண்டென்ஸ்டு மில்க் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

    முந்திரி - 2 டீஸ்பூன்

    நெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

    பின்னர் அதில் மக்ரோனியை சேர்த்து, மக்ரோனி பாதியாக வேகும் வரை அடுப்பில் வைத்து, பின் இறக்கி நீரை வடித்து, குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசிக்

    கொள்ள வேண்டும்.

    பின்பு ஒரு நாண்ஸ்டிக் பேனில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு அதே பேனில், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.

    அடுத்து அதில் மக்ரோனியை சேர்த்து, பாலில் மக்ரோனி நன்கு மென்மையாக வேக வைத்து, பின் அதில் கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி

    விட வேண்டும்.

    பாலானது நன்கு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால், பாஸ்தா பாயாசம் ரெடி!!!

    • சர்க்கரை நோயாளிகளும் இந்த பாயாசத்தை குடிக்கலாம்.
    • இதை ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.

    தேவையான பொருட்கள்

    கோதுமை ரவை - 1 கப்

    ஜவ்வரிசி - அரை கப்

    தண்ணீர் - 3 கப்

    வெல்லம் அல்லது கருப்பட்டி - 2 கப்

    தேங்காய் பால் - 3 கப்

    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்

    முந்திரி - விருப்பத்திற்கேற்ப

    நெய் - விருப்பத்திற்கேற்ப

    செய்முறை

    ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கோதுமை ரவையைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

    ஒரு குக்கரில் வறுத்த கோதுமை ரவை, ஜவ்வரிசி மற்றும் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    விசில் போனதும், ஒரு வாணலியில் வேக வைத்துள்ள கோதுமை ரவையை ஊற்றி, அதில் வெல்லம் அல்லது கருப்பட்டையை போட்டு அடுப்பில் வைத்து, 10 நிமிடம் நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

    பின்பு அதில் தேங்காய் பாலை ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஏலக்காய் பொடியைத் தூவி கிளறி இறக்கவும்.

    இறுதியில் மற்றொரு சிறு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, பாயாசத்தில் ஊற்றி கிளறினால், சுவையான கோதுமை ரவை பாயாசம் தயார்.

    • கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • தினமும் ஒரு கேரட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    கேரட் - 250 கிராம்

    வெல்லம் - கால் கப்

    தண்ணீர் - தேவையான அளவு

    தேங்காய் பால் - ஒரு கப்

    ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்

    உப்பு - ஒரு சிட்டிகை

    நெய் - இரண்டு டீஸ்பூன்

    முந்திரி, திராட்சை - தேவையான அளவு

    செய்முறை:

    கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளவும்.

    கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.

    இப்போது சூப்பரான கேரட் பாயாசம் ரெடி.

    • தென்னிந்திய விருந்துகளில் முக்கிய இடம் பிடிப்பது 'பாயாசம்'.
    • இதில் பொட்டாசியம், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன.

    தேவையான பொருட்கள்:

    இளநீர் - 200 மில்லி லிட்டர்

    இளம் தேங்காய் - 200 கிராம்

    பால் - ½ லிட்டர்

    சர்க்கரை - 200 கிராம்

    மில்க்மெய்ட் - 1 கப்

    சாரைப்பருப்பு - 2 டீஸ்பூன்

    முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 8

    ஏலக்காய்த்தூள் - ¼ டீஸ்பூன்

    பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை

    நெய் - தேவைக்கேற்ப

    செய்முறை:

    பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரிக்கவும்.

    பின்பு முந்திரி, பாதாம், பிஸ்தா இவற்றை பொடிதாக நறுக்கவும்.

    இளம் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு சிறிது பாலூற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும். பின்பு அதில் இளநீரை சேர்த்துக் கலக்கவும்.

    அடிப்பகுதி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடுபடுத்தவும்.

    அதில் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    பிறகு தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும்.

    பிறகு அதில் பச்சைக்கற்பூரம், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.

    வாணலியில் நெய் ஊற்றி சாரைப்பருப்பு, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். பின்பு அவற்றைப் பாலில் சேர்த்து கலக்கவும்.

    10 நிமிடங்கள் கழித்து பாலை அடுப்பில் இருந்து இறக்கவும்.

    பால் அறை வெப்பநிலைக்கு வந்ததும், அதில் இளநீர் மற்றும் இளம் தேங்காய் கலவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

    பிறகு இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, 2 மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான 'இளநீர் பாயாசம்' தயார்.

    • கார்த்திகை தீபமான இன்று இறைவனுக்கு படைக்க தேங்காய் பால் பாயாசம் செய்யலாம்.
    • இந்த பாயாசம் செய்வது சுலபம், சுவையோ அருமை.

    தேவையான பொருட்கள் :

    தேங்காய் துருவல் - ஒரு கப்

    வெல்லம் - ஒரு கப்

    பச்சரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

    நெய் - 2 டீஸ்பூன்

    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

    முந்திரி பருப்பு - 10

    காய்ந்த திராட்சை - 10

    செய்முறை :

    முதலில், மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் சேர்த்து அத்துடன் வெந்நீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும், வெல்லம் சேர்த்து கரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

    தற்போது, தேங்காய் பாலுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.

    அதனுடன், வடிகட்டிய வெல்லம் சேர்த்து இந்த கலவையை அடுப்பில் வைத்து 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு திக்கான பதம் வரும் வரை கிளறவும்.

    இறுதியாக, கடாயில் நெய்விட்டு சூடானதும் முந்திரி பருப்பு, காய்ந்த திராட்சை போட்டு வறுத்து பாயாசத்துடன் சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய் பால் பாயாசம் ரெடி..!.

    • தேங்காய்ப்பால் போஹா கோவாவின் ஸ்பெஷல் ஐட்டம்.
    • பத்தே நிமிடங்களில் இந்த போஹாவை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் - 200 கிராம்

    தேங்காய்ப்பால் - 1 கப்

    சர்க்கரை - தேவையான அளவு

    ஏலக்காய் - 3

    செய்முறை

    ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

    அவலை தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

    மிருதுவாக வந்தவுடன் அரை கப் சூடு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

    அத்துடன் அவல் சேர்த்து கொதிக்க விடவும்.

    பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    அத்துடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

    பொடித்த ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறிவிடவும்.

    சுவையான தேங்காய்ப்பால் போஹா ரெடி. சுடச்சுட பரிமாறவும்.

    • குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும்.
    • விருந்தினர் வந்தால் இதை செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை - ஒரு கப்,

    பால் - 3 கப்,

    சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,

    தேங்காய்பால் - ஒரு கப்.

    செய்முறை:

    பாலில் சர்க்கரை சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.

    பால் நன்றாக சுண்டியதும் ஆற வைக்கவும். (பால்கோவாவிற்கு முந்தைய பதம்)

    பால் நன்றாக ஆறியதும் பொடியாக நறுக்கிய இளநீர் வழுக்கை, தேங்காய்ப் பால் சேர்த்து 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.

    சூப்பரான இளநீர் டிலைட் ரெடி.

    • குருவாயூர் கோவிலுக்கு சென்ற வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர் ஒருவர் பாயாசம் தயாரிக்க கோவிலுக்கு பிரமாண்ட உருளி ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.
    • பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட பாயாசம் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலும் ஒன்று.

    இங்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பாயாசம் பிரசாதமாக வழங்கப்படும். இதனை தயாரிக்க கோவிலின் மடப்பள்ளியில் பாத்திரங்கள் உள்ளன.

    இதில் தயாரிக்கப்படும் பாயாசம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் போதுமானதாக இருப்பதில்லை. இதனால் கூடுதல் பாத்திரங்களில் பாயாசம் தயாரிக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் குருவாயூர் கோவிலுக்கு சென்ற வெளிநாட்டு வாழ் இந்திய பக்தர் ஒருவர் பாயாசம் தயாரிக்க கோவிலுக்கு பிரமாண்ட உருளி ஒன்றை காணிக்கையாக வழங்கினார்.

    இந்த உருளியில் ஒரே நேரத்தில் 1500 பேருக்கு பாயாசம் தயாரிக்க முடியும். இந்த உருளியில் தற்போது முதல் முறையாக பக்தர்களுக்கு பாயாசம் தயாரிக்கப்பட்டது.

    இந்த பாயாசத்தையும் அதே பக்தர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். கோவிலில் பிரமாண்ட உருளியில் தயாரிக்கப்பட்ட பாயாசம் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
    • இன்று சிவபெருமானுக்கு நைவேத்தியம் படைக்க இந்த ரெசிபி செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ஜவ்வரிசி - கால் கப்

    தண்ணீர் - ஒரு கப்

    நெய் - ஒரு தேக்கரண்டி

    முந்திரி, திராட்சை - தேவைக்கு

    சர்க்கரை - அரை கப்

    பால் - 1 கப் - 1 1/2 கப்

    ஏலக்காய் தூள் - தேவைக்கு

    பாதாம், பிஸ்தா - தேவைக்கு

    செய்முறை:

    பாதாம் பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.

    முதலில் ஜவ்வரிசியை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்றாக வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுக்கவும்.

    அதே பாத்திரத்தில் நன்றாக வெந்து இருக்கும் ஜவ்விரிசியை ஊற்றி சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.

    சர்க்கரை நன்றாக கரைந்ததும் கடைசியாக பால் சேர்க்கவும்.

    இத்துடன் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.

    பரிமாறும்போது பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.

    • சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
    • சிவப்பரிசியில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    சிவப்பு அரிசி - 5 டேபிள்ஸ்பூன்,

    பால் - ஒரு லிட்டர்,

    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

    பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்),

    சர்க்கரை - தேவையான அளவு.

    செய்முறை:

    சிவப்பு அரிசியை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.

    பாலுடன் உடைத்த அரிசியை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து வரும்போது, அடுப்பை 'சிம்'மில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும்.

    பின்னர் சர்க்கரை சேர்க்கவும். எல்லாம் நன்கு சேர்ந்து வரும்போது ஏலக்காய்த்தூள், துருவிய பாதாம் சேர்த்து இறக்கவும்.

    இதை சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.

    • கேரளாவில் எந்த விசேஷம் என்றாலும் பாலடை பிரதமன் கண்டிப்பாக இருக்கும்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பச்சரிசி - ஒரு கப்

    பால் - ஒன்றரை லிட்டர்

    சர்க்கரை - ஒரு கப் (இனிப்பு விரும்புபவர்கள் தேவைக்கு ஏற்ப அதிகம் சேர்க்கலாம்)

    தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    வாழையிலை - 4

    செய்முறை

    பச்சரிசியை நன்றாக கழுவி ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, பின் ஒரு துணியில் பரப்பி உலற வைக்கவும். அரிசியில் ஈரம் இல்லாமல் இருக்கும் போது எடுத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும். பொடித்த அரிசியை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்....

    சலித்த மாவில் சிறிது தண்ணீரும், தேங்காய் எண்ணெயும் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். கலந்த மாவை வாழையிலையில் பரவலாக கரண்டியால் ஊற்றவும். வாழையிலையை சுருட்டி நூலால் கட்டவும். கொதிக்கும் தண்ணீரில் அமிழ்த்தி 30 நிமிடம் வைத்து வேக விடவும்.

    அவை வேகும் சமயத்தில் ஒரு அகண்ட பாத்திரத்தில் பாலை காய்க்கவும். பால் பாதியாக சுண்டியதும் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். பால் லேசாக நிறம் மாறி இருக்கும்.

    அந்த சமயத்தில் வாழையிலைகளை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வாழையிலைகளைப் பிரிக்கவும். கிடைக்கும் அடைகளை நன்றாக நீரில் அலசி பொடிபொடியாக கொத்தி வைத்து கொள்ளவும்.

    கொத்திய அடைகளை சுண்டிய பாலில் சேர்த்து கிளறவும். 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இறக்கும் போது சற்று தளர்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆறியதும் சரியான பக்குவத்தில் இருக்கும்.

    இப்போது தித்திக்கும் பாலடை பிரதமன் ரெடி....

    • கேரளாவில் பாசிப்பருப்பு பாயாசம் மிகவும் பிரபலம்.
    • இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பாசிப்பருப்பு - 1 கப்

    வெல்லம் - 1 கப் (துருவியது)

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்

    நீர் போன்ற தேங்காய் பால் - 2 1/2 கப்

    முந்திரி - 3 டேபிள் ஸ்பூன்

    உலர் திராட்சை - 3 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் - 4

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    * பின்பு அதில் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

    * பிறகு அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

    * அதன் பின் அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் அல்லது பருப்பு வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.

    * பருப்பு நன்கு வெந்த பின், வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.

    * இறுதியில் அதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்துடன் எஞ்சிய 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!

    ×