என் மலர்
நீங்கள் தேடியது "Pennagaram"
- 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் வனத்துறையால் அகற்றப்பட்டது.
இதையடுத்து 5 தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பென்னாகரத்தில் பூர்வக்குடி மக்களை வெளியேற்றிய விவகாரம் தொடர்பாக வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்,
மாவட்ட கலெக்டர் மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
யானை வழித்தடங்கள் மற்றும் யானை வாழ்விடங்களில் குடியிருப்பவர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படியே பூர்வக்குடி மக்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வீடுகள் வனத்துறை சட்டத்திற்கு உட்பட்டு அகற்றப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
- அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.
- வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், வீடு ஒன்றில் பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன.
அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.
இந்த மலரானது அமெரிக்காவின், மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர்.
இந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் இந்த மலருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி என்பவரின் வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் 2 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளது. நேற்று இரவு, 9 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன.
இதை பார்த்து, அவ்வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே அவரது குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டி கொண்டனர்.
தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்லுகின்றனர்.
- பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.
- ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் உறவினர்கள், குடும்பத்தினர்களுக்கு பேச முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் எந்த அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்றுகாலை 30-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கிருந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
- 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர்.
- 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒகேனக்கல்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஈச்சம்பள்ளம், புதுப்பட்டி, எட்டிக்குழி, நெற்குந்தி, கருப்பயனூர், ஜீவா நகர் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் சுமார் 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் சாலை சரியில்லாததால் பிரசவ காலங்களில் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் அழைத்தால் சாலை சரியில்லை என்றுகூறி இந்த வழித்தடத்தில் ஆம்புலன்ஸ் வருவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் பஸ்களும் சாலை சரியில்லாததால் போதிய பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே சாலையை சீரமைத்து தர வேண்டி பலமுறை அரசு அதிகாரிக ளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியும், கடந்த 15 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஈச்சம்பள்ளம் கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்படாத கிராம மக்கள் பின்பு பென்னாகரம் டி.எஸ்.பி. மகாலட்சுமி மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவ லர், தாசில்தார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததின் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
4 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ரங்காபுரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த நாகராஜ் மகன் சத்தியநாராயணன் (வயது 20).
அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ரவிச்சந்திரன் (25). இவர்கள் 2 பேரும் பென்னாகரத்தில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு ரங்காபுரம் அருகே வந்தபோது பாலக்கோட்டில் இருந்து பென்னாகரம் சென்ற அரசு டவுன் பஸ் மீது இவர்களது மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் பஸ்சின் பின்சக்கரத்தில் சிக்கி பலியானார்கள். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் பிணங்களையும் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் இறந்த சத்திய நாராயணன் பெயிண்டராக வேலை பார்த்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை. விபத்தில் இறந்த ரவிச்சந்திரன் கட்டிட மேஸ்திரி ஆவார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவருக்கு 10 மாத கைக் குழந்தை ஒன்று உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கூத்தம்பாடியை அடுத்த கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி ராணி (வயது 48). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். ராணி கூலிவேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை கழட்டி மேசை மீது வைத்து விட்டு தூங்க சென்றார். இன்று காலையில் எழுந்து பார்த்தபோது மேசையின் மீது வைத்திருந்த 2பவுன் நகையை காணவில்லை. மர்ம நபர் யாரோ வீட்டுக்குள் புகுந்து மேசையின் மீதுவைத்திருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். #tamilnews
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ அம்பிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 30). இவரது மனைவி சோபனா (25). இவர்களது உறவினர்கள் 17 கொண்ட குழுவினர்கள் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு ஒகேனக்கலுக்கு புறப்பட்டு சென்றனர். அதே பகுதியை சேர்ந்த வேனை லட்சுமணன் என்பவர் ஓட்டினார்.
ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த அவர்கள் பல்வேறு இடங்களில் சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் ஒகேனக்கலில் இருந்து புறப்பட்டு மேட்டூர் அணையை சுற்றி பார்க்க சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பலியான சோபனா உடலை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்யோன் (வயது36). இவர் தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ஜெனிபர் (32) மற்றும் உறவினர்கள் ஆமேஷ் (13), சித்ரா (20) ஆகியோருடன் ஒகேனக்கலுக்கு காரில் சுற்றுலா செல்ல முடிவு செய்து நேற்றிரவு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றனர். காரை சினியோன் ஓட்டி வந்தார்.
சினியோன் பெற்றோர்களான திருவண்ணாமலை மாவட்டம், மேல்புதேரி பகுதியை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி தேவராஜ் (60)- நீலாவதி (55) ஆகியோருடன் உறவினர்களின் குழந்தைகளான ரோகித் (4), ஜெயலெட்சுமி (12), ஏஞ்சல் (11), ரேஞ்சல் (10), கவிதா (7)ஆகிய 7 பேரை செல்லும் வழியில் அழைத்து சென்றார்.
அப்போது தருமபுரி மாவட்டம், பென்னாகரம் செல்லும் சாலையில் ஏறு பள்ளி அருகே வந்த போது திடீரென கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் இருந்த சினியோன் உள்பட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் இறந்த தேவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.