என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "People complaint"
- ஜெ.ஊத்துப்பட்டியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
- பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும் என மனு கொடுத்தனர்.
கொடைரோடு:
கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசுக்கு சொந்தமான இடங்களில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
அவற்றை அகற்றுவது குறித்து மனு அளிக்கப்பட்டது. ஜம்புதுரைகோட்டை ஊராட்சி மன்றத்துணைத்தலைவர் சிவராமன் அளித்த புகாரின்பேரில் 2 தெருக்கள் மட்டும் சர்வே செய்யப்பட்டு ஒரு கோவில் தடுப்புச்சுவர் உள்பட 14 இடங்கள் பட்டியலை வருவாய்த்துறையினர் கொடுத்தனர்.
ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைதொடர்ந்து சமாதானகூட்டம் நடைபெற்றது. நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் பவுன்தாய் காட்டுராஜா முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ கணேசன், ஊராட்சித்துணைத்தலைவர் சிவராமன் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஆக்கிரமிப்புகளை முழுவதும் அளந்து அகற்ற வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி துணைத்தலைவர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.
இதனைதொடர்ந்து பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவேண்டும் என மனு கொடுத்தனர். அப்போது சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
- 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்தனர்.
- நத்தம் இரட்டை கொலை சம்பவத்தில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியைச் சேர்ந்தவர் தங்கராஜா (வயது 41). டி.வி. மெக்கானிக். இவர் கடந்த 6-ந் தேதி தனது கடை முன்பு நின்று பேசிக் கொண்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த உதயகுமார் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரிவாளால் வெட்டியதில் தங்கராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஒன்று கூடி உதயகுமாரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த உதயகுமாரும் உயிரிழந்தார். அடுத்தடுத்து நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் லிங்கவாடி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து உதயகுமாரை அடித்துக் கொன்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை தேடி வந்தனர்.
இந்நிலையில் தங்கராஜாவின் தந்தை தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு பரபரப்பு புகார் அளித்தனர். அதில் இரட்டை கொலை சம்பவத்தில் நத்தம் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுகின்றனர். குறிப்பாக ஜாதிய ரீதியில் குற்றவாளிகளை அடையாளப் படுத்துகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து ஆண்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் இரவு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் இருக்கும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கனவே போலீசார் மீது அடிக்கடி பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இல்லையெனில் லிங்கவாடி கிராம மக்கள் போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்