search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people death"

    திருக்காஞ்சி மாசி மக விழாவில் தந்தைக்கு திதி கொடுக்க வந்தவர் நீரில் மூழ்கி பலியானார்.

    திருபுவனை:

    திருபுவனையை அடுத்த கொத்தபுரிநத்தத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 71) பால் கறக்கும் தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர்.

    முருகன், மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். மணிகண்டன் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் முருகன் நேற்று திருக்காஞ்சியில் நடைபெற்ற தீர்த்தவாரியில் தந்தைக்கு திதி கொடுக்க சென்றார்.

    அப்போது நீரில் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி விட்டார். அங்கிருந்தவர்கள் முருகனை மீட்டனர். ஆனால், முருகன் இறந்து விட்டது தெரிய வந்தது.

    உடனடியாக வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு குப்புசாமி ஆகியோர் சென்று பிணத்தை கைப்பற்றி கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புன்னம் சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் கடவூர் அருகே, தெற்கு அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவர் தனது மோட்டார் சைக்கிளில் புன்னம்சத்திரம் அருகே பஞ்சயங்குட்டை- நடுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் பழனியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்தும் வேலாயுதம் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    இது குறித்து வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நல்லையனை கைது செய்தனர்.
    சிரியாவில் நிகழ்ந்த கார்குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்கள் 5 பேர் உயிர் இழந்தனர். #Syria #CarBomb
    டமாஸ்கஸ்:

    சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள புகழ்பெற்ற சந்தையில் நேற்று முன்தினம் மாலை ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து வெடிக்க செய்தனர். இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது.

    மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்களில் 5 பேர் உயிர் இழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் இதில் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  #Syria #CarBomb 
    மேலூர் மற்றும் கொட்டாம்பட்டியில் நடந்த வெவ்வேறு விபத்துக்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    மேலூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது38). இவர் ராஜபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதன் காரணமாக குடும்பத்துடன் இவர் அங்கேயே வசித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணிக்கம் தனது மனைவி நாகம்மை, மகன் முத்துராமன் (6), 10 மாத பெண் குழந்தை முத்து மீனா ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

    மேலூர் அருகே கொட்டாம்பட்டியை அடுத்துள்ள வலைச்சேரிபட்டி 4 வழிச்சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது.

    இதில் தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் மாணிக்கம் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் நாகம்மை மற்றும் 2 குழந்தைகள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் வசந்தி, ஏட்டு சுரேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர் அருகே உள்ள திருவாதவூரை அடுத்துள்ள பழையூரைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் திருவாரூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சரவணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்த அஜித்பாண்டி படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலூர் அருகே உள்ள சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (70). இவர் கூத்தப்பன்பட்டி 4 வழிச்சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. இதில் பாண்டியராஜன் பரிதாபமாக இறந்தார்.

    இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8-ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். இது புகை பிடிப்பதால் ஏற்படும் உயிர் இழப்பை விட அதிகமாகும். #AirPollution #India
    புதுடெல்லி:

    காற்று மாசுவினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு தொடர்ந்து காற்று மாசு அதிகரித்தபடி இருக்கிறது.

    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது சம்பந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8-ல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். இது, புகை பிடிப்பதால் ஏற்படும் உயிர் இழப்பை விட அதிகமாகும்.

    காற்று மாசு குறிப்பிட்ட அளவுக்கு குறைந்து இருந்தால் இந்தியாவில் சராசரி வாழ்க்கையானது 1.7 வருடங்கள் அதிகரிக்கும். ஆனால், காற்று மாசு உயர்ந்து வருவதால் இதை பாதித்துள்ளது. காற்று மாசுவினால் ஏராளமானோர் உயிர் இழப்பதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் அவை ஏற்படுத்துகின்றன.

    நாட்டில் 77 சதவீத மக்கள் மோசமான காற்று மாசுவை சந்திக்கும் நிலை இருக்கிறது.



    அதாவது, காற்றில் எவ்வளவு மாசு இருந்தால் பாதுகாப்பானது என்ற வரையறை உள்ளது. அதைவிட அதிகமாக காற்றில் மாசு கலந்துள்ளது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் காற்று மாசு மோசமாக இருக்கிறது.

    கடந்த ஆண்டு மட்டுமே காற்று மாசுவினால் 12 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அதில் 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் வீட்டுக்குள் ஏற்பட்ட காற்று மாசுவினால் உயிர் இழந்தவர்கள் ஆவர்.

    இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 26 சதவீத குழந்தைகள் காற்று மாசுவினால் மரணம் மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கிறார்கள்.

    கடந்த ஆண்டு மட்டும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் காற்று மாசுவினால் உயிர் இழந்து இருக்கிறார்கள்.

    70 வயதுக்குள் மரணம் அடைபவர்களில் பாதி பேர் காற்று மாசுவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

    இந்தியாவில் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தான் காற்று மாசு மோசமாக இருக்கிறது. குறிப்பாக பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் காற்றில் அதிக அளவு மாசு கலந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AirPollution #India
    கோட்டக்குப்பத்தில் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேதராப்பட்டு:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 41). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

    இவர் முதலியார்பேட்டை போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    இவர் பணம் வசூல் செய்வதற்காக மரக்காணத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு பணத்தை வசூலித்து விட்டு மீண்டும் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    கோட்டக்குப்பம் இந்திரா நகர் பகுதியில் வந்த போது, எதிரே வேகமாக வந்த கார் பழனிசாமி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் திருமணி, சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் தவளக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதும், அவர்கள் சென்னைக்கு சென்றதும் தெரியவந்தது.

    மேலும் போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி அருகே அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் ஒருவர் பலியானார். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெரு பகுதியில் வரும் போது ஒரு வளைவில் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. 

    இதில் அந்த ஆட்டோவில் பயணம் செய்த மகாராஜகடை அருகே உள்ள ஆட்டுமந்தை பகுதியை சேர்ந்த சின்னதம்பி(49), சாந்தி(38), மங்கம்மாள்(44), மகாலட்சுமி (55) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று சின்னதம்பி இறந்தார். 

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    மெரினாவில் கடலில் மூழ்கி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் நரேஷ் குமார், கமலேஷ். இருவரும் பாரிமுனை தங்க சாலையில் தங்கி இருந்து இரும்பு கதவுகள் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்தனர்.

    நேற்று மாலை 6 மணி அளவில் நரேஷ் குமாரும், கமலேசும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்கு பொதுப்பணி துறை அலுவலகம் எதிரே இருவரும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கினர். தண்ணீரில் மூழ்கிய 2 பேரும் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கூச்சல் போட்டனர்.

    கடற்கரையில் இருந்த இளைஞர்கள் சிலர் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. நரேசும், கமலேசும் கடலில் மூழ்கினர். உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர். 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலையில் நரேஷ்குமாரின் உடல் கரை ஒதுங்கியது. உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கமலேசின் உடலை தேடி வருகிறார்கள்.

    திருபுவனையில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்றவர் தவறி விழுந்து இறந்து போனார்.

    திருபுவனை:

    திருபுவனை தோப்பு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 31). லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் அங்கு நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக வீட்டு தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துக்குமார் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முத்துக்குமார் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்து போன முத்துக்குமாருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆகிறது. முத்துக்குமாருக்கு ஜெயா என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புன்னம்சத்திரம் அருகே புளிய மரத்தில் கார் மோதி குப்புறக் கவிந்த விபத்தில் ஒருவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் அருகே வெங்கமேடு ராம்நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (41). இவர் எலக்ட்ரிக்  கடை வைத்து நடத்தி வந்தார்.  இந்நிலையில் வேலைக்காக இவரும் குளித்தலை பொய்யாமணி பங்களாபுதூரைச் சேர்ந்த தெய்வசிகாமணி (29) மற்றும் அதேபகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேர் காரில் கரூரில் இருந்து ஈரோடுக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்து ஈரோட்டில் இருந்து கரூர் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். காரை செந்தில்குமார் ஓட்டி வந்தார். 

    புன்னம்சத்திரம் அருகே குட்டக்கடை பகுதிக்கு கார் வந்தபோது, கார் நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி, கார் குப்புறக் கவிழ்ந்தது. காரை  ஓட்டி வந்த செந்தில் குமாருக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில்பலத்த  காயம் ஏற்பட்டது. காரில் இருந்த தெய்வசிகா மணி மற்றும் கார்த்திக் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். செந்தில்குமாரை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார்  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி  செந்தில்குமார் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    திருமங்கலம் மற்றும் டி.கல்லுப்பட்டியில் நடந்த சாலை விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கட்ராம்பட்டியை சேர்ந்தவர் வரதராஜப்பெருமாள் (வயது 40). ஓட்டல் தொழிலாளியான இவர் இன்று அதிகாலை திருமங்கலம் தியேட்டர் பகுதியில் உள்ள ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த வரதராஜப்பெருமாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை செல்லூர் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன் மகன் பாலாஜி (25). இவரும் உத்தங்குடியை சேர்ந்த செல்லப்பாண்டியும் (23) மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்துக்கு புறப்பட்டனர். டி.கல்லுப்பட்டி அருகே உள்ள தாதங்குளம் விலக்கில் வந்தபோது. எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். செல்லப்பாண்டி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிசை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தோப்பூர் கிழக்கு தெருவை சேர்ந்த டிரைவர் ராஜா (33) என்பவரை கைது செய்தனர்.

    வெவ்வேரு விபத்துக்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் பலியானார்கள். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (வயது40). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கள்ளிக்குடியில் இருந்து திருமங்கலம் நோக்கி வந்தார்.

    திருமங்கலம் 4 வழிச்சாலையில் அமைக்கப்பட்டு இருந்த போக்குவரத்து தடுப்பு வேலியில் எதிர் பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமர் தூக்கி வீசப்பட்டார்.

    பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராமர் உயிர் இழந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பாரைப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (45). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அணைக்கரைப்பட்டியில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    சின்னவண்டாரி அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டர் மோதியதில் அதே இடத்தில் துடிதுடித்து பலியானர்.

    இதுகுறித்து அவரது மனைவி தங்கவேலு கொடுத்த புகாரின்பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×