என் மலர்
நீங்கள் தேடியது "people of Tengumarahada"
- கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது.
- பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
கேரள மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. இதேபோல் கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் கோவை பில்லூர் அணை பலத்த மழையால் நீர் வரத்து அதிகரித்து நிரம்பியது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை பில்லூர் அணையிலிருந்து உபரி நீராக 14,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹாடா, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கள்ளட்டி, ஊதிக்குப்பம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த பகுதி கிராம மக்கள் மாயற்றை கடந்து தான் வியாபாரம் மற்றும் வேலைக்கு செல்ல வேண்டும்.
இதேபோல் இந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கும் மாயாற்றக் கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்து உள்ளதால் இப்போது மக்கள் செய்வது தெரியாமல் திகைத்து வருகின்றனர்.
ஏற்கனவே மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடப்பதும் பரிசலில் செல்வதும் இருந்து வருகின்றனர்.
இதனால் இந்த பகுதியில் தொங்கு பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட வருடங்களாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க முடியவில்லை. இதனால் தெங்குமரஹடா பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமத்துக்குளே முடங்கி கிடக்கின்றனர்.
- இதன் காரணமாக இன்று பஸ்சில் பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பஸ் பயணிகள் இன்றி வெறிச்சோடி மீண்டும் திரும்பி சென்றது.
சத்தியமங்கலம், ஜூலை. 15-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா, கள்ளம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் தான்.
இங்குள்ள மக்கள் பிழைப்புக்காகவும், வியாபாரத்துக்காகவும் மாயாற்றை பரிசல் மூலம் கடந்து தான் சத்தியமங்கலம் செல்ல வேண்டும்.
இந்த பகுதி மக்கள் வசதிக்காக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து தினமும் அரசு பஸ் தெங்குமரஹடா மாயாற்று பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பஸ் மேட்டுப்பா ளையம், பவானிசாகர் வழியாக தெங்குமரஹடா பகுதிக்கு தினமும் காலை நேரத்தில் வந்து செல்லும். அப்போது கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மாயாற்றை பரிசலில் கடந்து அங்கு தயாராக நிற்கும் பஸ்சில் ஏறி சத்தியமங்கலம் செல்வார்கள்.எப்போதும் இந்த பஸ் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக மாயாற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெ ருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பரிசல் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இன்று வழக்கம் போல் கோத்தகிரியில் இருந்து அரசு பஸ் தெங்குமரஹடா மாயாற்று பகுதிக்கு வந்தது.
ஆனால் தற்போது மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பரிசல் இயக்க முடியவில்லை. இதனால் தெங்குமரஹடா பகுதி மக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கிராமத்துக்குளே முடங்கி கிடக்கின்றனர்.
இதன் காரணமாக இன்று பஸ்சில் பயணிகள் யாரும் ஏறவில்லை. இதனால் பஸ் பயணிகள் இன்றி வெறிச்சோடி மீண்டும் திரும்பி சென்றது.