என் மலர்
நீங்கள் தேடியது "people on hunger strike"
- வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது.
- கூடாரத்தில் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி க்குட்பட்ட 45 வார்டுகளில் அகற்றப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை கிடங்கு இல்லாததால் ஆங்காங்கே ஆற்று ஓரமாகவும், சாலைகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் பொதுமக்கள் பாதிப்ப டைந்து வருகின்றனர். இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் நவேந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆங்காங்கே அகற்றப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் பரவியது. இதனை தொடர்ந்து ஏற்கனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இதன் மூலம் விவசாய நிலம் முற்றிலும் பாதிக்கப்படும் என கூறி இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் செய்து வந்தனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கூட்டம் நடைபெற்றதில், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை வெள்ளப்பாக்கம், மருதாடு, வரக்கால்பட்டு, அழகிய நத்தம், இராண்டாயிரம் வளாகம், குமராபுரம் ஆகிய ஊரை சேர்ந்த அனைத்து கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சி குப்பைகளை கொட்ட திட்டமிடுவதை கைவிட வேண்டும். அரசு விதைப்பண்ணை நிலத்தை மீண்டும் விவசாய பண்ணையாக மாற்ற முன்வர வேண்டும்.
அரசு விதை பண்ணை நிலம் அருகில் பள்ளிகள் உள்ளதால் மாணவர்களின் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். தென்பெண்ணையாறு அருகாமையில் உள்ளதால் மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு தொட ர்ந்து ஏற்படுவதால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெருமளவில் வெள்ளப்பாக்கம் பகுதியில் திரண்டனர். பின்னர் அங்கு அமைக்க ப்பட்டிருந்த கூடாரத்தில் தங்கள் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், விவசாயிகள் என தொடர்ந்து குப்பை கிடங்கு அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி வருகின்றனர் .
இந்த நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க வேண்டு மானால் மக்களாகிய உங்கள் அனுமதியை முழுமையாக பெற்ற பிறகு குப்பை கிடங்கு அமைக்கப்படும். ஆகையால் உங்கள் போராட்டத்தை கைவிட்டு முக்கிய பிரமுகர்கள் 10 நபர்கள் கடலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என தெரிவித்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ஏற்கனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது இது போன்று அதிகாரிகள் தெரிவித்துவி ட்டு சென்றனர். ஆனால் இதனால் வரை இதற்கு தீர்வு ஏற்படவில்லை. மேலும் இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்கு அரசு முழு வீச்சில் நடவடி க்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் போராட்ட களத்திற்கு நேரில் வருகை தந்து இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் தான் எங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என திட்ட வட்டமாக தெரிவித்தனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்க ப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது.