search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "People's Movement"

    • அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
    • மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

    நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் இன்று தனது கட்சியின் பெயரை வெளிட்டார். அதில் கூறியிருப்பதவாது:

    தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் "ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன.

    ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" (பிறப்பால் அனைவரும் சமம்) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.

    • பாரத ரத்னா எம்ஜிஆர் மக்கள் நிலை இயக்கம் தொடக்க விழா மற்றும் இயக்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • மேலும் எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு சேவைகள் மற்றும் பொது நலப் பணிகள் செய்து எம்.ஜி.ஆரின் புகழை பரப்ப வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    பாரத ரத்னா எம்ஜிஆர் மக்கள் நிலை இயக்கம் தொடக்க விழா மற்றும் இயக்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் கராத்தே வளவன், கருணாநிதி, அசோக சுப்பிர மணியன், சம்பத், மாசிலா குப்புசாமி, அண்ணா ஜெகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    மேலும் எம்.ஜி.ஆர். மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு சேவைகள் மற்றும் பொது நலப் பணிகள் செய்து எம்.ஜி.ஆரின் புகழை பரப்ப வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    மேலும் எம்.ஜி.ஆரின் பிறந்த தினம் மற்றும் நினைவு நாள் ஆகியவற்றை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    • பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார்.
    • மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பஸ் நிலையம் அருகில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில்பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய பசுமைப் படையினர், அல்ட்ரா டெக் தன்னார்வல அமைப்பினர், மக்கள் மகிழ் அறக்கட்டளை, அரிமா சங்கத்தினர் ஆகியோர் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

    பேரூராட்சிகளின் உதவி இயக்குனரக (பொறுப்பு) உதவி செயற் பொறியாளர். எம். கணேசன் கொடியசைத்து தொங்கி வைத்தார். அந்தியூர்பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் வரவேற்று நீர்நிலைகள் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

    பின்பு விழிப்புணர்வு பேரணி அந்தியூர் அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர்வீதி, ஜி.எச். கார்ணர், பர்கூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பத்ரகாளியம்மன் கோவில் அருகே நிறைவடைந்தது. மேலும் அந்தியூர் காமராஜ் சாலையில் மயான பகுதிக்கு செல்லும் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பாண்டி யம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனி சாமி, துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, செந்தில், பொறியாளர்கள் சோம சுந்தரம், முருகேசன் மற்றும் சாந்து முகமது, தினேஷ், அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி, மக்கள் மகிழ் அறக்கட்டளை தலைவர் ராஜன்.எம்.பொன்னு சாமி, ராமகிரு ஷ்ணன் தூய்மை பணியா ளர்கள் அலுவலகப் பணி யாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
    • தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் செல்வராஜ் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட துணி பைகளை பொதுமக்களுக்கு வழங்கினர் .

    பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர் . இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் திருப்பூர் மாநகரை தூய்மையாக பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.

    பள்ளி மாணவிகளுக்கு மக்கும், மக்கா குப்பையை பிரித்து வழங்கும் வகையில் குப்பை பாக்சை செல்வராஜ் எம்.எல்.ஏ., தினேஷ்குமார் அருகில் மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் மற்றும் பலர் உள்ளனர்.

    • வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம், என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
    • மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம், என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் பல்வேறு வகையில் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த இயக்கத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம், காணொலி வாயிலாக நடைபெற்றது.

    முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட மற்றும் வட்டக்கல்வி அலுவலர்கள், கல்லூரி முதல்வர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதில் அறிவுறுத்தப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:-

    பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி ஏற்பு நடத்த வேண்டும். தூய்மை இயக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது தொடர்பான தலைப்பு களில் போட்டிகள் நடத்த வேண்டும்.பள்ளி வளாகம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறத்தின் தூய்மை பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் செயல்பட அறிவுறுத்த வேண்டும். தூய்மை இயக்கம் குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நடத்த மாநகராட்சி சுகாதார பிரிவினர் தயாராக உள்ளனர். கல்வி நிறுவனங்கள் அதைப் பயன்படுத்தி, மாணவர்கள் மத்தியில் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக கொண்டு சேர்க்க ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    ×