என் மலர்
முகப்பு » perundurai petrol bunk fire
நீங்கள் தேடியது "perundurai petrol bunk fire"
பெருந்துறையை அடுத்துள்ள வாவிக்கடை பெட்ரோல் பங்க் அருகே ரோட்டோரத்தில் குவித்து வைக்கப்பட்ட குப்பையில் ஏற்பட்ட தீயினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள வாவிக்கடை பகுதியில் பைபாஸ் ரோட்டில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பங்கின் அருகே ரோட்டோரத்தில் சுற்றுப்புறப்பகுதியில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட குப்பைகள் தேங்கி கிடந்தன.
இந்த குப்பைகளுக்கு நேற்று காலை யாரோ சிலர் தீ வைத்துள்ளனர். இந்த குப்பையில் பிடித்த தீ வேகமாக காற்றின் காரணமாக கொளுந்துவிட்டு எரிந்தது. இதனைக் கண்ட அந்தப்பகுதியினர் அச்சத்துடன் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்ட தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். அருகில் பெட்ரோல் பங்க் இருந்ததால் தீயணைப்பு வீரர்களும் மிகவும் பாதுகாப்புடன் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
×
X