என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Perur"
- ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.
- மாணிக்கவாசகர் திருவீதி உலாவும், திருவெம்பாவை உற்சவமும் நடக்கிறது.
பேரூர்
மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூர் பட்டீசுவரர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா தரிசன விழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம்.
ஆருத்ரா தரிசன விழா நாளை மறுநாள் (6-ந் தேதி) நடக்கிறது. இந்த விழாவானது, கடந்த 28-ந் தேதி காலை கனகசபை மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு காப்பு அணிவித்தலுடன் தொடங்கியது.
இதைத் தொடர்ந்து காலை, மாலை மாணிக்கவாசகர் திருவீதி உலாவும், திருவெம்பாவை உற்சவமும் நடக்கிறது.
நாளை மறுநாள் (6-ந் தேதி) ஆருத்ரா தரிசன விழா, அதிகாலை 3.00 மணிக்கு பட்டீசுவரர், பச்சை நாயகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்குகிறது.
பின்னர், காலசந்தி பூஜை நடத்தப்பட்டு, நடராஜர், சிவகாமியம்மன், மாணிக்கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், 4 மணிக்கு மேல் பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனப் பொடி உள்ளிட்ட 16 வகை விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ர கலச தீர்த்தாபிஷேகம் நடக்கிறது. இறுதியாக, 6 மணிக்கு மேல் நடராஜரும், சிவகாமி அம்பாளும் சமேதரராக எழுந்தருளி, கனகசபை மண்டபத்தில் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சியளிக்கின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
- பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, தீத்திபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்ளது.
- பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
பேரூர்
சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டி பேரூர் பேரூராட்சி, பேரூர் செட்டிபாளையம் ஊராட்சி, தீத்திபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்ளது.
இந்த பகுதிகளில் சிறுவாணி மெயின் ரோடு பகுதிகளில், ஏராளமான குதிரைகள் குட்டிகளுடன் காலை, இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றி தெரிகிறது.
இதனால் காலை, மாலை வேலைக்கு சென்று திரும்பும் வாகன ஓட்டிகளும், பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும், ஆறுமுகக் கவு ண்டனூர், பச்சாபாளையம், செட்டி பாளையம், காளம்பா–ளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஊருக்குள் புகுந்துவிடும் குதிரை கூட்டங்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பின் தெருக்களிலும், விவசாய நிலங்களிலும் புகுந்து, அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.
ஒன்றுக்கொன்று கோபத்துடன் சண்டை போட்டுக் கொண்டு ஆவேசமாக ரோடுகளில் ஓட்டம் பிடிப்பதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக, பேரூரிலிருந்து சிறுவாணி மெயின் ரோட்டில் தெற்கே மாதம்பட்டி வரை, ஆங்காங்கே குதிரைகள் கூட்டம் கூட்டமாக ரோடுகளில் உலா வருகிறது.
இதனால் பைக், கார், லாரி, பஸ்களில் செல்லும்போது கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால், காலையில் அலுவலகம் மற்றும் வேலைக்கு அவசரமாக செல்வோர் சிரமப்படுவதோடு, ரோடுகளில் குதிரைகள் கூட்டம், கூட்டமாக குறுக்கிலும், மறுக்கிலும் வேகமாக ஓடுவதால் ஆங்காங்கே விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.
மேலும், சிறுவாணி மெயின் ரோட்டை ஒட்டியுள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு தெருக்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக ஆவேசமாக கணைத்தபடி ஓட்டம் பிடித்து ரோட்டில், குறுக்கும், மறுக்கிலும் ஓடி வருகிறது.
யாரோ தனியார் மூலம், இந்த குதிரைகள் பொதுவெளியில் விடப்பட்டு வருகிறது. பேரூர் போலீசாரிடமும், இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும், யாரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
- போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பேரூர்
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில், வரும் மகாளய அமாவாசை நாளில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்துவது வழக்கம்.
பேரூர் நொய்யல் படித்துறையில் அமர்ந்து அரிசி, பருப்பு, காய்கறி எள்சாதம் ஆகியன படையல் வைத்து, இறந்த போன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் வழிபாடு நடத்தினால், தங்களுக்கு தோஷம் நீங்கி, புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், ஏற்கனவே ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு விழா சமயங்களில், கொரோனா தொற்று குறைந்தன் காரணமாக, பேரூர் படித்துறையில் திதி மற்றும் தர்ப்பண வழிபாடு நடத்த மாவட்ட மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக, இன்று காலை மகாளய அமாவாசையை யொட்டி, பேரூர் பட்டீசுவரர் கோவில் மற்றும் படித்துறையில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். படித்துறையில் திரண்ட பக்தர்கள், பொதுமக்கள் இறந்துபோன முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பண வழிபாடு செய்தனர்.
இதையடுத்து, பேரூர் கோவிலுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் விளக்கு ஏற்றி, சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். மகாளய அமாவாசை வழிபாட்டை ஒட்டி, பேரூர் நொய்யல் படித்துறை, கோவில் நுழைவாயில் மற்றும் பேரூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழிபாட்டுக்கு, அதிகமான பக்தர்கள் திரண்டதால்,இன்று காலை பேரூர் பஸ் ஸ்டாப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்காமல் சென்று விடுவதாக புகார் கூறி வருகின்றனர்.
- பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்ல முடியாமல் இப்பகுதி குடியிருப்பு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
பேரூர்:
பேரூர் அருகே தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சிறுவாணி மெயின்ரோட்டில், மரக்கடை பஸ் ஸ்டாப் பகுதி உள்ளது. இந்த பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்பதில்லை என தெரிகிறது.
குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிற்காமல் சென்று விடுவதாக புகார் கூறி வருகின்றனர்.
இதனால், குறித்த நேரத்துக்கு பள்ளி, கல்லூரி வேலைக்கு செல்ல முடியாமல் இப்பகுதி குடியிருப்பு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இப்பிரச்சனைக்கு தீர்வு காணக் கோரி, ஏற்கனவே, பேரூர் போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் மூலமாக பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த பல மாதங்களுக்கு முன்பே, கோரிக்கை வைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எவ்வித நடவ–டிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனால், ஆவேசமடைந்த பொதுமக்கள், இன்று காலை மரக்கடை பஸ் ஸ்டாப் பிரிவு-சிறுவாணி மெயின் ரோட்டில், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறுவாணி மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் வந்த 10 அரசு பஸ்களை சிறைபிடித்து போ–ராட்டத்தில் ஈடுபட்ட–னர்.
இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் இறுதியில், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் மறியலை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், சிறுவாணி மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோவை:
கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சக்தி. இரவது மனைவி ஜோதி (வயது 22). இவர் மிட்டாய் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் மண்எண்ணை அடுப்பில் உணவு சமைத்துக்கொண்டு இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜோதியின் உடையில் தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து ஜோதியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை பேரூர் அருகே உள்ள அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது 68). சம்பவத்தன்று இவர் பேரூர்-கோவை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மாரியம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்