என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pet"
- ரூ.50 செலுத்தி செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.
- இந்த உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும்.
சென்னை :
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் செல்லப்பிராணிகளுக்கு இணைய வழி உரிமம் வழங்கும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் மேயர் பிரியா தொடங்கி வைத்தார். அந்த வகையில், செல்லப்பிராணிகளை வளர்ப்போர், சென்னை மாநகராட்சியின் இணையத்தில் தங்களது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பதிவு செய்து கொள்கின்றனர்.
பின்னர், விவரங்கள் மண்டல கால்நடை உதவி டாக்டர்களால் சரிபார்க்கப்பட்டு செல்லப்பிராணிக்கான உரிமம் உறுதிபடுத்தப்படுகிறது. இதற்கான கட்டணமாக ரூ.50 செலுத்தி செல்லப்பிராணி வளர்ப்பதற்கான உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமம் வழங்கப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இத்திட்டத்தின் மூலம் 376 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர், 121 பேருக்கு செல்லப்பிராணிகள் வளர்க்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அதற்கான உரிமத்தை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர்.
- பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சென்னை:
உலக விலங்கு வழி பரவும் நோய்கள் தினம் இன்றும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் மாதவரத்தில் உள்ள புறநகர் கால்நடை மருத்துவமனையில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில் 250-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. தங்கள் குழந்தையை போல செல்லப்பிராணியை கையில் தூக்கிக்கொண்டு பெண்கள் வந்தனர். வெறிநாய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கே.என்.செல்வகுமார் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக பிரதான கட்டிடத்தில் இருந்து வெறிநாய் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாணவ-மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர். இந்நிகழ்ச்சியில் இயக்குனர் சவுந்தர்ராஜன், டாக்டர் செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
- சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவர் வகுப்புக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு துணையாக ஜஸ்டின் என்ற தனது வீட்டு வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார்.
கிரேசுடன் அனைத்து வகுப்புகளிலும் அந்த நாயும் கலந்து கொண்டுள்ளது. எனவே அந்த நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இந்நிலையில் கிரேஸ் தனது பாடத்தில் முழுதேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு முடித்ததையடுத்து அவருக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பட்டம் பெற பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது, கிரேசுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடை அணிவித்து, டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
Seton Hall President Joseph E. Nyre, Ph.D. presents Justin, the service dog for Grace Mariani, of Mahwah, NJ, with a diploma for attending all of Grace's classes at Seton Hall. pic.twitter.com/sZgHD5Fs3X
— Seton Hall (@SetonHall) May 23, 2023
குழந்தைகள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் காதைப் பிடித்து இழுக்கும். வாலைப் பிடித்து கடிக்கும். இந்த இம்சைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் செல்லப்பிராணிகள் திருப்பி கடித்துவிடும் அபாயம் உள்ளது. அதனால் எவ்வளவுதான் நல்ல பிராணியாக இருந்தாலும் குழந்தைகளிடமிருந்து அவைகளை சற்று விலக்கி வையுங்கள்.
குழந்தைகளுக்கும்- செல்லப்பிராணிகளுக்கும் இடையே எப்போதும் தேவையான இடைவெளி இருக்கவேண்டும். பிராணிகளிடம் எப்படி பழகவேண்டும் என்பதை பெற்றோர் குழந்தைகளுக்கு உடனிருந்து கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளின் கண்களை நோண்டுவது, விளையாட்டாக கையில் கிடைத்ததை அதன் மீது தூக்கி எறிந்து விளையாடுவது, அவைகளை பயமுறுத்துவது போன்றவைகளில் ஈடுபட குழந்தைகளை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
நாய்கள் மனிதர்களிடம் மிக அன்போடு நன்றியோடு பழகக்கூடியவை. அவைகளுக்கும் குழந்தைகளைப் போல் அன்பு தேவை. குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செல்லப்பிராணிகளை தூர விலக்கும் போது அவைகள் மனதுக்குள் வருத்தப்படும். அதுவே குழந்தைகள் மீது அவைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அதற்கு இடம் கொடுக்காமல் வளர்ப்பு பிராணிகள் மீதும் பாசம் செலுத்துங்கள்.
குழந்தைகளோடு நாய்களை விளையாட அனுமதிக்கலாம். ஆனால் அப்போது பெற்றோர் அருகில் இருக்கவேண்டும். செல்லப் பிராணியோடு எப்படி விளையாட வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். படிப்படியாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். பிராணிகள் குழந்தைக்கு பாதுகாப்பாக இருக்க நீங்கள் செயல்கள் மூலம் சொல்லிக் கொடுங்கள். அவைகளும் புரிந்துகொள்ளும்.
வளர்ப்பு நாய்களை குழந்தைகளின் படுக்கையில் புரள அனுமதிக்கவேண்டாம். குழந்தைகள் சாப்பிடும் தட்டில் வாய்வைக்கவோ, குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை முகர்ந்து பார்க்கவோ வாய்ப்பளிக்கவேண்டாம். செல்லப்பிராணிகள் அன்பிற்காக ஏங்குபவை. அவைகளிடம் அன்பாக பழகுங்கள். அதேநேரம் குழந்தைக்கு ஆபத்து நேராமலும் பார்த்துக்கொள்ளுங்கள். குழந்தையால் அவைகளுக்கும் ஆபத்து வரக்கூடாது. ஒருபோதும் செல்லப்பிராணியையும் குழந்தையையும் தனியாக பழக அனுமதித்து விடக்கூடாது.
செல்லப்பிராணியோடு குழந்தை எவ்வளவுதான் அன்போடு பழகினாலும் உங்கள் கண்காணிப்பு இருந்தால் மட்டுமே ஆபத்துகளை தவிர்க்கலாம். வெளியில் வாக்கிங் போகும்போது செல்லப்பிராணி, குழந்தை இரண்டையும் அழைத்துச் செல்லலாம். அப்படி செய்தால் வளர்ப்பு பிராணிகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை அவை புரிந்துகொள்ளும். குழந்தைக்கும்- வளர்ப்பு பிராணிக்கும் இடையே நல்ல புரிதலும் உருவாகும்.
பொதுவாகவே வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். தடுப்பு ஊசிகளும் போட வேண்டும். செல்லப் பிராணிகளோடு விளையாடுவது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனாலும் சில நேரங்களில் வளர்ப்பு பிராணிகளை தள்ளிவைக்கவேண்டும். குழந்தைக்கு உணவூட்டும்போது வளர்ப்பு பிராணிகளை அருகில் சேர்க்கவேண்டாம். அதன் உரோமம் உணவுப் பொருளில் உதிரக்கூடும். குழந்தைகள் வீறிட்டு அழுவதும், கத்துவதும் பிராணிகளுக்கு திகிலை ஏற்படுத்தும். அப்போது அவைகளின் அச்சத்தை போக்கவேண்டும். நாளடைவில் பழகிவிடும். குழந்தைகளிடம் அதிக அன்பு செலுத்துவதை பார்த்து சில நேரங்களில் நாய்கள் பொறாமைப்படுவதுமுண்டு.
அப்போது அவைகள் மீதும் அக்கறை காட்டுகிறோம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளின் நடவடிக்கைகளை செல்லப்பிராணிகள் புரிந்துகொள்ள சில காலம் ஆகும். குழந்தைகளுக்கும், பிராணிகளோடு எப்படி பழகவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள அவகாசம் தேவை. அதுவரை இருவரையும் நம் கண்காணிப்பில் வைத்துக்கொள்ளவேண்டும்.
குழந்தைகளுக்கு மற்ற உயிர்களை நேசிக்கும் பண்பு இளமையிலேயே ஏற்பட செல்லப்பிராணிகள் உதவுகின்றன. விளையாட்டின் எல்லை என்ன என்பதையும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள். அதனை அடிப்பது, காதை பிடித்து இழுப்பது, கடிப்பது போன்றவை விளையாட்டல்ல துன்புறுத்தல் என்பதையும் குழந்தை தெரிந்துகொள்கிறது.
அன்பை மற்ற உயிரினங்களோடு பகிர்ந்துகொள்ளவும் வளர்ப்பு பிராணிகள் மூலம் குழந்தைகள் கற்றுக்கொள்கின்றன. செல்லப்பிராணிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. அன்போடும், நன்றியோடும் நடந்துகொள்கிறது. குழந்தைகளின் மகிழ்ச்சி, உற்சாகத்திற்கு செல்லப்பிராணிகள் காரணமாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை கடைப்பிடிக்க கற்றுக்கொடுங்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்