search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PetGraph"

    • சுயதொழில் பயிற்சி தொடக்க விழா மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நடந்தது.
    • நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள்ரூபி, மார்ட் டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மதுரை

    இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் மற்றும் பெட்கிராட் நிறுவனம் இணைந்து நடத்தும் 26 நாட்கள் இலவச கெமிக்கல் இல்லாத சோப்பு, ஹேண்ட் வாஷ், பாடி வாஷ், தயாரிக்கும் இலவச பயிற்சி தொடக்க விழா மதுரை எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் பகுதியில் உள்ள பெட்கிராட் அலுவலகத்தில் நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமையில் நடந்தது.

    நிர்வாகிகள் கிருஷ்ண வேணி, சாராள்ரூபி, மார்ட் டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட தாட்கோ மேலா ளர் திருநாவுக்கரசு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசு கையில், மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கி தொழில் முனைவராக மாறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வரு கிறது. 35 சதவீதம் மானி யமும் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளும் பெற ஆன்லைன் மூலமாக செயல்படுத்தலாம் என்றார்.

    தாசில்தார் கோபி பேசு கையில், பயிற்சி பெறும் பயனாளிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அவசியம், குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பு சேர்க்க வேண்டும் என்றார்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில், தொழில் தொடங்க மானியத்துடன் வங்கி கடன் பெற அனை வரும் தயாராக வேண்டும். வங்கியின் வாயிலாக அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.

    இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் அனைவரும் தொழில் முனைவராக மாற வேண்டும் என்பதை மட்டும நோக்கமாக வைத்து பயிற்சியை தொடங்குங்கள் என்றார். பெட்கிராட் தாளாளர் சுப்புராம் பேசுகையில், பெண்களின் முன்னேற்றமே ஒவ்வொரு இல்ல ங்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் இந்த நாட்டினுடைய முன்னேற்றம் என்றார். முடிவில் பயிற்சியாளர் ஐஸ்வர்யா நன்றி கூறினார்.

    ×