என் மலர்
நீங்கள் தேடியது "petition to investigate BJP leader"
- தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர்
- கார் வெடி விபத்து நடந்ததும் போலீஸ் விசாரணையை தொடங்கி விட்டது.
கோவை,
திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோவை உக்கடத்தில் காரில் உள்ள சிலிண்டர் வெடித்து காரில் பயணித்த நபர் பலியானார். மேலும் காரும் வெடித்து சிதறியது. இது தொடர்பாக தமிழக போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்துள்ளனர். கோவையில் எவ்வித பதற்றமும் இல்லாமல் இயல்பாக மாறிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது.
கார் வெடி விபத்து நடந்ததும் போலீஸ் விசாரணையை தொடங்கி விட்டது. விசாரணை ஆரம்ப நிலையில் இருந்த போதே பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போலீஸ் துறைக்கே தெரியாத பல விபரங்களை கூறியுள்ளார்.
எனவே இது பா.ஜ.கவின் சதித்திட்டமா அல்லது வெடிவிபத்து ஏற்படும் என்று அவருக்கு முன்பே தெரியுமா? அல்லது பொய்யான தகவல்களை மக்களிடையே பேசி விசம பிரசாரம் பரப்பி மதக்கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்துடன் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகர போலீஸ் கமிஷனர் இதுபோன்ற நிகழ்வுகளில் பொது மக்களை எவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தினீர்களோ அதுபோன்று பொது அமைதியை கெடுக்கும் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.