என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "piled"

    • காய்கறி கழிவுகளை கால்நடைகள் மேய்வதால், சாலை முழுவதும் கழிவுகள் பரவி கிடக்கின்றன.
    • ரோட்டில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ராம்சந்த் செல்லும் ரோட்டில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் நடந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் அங்கு கடை வைத்திருக்கும் ஒருசிலர் சாலையின் ஒரு பகுதியில் காய்கறி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் குப்பைகள் குளம் போல் தேங்கி கிடக்கின்றன. அவற்றில் இருந்து துர்நாற்றமும் வீசுகிறது.

    சாலையோர காய்கறி கழிவுகளை கால்நடைகள் மேய்வதால், சாலை முழுவதும் கழிவுகள் பரவி கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கோத்தகிரி பேரூராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாசில்தார் ரோட்டில் குப்பை தொட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×