search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plane fire"

    • துரிதமாக செயல்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.
    • விமானம் 1006-இல் எஞ்சின் சார்ந்த பிரச்சனை எழுந்தது.

    டென்வெர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் உருவானது. விமானம் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, அதில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் கேட் சி38 பகுதியில் நிறுத்தப்பட்ட விமானத்தில் இருந்து முதலில் கரும்புகை வெளியேறியது. அதன்பிறகு தீப்பிடிக்க தொடங்கியது.

    விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து பயணிகள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும், விமான நிலையத்தில் இருந்த தீயனைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு விமானத்தில் தீயை கட்டுப்படுத்தினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் 1006 பாதை மாற்றப்பட்டு டென்வெர் விமான நிலையத்தின் வேறொரு ஓடுபாதையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (எஃப்.ஏ.ஏ.) தெரிவித்தது.

    இது குறித்து எஃப்.ஏ.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், "பத்திரமாக தரையிறங்கியதோடு டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாக நிறுத்தப்பட்டதும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறவனத்தின் விமானம் 1006-இல் எஞ்சின் சார்ந்த பிரச்சனை எழுந்தது. அதன்பிறகு, விமானத்தில் இருந்த 172 பயணிகள், ஆறு பணியாளர்கள் என அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்."

    "பணியாளர்கள், விமான நிலைய குழு மற்றும் அவசர பாதுகாப்பு படையினரின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவர்களின் அதிவேக பணி காரணமாக அனைத்து பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பும் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    தென் ஆப்பிரிக்காவில் பறந்துகொண்டிருந்த விமானம் தீப்பிடித்து எரிந்ததை பயணி ஒருவர் தனது மொபைல் மூலம் எடுத்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. #SouthAfricaPlaneCrash
    ஜோகன்னஸ்பர்க்:

    தென்னாப்பிரிக்காவின் ஒண்டர்பூம் விமான நிலையத்தில் இருந்து கடந்த வாரம் புறப்பட்டுச் சென்ற சிறிய ரக உள்நாட்டு விமானம் விபத்தில் சிக்கியது. புறப்பட்ட சில மணி நேரத்தில் விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் விமானத்தின் ஒரு பக்க இறக்கை தீப்பிடித்து எரிந்தது. அதைப் பார்த்ததும் பயணிகள் அச்சமடைந்து அலறினார்கள். இருந்தும் பதட்டப்படாத விஞ்ஞானிகள் சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் கீழ் நோக்கி திருப்பி தரை இறக்கினார்கள்.


    எனினும் அந்த விமானம் பால் பண்ணை வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 19 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

    இச்சம்பவம் கடந்த வாரம் நடந்தது. இத்தனை பதட்டத்துக்கு இடையே பயணி ஒருவர் விமானம் தீப்பிடித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். திகிலூட்டும் வகையில் அமைந்துள்ள அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    இதற்கிடையே இந்த விபத்தில் விமானி மற்றும் தரையில் தொழிலாளர் என 2 பேர் பலியானதாகவும், 2 பைலட்டுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthAfricaPlaneCrash 


    ×