என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Playoffs"
- 11 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 16-ந் தேதி எதிர் கொள்கிறது.
- 14 புள்ளிகளுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது.
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
ஒவ்வொரு அணியும் 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத வேண்டிய 63-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதனால் குஜராத் அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேற்றப்பட்டது.
ஏற்கனவே 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வாய்ப்பை இழந்து இருந்தன. 11 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 16-ந் தேதி எதிர் கொள்கிறது.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 19 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 'டாப்2' இடத்தை பிடிப்பது உறுதியாகிவிட்டது. கொல்கத்தா நைட்ரைடர்சுக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் இதுவரை 63 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் 7 லீக் போட்டிகள் எஞ்சி உள்ளன.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 3 அணிகள் வெளியேற்றப்பட்டன. பிளேஆப் சுற்றில் நுழைய 3 இடத்துக்கு 6 அணிகள் போட்டியில் உள்ளன.
டெல்லி-லக்னோ இடையே இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணி தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும். பிளேப் ஆப் சுற்றுக்கான போட்டியில் உள்ள அணிகள் பற்றிய விவரம்:-
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயலர்ஸ் 16 புள்ளிகளுடன் இருக்கிறது. பஞ்சாப், கொல்கத்தா அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இந்த இரண்டிலும் தோற்றாலும் அந்த அணியின் பிளேஆப் சுற்று வாய்ப்பு பாதிக்காது. ஏனென்றால் அந்த அணியின் ரன்ரேட் அபாரமாக உள்ளது. முதல் 2 இடங்களை பிடிக்க அந்த அணி ஏதாவது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சிக்கும்.
14 புள்ளிகளுடன் இருக்கும் ருதுராஜ் கொய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 18-ந்தேதி சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் பிளேப் ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். ஏனென்றால் ரன்ரேட் நன்றாக இருக்கிறது.
தோற்றால் மற்ற அணிகள் முடிவை பொறுத்து தலைவிதி இருக்கும். பெங்களுரிடம் தோற்றாலும் அந்த அணியை விட ரன்ரேட்டில் குறைந்து விடாமல் பார்க்க வேண்டும். சி.எஸ்.கே. விளையாடிய பிறகு தான் ஐதராபாத் அணி கடைசி லீக்கில் விளையாடுகிறது. இதனால் பிளேஆப் சுற்றில் நுழைய பெங்களூர் அணியை வீழ்த்துவது கட்டாயமாகும்.
14 புள்ளிகளுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது. குஜராத்துடனும், பஞ்சாப்புடனும் (19-ந்தேதி) மோத இருக்கிறது. இதில் ஒரு வெற்றியை பெற்றாலேயே கம்மின்ஸ் தலைமையிலான அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அந்த அணியின் ரன்ரேட் லக்னோவை விட சிறப்பாக இருக்கிறது. 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் டாப்-2 இடத்துக்கான போட்டிக்கு வரும். 2 போட்டியிலும் தோற்றால் பாதிப்பு ஏற்படலாம்.
அதே நேரத்தில் கடைசி லீக்கில் ஆடுவதால் அதற்கு ஏற்றவாறு விளையாடும். இதனால் அந்த அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
டுபெலிசிஸ் தலைமையிலான பெங்களுரு அணி தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் வென்று முத்திரை பதித்தது. கடைசி லீக்கில் சென்னையை வீழ்த்தினால் 14 புள்ளிகளை பெறும். அதே நேரத்தில் ஐதராபாத்தும், லக்னோவும் 16 புள்ளிகளை எடுத்தால் வாய்ப்பை இழந்துவிடும்.
சென்னையுடன் மோதும் போட்டி நாக்அவுட் ஆகும் வகையில் மற்ற முடிவுகள் இருந்தால் பெங்களூர் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற (200 ரன் எடுத்தல்) வேண்டும். அப்படி நடந்தால் சென்னையை விட ரன்ரேட்டில் முன்னிலை பெறும்.
12 புள்ளியுடன் இருக்கும் லக்னோ எஞ்சிய ஆட்டங்களில் டெல்லி, மும்பையுடன் மோத வேண்டும். ரன் ரேட் மோசமாக இருப்பதால் 16 புள்ளிகள் பெற இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் சென்னை, ஐதராபாத் அணிகளும் 16 புள்ளியை எடுக்கும் போது ரன் ரேட் முக்கிய பங்கு வகிக்கும். லக்னோவின் ரன் ரேட்-0.769 ஆகும்.
12 புள்ளிகளுடன் இருக்கும் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி இன்றைய ஆட்டத்தில் லக்னோவிடம் தோற்றால் வெளியேறிவிடும்.
மேலும் வெற்றி பெற்றாலும் பிளேஆப் வாய்ப்பை பெறுவது மிகவும் கடினம். ஏனென்றால் ஐதராபாத், சென்னை அணிகளுடன் ஒப்பிடுகையில் ரன்ரேட் குறைவாக இருக்கிறது. லக்னோவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் அது சாத்தியமற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பிடித்த முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.
தனது கடைசி லீக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 16 புள்ளிகளுடன் பிளே-ஆப் சுற்றை உறுதி செய்த கொல்கத்தா அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக இருக்கிறது. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் கைதேர்ந்தவராக திகழும் தினேஷ் கார்த்திக் (438 ரன்), ஆல்-ரவுண்டராக ஜொலிக்கும் சுனில் நரின் (327 ரன் மற்றும் 16 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (264 ரன் மற்றும் 13 விக்கெட்), அதிரடியில் மிரட்டும் கிறிஸ் லின் (425 ரன்) ஆகியோர் தான் அந்த அணியின் வெற்றிப்பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சொந்த ஊரில் விளையாடுவது கொல்கத்தாவுக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும்.
ஏற்கனவே லீக் சுற்றில் ராஜஸ்தான் ராயல்சை இரண்டு முறையும் வீழ்த்தியிருப்பதால் அதே ஆதிக்கத்தை தொடருவதில் கொல்கத்தா அணி மும்முரமாக இருக்கிறது.
தொடக்கத்தில் தடுமாறிய ராஜஸ்தான் அணி ஒரு வழியாக போராடி அதிர்ஷ்டத்தின் துணையுடன் ‘பிளே-ஆப்’ சுற்றை (14 புள்ளி) எட்டியது. முன்னணி வீரர் ஜோஸ் பட்லர் (548 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்டோர் இல்லாத நிலையிலும் கடைசி லீக்கில் பலம் வாய்ந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சாய்த்ததால் ராஜஸ்தான் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். கடந்த சில ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான கிருஷ்ணப்பா கவுதம், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் அந்த அணியின் துருப்பு சீட்டாக பார்க்கப்படுகிறார்கள். முந்தைய தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் ராஜஸ்தான் தயாராகி வருவதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது.
இந்த மைதானத்தில் இந்த சீசனில் நடந்த 7 லீக் ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணியே 5 முறை வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் டாஸ் ஜெயிக்கும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே அதிக வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேற்றப்படும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் விளையாடும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் விவரம் வருமாறு:-
கொல்கத்தா: கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், நிதிஷ் ராணா, சுப்மான் கில், பியூஸ் சாவ்லா, ஜாவோன் சியர்லெஸ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா.
ராஜஸ்தான்: ராகுல் திரிபாதி, ஜோப்ரா ஆர்ச்சர், ரஹானே (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென், கிருஷ்ணப்பா கவுதம், ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரேயாஸ் கோபால், சோதி, உனட்கட், லாக்லின்.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. #KKR #RR #IPL2018 #Playoff
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.
‘லீக்‘ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். மொத்தம் 56 ‘லீக்‘ ஆட்டமாகும். இதுவரை 48 போட்டிகள் முடிந்துவிட்டன. இன்னும் 9 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய 2 அணிகள் மட்டுமே இதுவரை ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. டெல்லி அணி ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது.
‘பிளே ஆப்’ சுற்றுக்கு நுழையும் மற்ற 2 அணிகள் எவை என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட்டைரர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 5 அணிகள் இதற்கான போட்டியில் உள்ளன. இதில் மும்பை, பெங்களூர் அணிகள் எஞ்சிய ஆட்டங்களில் கண்டிப்பாக வெல்ல வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது. இதனால் அந்த அணிகளுக்கு கடுமையான சவால் இருக்கிறது.
பஞ்சாப் அணி 16 புள்ளியுடன் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டம் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணி வாய்ப்பை அதிகரித்து கொள்ளும். தோற்றால் கொல்கத்தா, ராஜஸ்தானுடன் இணைந்து விடும் இந்த இரண்டு அணிகளும் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று உள்ளன. இந்த இரண்டு அணிக்கும் 2 ஆட்டம் இருக்கிறது.
பெங்களூர் அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வெளியேற்றப்படும்.
கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் மோதும் நாளைய ஆட்டமும், மும்பை- பஞ்சாப் அணிகள் 16-ந்தேதி மோதும் ஆட்டமும் ‘பிளே ஆப்’ வாய்ப்பை முடிவு செய்து விடலாம்.#IPL2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்