என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plex boards"

    • சாலையோரங்களில் அதிகரிக்கும் பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் தினமும் ஏர்வாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேசுவரம் ஆகிய ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

    கீழக்கரை முக்கு ரோடு திருப்பத்தில் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அனுமதியின்றி பேனர்கள் வைக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்த நிலையில் கீழக்கரையில் பிளக்ஸ் போர்டு ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

    சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் பலரும் பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கா மல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

    விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×