search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plowing"

    • கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றினர்.
    • 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் உழவார பணி மேற்கொண்டு கோவில் பிரகாரத்தில் படர்ந்திருக்கும் புற்கள், செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தனர்.

    உழவார பணியை கோவில் செயல் அலுவலர் விமலா தொடங்கி வைத்தார்.

    இதில் திட்ட அலுவலர் மற்றும் முதுகலை ஆசிரியை ராஜகுமாரி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியை திவ்யா, சர்வாலயா பணிக்குழு அமைப்பு செயலாளர் எடையூர் மணிமாறன், செயலாளர் ஜெயபிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் துரை.ராயப்பன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்வை சர்வாலய உழவாரப்பணி குழு ஒருங்கிணைத்தது.Cultivation work in Piravi Darshaeeswarar temple

    • இறை பணி மன்றம் சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலை அடைந்தது.

    அவிநாசி : 

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.

    கோவிலில் உள் மற்றும் பிரகாரம், கோவில் வளாகம், கொடி மரம் என அனைத்து பகுதிகளிலும் சிவனடியார்கள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். அதன்பின் திருமுறை பாராயணம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க சிவனடியார்கள் ஊர்வலமாக சென்றனர். இதனை, கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் துவக்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் மீண்டும் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற சிவனடியார்கள் ஆன்மிகம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    இது குறித்து இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் நிறுவனர் கணேசன் கூறியதாவது:- இதுவரை 246 கோவில்களில் 300க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் உழவாரப் பணிகள் மேற்கொண்ட வருகிறோம். கொங்கேழு சிவாலயங்களில் கோவை - பேரூர் பட்டீஸ்வரர் கோவிலிலிருந்து துவங்கியுள்ளோம்.

    அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்,வெஞ்ச மாங்கூடலூர் விகிர்தீஸ்வரர் கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவ ஸ்தலங்களில் உழவாரப்பணிகள் மேற்கொண்டோம்.

    உழவாரப் பணி மேற்கொள்ளும் கோவில்களில் பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி மரக்கன்றுகள் நடுதல், கூட்டு பிரார்த்தனை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

    • சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பபோது பலத்தமழை பெய்தது.
    • சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    காளசமுத்திரம் , தத்தா திரிபுரம், குரால், பாக்கம்பாடி, நயினார்பாளையம், ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இந்த மழையின் காரணத்தினால் விவசாயிகள் வயல்களில் உழவு பணி மும்முரமாக செய்து வருகின்றனர்.மானாவாரி நிலங்களில், தானிய பயிர்கள் மற்றும் இறவை பாசன நிலங்களில், சின்னவெங்காயம், பீட்ரூட், தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    சின்னசேலம் பகுதியில் அதிகமாக சோளம், நெல், மஞ்சள், குச்சி கிழங்கு, ஆகியவை அதிகளவில் பயிரிடுவது வழக்கம். அதேபோல் இம்முறையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் பெய்துள்ள மழை காரணமாக வயல்களில் உழவு, விதைப்பு பணிகளில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

    • கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும்.
    • கோடை உழவு செய்யாதவர்கள் உடனடியாக கோடை உழவு மேற்கொண்டு பயன் பெறலாம்.

    பல்லடம் :

    பல்லடம் வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-பருவ மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பல்லடம் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் கோடை உழவு செய்யாமல் இருக்கின்றனர். கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும். மழைக்காலத்தில் செய்யும் உழவை விட கோடை காலத்தில் உழவு செய்வதுதான் முக்கியமானது. மழைக்கால உழவில் குளுமை மட்டும் இருக்கும். கோடை உழவில் குளுமை, வெப்பம் இரண்டும் இருக்கும். இதுதான் விவசாய மண்ணுக்கு முக்கியம். மேட்டுப்பகுதியில் இருந்து, தாழ்வான பகுதியை நோக்கி உழவு செய்ய வேண்டும். இரண்டாவது உழவு குறுக்கு வசத்தில் இருக்க வேண்டும்.

    இப்படி நான்கு முறை உழ வேண்டும்.இப்படி உழுதால் மழைநீர் மண்ணுக்குள் இறங்கும்.கோடையில் முதல் மழை பெய்த உடனேயே உழவு செய்ய வேண்டும். வெப்பம் காரணமாக மண்ணின் மேற்புறத்தில் வெடிப்புகள் இருக்கும். அதனால் மண்ணின் சத்துக்கள் ஆவியாகிவிடும்.இதை தடுக்க கோடை உழவு செய்யவேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜன், நைட்ரஜன் உள்ளிட்ட உயிர் சத்துக்கள் இரவு நேரத்தில் பூமி உள்வாங்கி குளிர்ச்சியாகும். மேலும் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட பயிர்களை தாக்கிய பல்வேறு பூச்சிகள், புழுக்கள், அவைகளின் முட்டைகள், கூட்டுப் புழுக்கள் மண்ணில் இருக்கும். கோடை உழவு செய்வதால் அவை கட்டுப்படுத்தப்பட்டு,ஏற்கனவே இருந்த களைகளும் அழிக்கப்படும். எனவே இதுவரை கோடை உழவு செய்யாதவர்கள் உடனடியாக கோடை உழவு மேற்கொண்டு பயன் பெறலாம் .இவ்வாறு வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


    • ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    மடத்துக்குளம்,

    உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வனப்பகுதியில் உற்பத்தியாகி வருகின்ற ஆறுகளைத்தடுத்து அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரள மாநிலத்தில் உள்ள மூணார் மறையூர் பகுதியில் உற்பத்தியாகி ஆறுகள் பிரதான நீர் வரத்தை அளித்து வருகிறது. அத்துடன் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற சிற்றாறுகளும் ஓடைகளும் அணைக்கு கை கொடுத்து உதவி வருகிறது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் பிரதான கால்வாய் மற்றும் அமராவதி ஆறு, குளம், கல்லாபுரம் வாய்க்கால் மூலமாக 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    அதுதவிர சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் ஆறு மற்றும் கால்வாய்களை ஆதாரமாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. ஆனாலும் அடிவாரப்பகுதி வறட்சியின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பச்சை பசேலென்று வளமுடன் காணப்பட்ட அணைப்பகுதி பொழிவை இழந்து பரிதவித்து வருகிறது.அணைக்கு பெரிதளவில் நீர்வரத்து இல்லாததால் விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்வதிலும் சிக்கல்கள் நிலவி வருகிறது.

    90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் தற்போதைய நிலவரப்படி 62.77அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 489 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோன்று பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கி வருகின்ற திருமூர்த்தி அணையும் நீர்வரத்து இன்றி தவித்து வருகிறது.

    இந்த அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணைக்கு வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் கைகொடுத்து உதவுவது இல்லை. அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. அணையின் நீர் இருப்பு உயர்ந்த பின்பு சுழற்சி முறையில் 4 மண்டலங்கள் மற்றும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.கோடை வெப்பத்தின் தாக்கத்தால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கும் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போதைய நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட அணையில் 30.05 கன அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 28 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிறைய வருகிறது.இதனால் விவசாயிகள் நிலத்தை உழுது பண்படுத்தி விட்டு பருவ மழையை எதிர்பார்த்து உள்ளனர்.

    ×