search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Plus-2 General Examination"

    • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வகுப்பறை கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
    • தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகம் அரசர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அரண்மனை சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் நடந்து முடிந்த பிளஸ் -2 பொதுத்தேர்வில் 97 சதவீதம் மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.

    இந்த நிலையில் அரசர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    அரசர் மேல்நிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் நடந்த இந்த விழாவுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், கேடயம் வழங்கி பாராட்டினார். உயர்நிலைக் கல்வியில் சிறந்து படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

    தொடர்ந்து தேர்ச்சி விகிதத்தை அதிகரித்த ஆசிரிய- ஆசிரியைக ளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் அரண்மனை சத்திர நிர்வாகம் அரசர் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 97 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் அதிகமாகும். தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்திய ஆசிரிய-ஆசிரியைகளுக்கு பாராட்டுக்கள்.

    இதுக்கு முன்னர் 4000 மாணவ- மாணவிகள் அரசர் மேல்நிலைப் பள்ளியில் படித்துள்ளனர். அந்த இலக்கை தாண்டி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

    அடுத்த ஆண்டு 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஆறு வகுப்பறைகள் கொண்ட உயர்நிலைப்பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    சத்திரம் நிர்வாகத்திற்கு உட்பட்ட அரசர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.

    இந்த புதிய கட்டிடமானது தனியார் பள்ளிகளுக்கு இணையாக உள்ள கட்டிடம் போன்று அமைக்கப்ப ட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் உள்ளது போல் நாற்காலிகள், கரும்பலகை உள்ளிட்ட பல வகைகள் அமைத்துள்ளோம். இந்த கட்டிடம் கட்டுவதற்கு கடுமையாக உழைத்து உள்ளோம்.

    தற்போது உயர்நிலைப் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இன்று பூமி பூஜை போடப்பட்டுள்ளது. இந்த கட்டிடமும் தரமானதாக அமையும். தற்போது அரசர் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சத்திரம் தாசில்தார் ஜெயலட்சுமி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. வருகிற 3-ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது.
    • இதற்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு மையங்களில் 352 தனித்தேர்வர்களும் எழுதுகிறார்கள்.

    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று காலை தொடங்கியது. வருகிற 3-ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் தேர்வை 10,000 மாண வர்கள், 9,877 மாணவிகள் என மொத்தம் 19,877 பேர் எழுதுகிறார்கள்.

    இதற்காக 83 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இரு மையங்களில் 352 தனித்தேர்வர்களும் எழுதுகிறார்கள். மேலும் தேர்வு கண்காணிப்பு பணி யில் 1800-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தேர்வுக்கான வினாத் தாள் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள பாதுகாப்பு மையங்களில் இருந்து சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு இன்று காலையில் உரிய பாது காப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. மாண வர்கள் காப்பியடிப்பது தவிர்க்க பறக்கும் படையினர் சுற்றி வந்தனர்.மாவட்ட முழுவதும் உள்ள தேர்வு மையங்கள் அருகில் அசம்பா வித சம்ப வங்களை தவிர்க்க போலீ சார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட னர். மேலும் அரசு போக்கு வரத்து கழகம் மூலம் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. செல்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    • 30,948 பேர் எழுதுகின்றனர்
    • பறக்கும் படை அமைத்து கண்கானிப்பு

    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம்.

    இதில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ ர்களுக்கு பருவ தேர்வாகவும், 10-ம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வாகவும் நடைபெறுகிறது.

    பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையின் படி பிளஸ்-2 மாணவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரையும், பிளஸ்-1 மாணவர்களுக்கு 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி வரையும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள பிளஸ்-2 மாணவர்களுக்கான தேர்வில் 15 ஆயிரத்து 467 மாணவர்களும், 15 ஆயிரத்து 481 மாணவிகளும் என 30 ஆயிரத்து 948 பேரும் எழுதுகின்றனர்.

    இந்த தேர்விற்காக மாவட்டத்தில் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வு மையங்களில் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 15 நிமிடங்கள் வினாத்தாளை வாசிக்க வழக்கப்படும்.

    இந்த தேர்வை மாணவர்கள் எந்தவித அச்சமும், பதற்றமும் இல்லாமல் எழுத வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதேபோல் பிளஸ்-1 தேர்வை 13 ஆயிரத்து 463 மாணவர்களும், 14 ஆயிரத்து 246 மாணவிகளும் என 27 ஆயிரத்து 709 பேரும் எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு தேர்வை 15 ஆயிரத்து 302 மாணவர்களும், 14 ஆயிரத்து 621 மாணவிகளும் என 29 ஆயிரத்து 923 பேரும் எழுதுகின்றனர். பறக்கும் படை அமைத்து கண்காணிக்கின்றனர்.

    • 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது
    • பறக்கும் படை தீவிர கண்காணிப்பு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 16,970 மாணவ,மாணவிகள் தேர்வு எழுத உள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்கி அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு கடந்த 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற்றது. பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்டன.

    வேலூர் மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் 6 இடங்களில் தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு அறைக்கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும் அந்த அறையின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 8,247 மாணவர்கள், 8,723 மாணவிகள் என்று மொத்தம் 16,970 மாணவ,மாணவிகள் எழுதுகிறார்கள்.

    அவர்கள் தேர்வு எழுதுவதற்காக 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ள உள்ளன. தேர்வவு மையங்களை கண்காணிக்க 81 முதன்மை கண்காணிப்பாளர்கள், 81 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்வில் காப்பியடிப்பவர்களை பிடிக்கவும், ஆள்மாறாட்டத்தை கண்டறியவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 89 பேர் அடங்கிய பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர கலெக்டர், வருவாய் துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையிலான குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

    வினாத்தாள்கள் 19 வழித்தடங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.தேர்வு தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சரியாக காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்படும்.

    முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், பின்னர் விடைத்தாளை பூர்த்தி செய்வதற்கும் 5 நிமிடமும் அனுமதி வழங்கப்படும். தேர்வுகள் 10.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணிவரை நடைபெறும்.

    தேர்வு மையங்களில் இருந்து முன்கூட்டியே மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அனுமதிக்கப்பட்ட நேரம் முழுவதும் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய மாணவர்களின் பட்டியலை அடிப்படையாக்கொண்டு பிளஸ் - தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும்பணி துவங்கியுள்ளது.
    • 28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

    திருப்பூர் : 

    கடந்த ஆண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணவர்களின் பெயர்பட்டியலை அடிப்படையாக்கொண்டு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும்பணி துவங்கியுள்ளது.இது குறித்து திருப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்து மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களும், அக்டோபர் 21 முதல் www.dge.tn.gov.in என்ற இணைய முகவரிக்கு சென்று தங்கள் பள்ளியில் மார்ச் 2023ல் பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நிரந்தர பதிவு எண், பெயர், பிறந்த தேதி, பாடத்தொகுதி, பெற்றோரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.இப்பட்டியலில் உள்ள மாணவர்களின் பெயர் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) போட்டோ மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தங்கள் இருப்பின் அதன் விவரங்களை 10-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் நகலுடன் இணைத்து வரும் 28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவரது பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அரசிதழில் பதிவு செய்து பெயர் மாற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே 10-ம் வகுப்பு சான்றிதழில் உள்ளவாறு இல்லாமல் அரசிதழில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்ய முடியும்.மாணவர் பெயர், தலைப்பெழுத்து விடுபட்டிருப்பின் தமிழில் தவறாக இருப்பின் அதனை முழுமையாக நீக்கம் செய்து, மாற்றவும். ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வு எழுதி பின் மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறொரு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து படித்தால் அவர் பெயர், தற்போது பிளஸ் 2 பயிலும் பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கு பிளஸ் 1 மதிப்பெண் பட்டியல் நகல், மாற்றுச்சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும்.ஏற்கனவே படித்த பாடத்தொகுப்பு, பயிற்றுமொழி மற்றும் மொழிப்பாடத்தில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய இயலாது. பிளஸ் 1 பொது தேர்வெழுதிய பள்ளி மாணவர் பெயரை பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கபடாத நிலையில் பிளஸ் 2 தேர்வு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. அதேபோல், பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் நீண்ட காலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரையும் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது.மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்ட பின் நீக்கலாம். கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கு முன், பிளஸ் 1 படித்து பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றும், பெறாமலும் இடைநின்று தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் பெயரை 2023 பட்டியலில் சேர்க்க இயலாது.28ந் தேதி மாவட்ட தேர்வுகள் உதவி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×