என் மலர்
நீங்கள் தேடியது "plx board"
- பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பிளக்ஸ் போர்டுகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றி வருகின்றனர்.
- இந்த நிலையில் மீண்டும் திடீரென பிளக்ஸ் போர்டு கள் ஆங்காங்கே வைக்க தொடங்கியுள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பிளக்ஸ் போர்டுகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் அகற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் மீண்டும் திடீரென பிளக்ஸ் போர்டு கள் ஆங்காங்கே வைக்க தொடங்கியுள்ளனர். இதனால் பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு இது பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவ லர்கள் பரமத்திவேலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
இதன் காரணமாக அனுமதி இன்றி பிளக்ஸ் போர்டு அச்சடித்து கொடுத்தால், அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் இந்திராணி எச்சரித்துள்ளார்.