search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK MLA"

    • பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

    சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் பாமக எம்எல்ஏ அருள் சந்தித்துள்ளார்.

    மக்களவை தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக- பாமக இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    பாமக கேட்கும் தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

    அன்புமணி மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் இன்று காலை தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
    • ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார் அருள் எம்.எல்.ஏ.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பாகல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது தி.மு.க.வைச் சேர்ந்தவர்களுக்கு பேச அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எம்.எல்.ஏ. அருள் மாணவர்கள் மத்தியில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

    அப்போது பேசிய எம்.எல்.ஏ. அருள், ஒரு அநாகரிகமான செயல்பாட்டுக்கு உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னை மன்னிச்சிடுங்க. அரசியல் பண்ண விரும்பலை. நல்ல ஒழுங்கத்த கத்தக்கொடுக்கற இடத்தில உங்களுக்கு அவமரியாதை, அசிங்கப்படுத்திட்டாங்க. கட்சிக்காக பேசலை. மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

    • சேலம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
    • இதில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் உள்பட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    சேலம்:

    கடந்த 2008-ம் ஆண்டு சேலம் பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை இடித்து புதிய கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதையடுத்து பழைய கட்டிடத்தை இடிக்காமல், தொல்லியல் துறை மூலம் புதுப்பித்துப் பராமரிக்க வலியுறுத்தி கோர்ட்டு மூலம் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த நிலையில் பழைய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை இடிப்பதை தடுக்க முயன்ற ஹரிபாபு, தமயந்தி,அருள் எம்.எல்.ஏ, பூமொழி,செந்தில், ஜாகீர் அஹமது, கோபால்,தங்கவேல், சரவணன், ஜெகன் மோகன், சுலைமான், சுதாகர் ஆகியோர் மீது டவுன் போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஜெ.எம்1-ல் 14 வருடங்களாக நடைபெற்றது. அவர்களுக்கு ஆதரவாக வக்கீல் விஜயராசா வாதாடினார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 14 பேரையும் விடுதலை செய்யப்படுவதாகது நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். 

    ×