என் மலர்
நீங்கள் தேடியது "poisoned"
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே செம்பட்டி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 65). இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் தோட்டம் வைத்து தென்னை சாகுபடி செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியில் போதிய அளவு மழை இல்லாததால் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்று விட்டதால் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு பாய்ச்சினார்.
இருந்தபோதும் வறட்சியின் தாக்கம் அதிகரித்ததால் வேலுச்சாமியின் தோட்டத்தில் இருந்த தென்னை மரங்கள் கருகத் தொடங்கின எவ்வளவோ முயற்சி செய்தபோதும் தென்னை மரங்களை காப்பாற்ற முடியவில்லை.
தன் கண் முன்னே தென்னை மரங்கள் கருகியதால் கடும் மன உளைச்சலில் இருந்தார். எனவே தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். அதன்படி விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.
வறட்சியின் காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள பழைய செம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ஜீவாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
கடந்த 25-ந் தேதி ஸ்டீபன்ராஜ் மர்மமான முறையில் இறந்து விட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கருதிய ஜீவா இது குறித்து செம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் வழக்குபதிவு செய்யாமல் அவரை அங்கிருந்து அனுப்பி விட்டனர்.
ஸ்டீபன்ராஜ் கொலை வழக்கை போலீசார் மறைப்பதாக ஜீவா குற்றம்சாட்டினார். இதனால் அவரது கல்லறை முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதற்கு முன்பாக எனது கணவர் கொலை குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். நான் இறந்தவுடன் என் உடலை ஸ்டீபன்ராஜ் சமாதி அருகே புதைத்து விடவும் என கடிதம் எழுதி வைத்திருந்தார்.
மயங்கிய நிலையில் கிடந்த ஜீவாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மானாமதுரை:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மயில்கள் உள்ளன. அப்பகுதியில் மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அடிக்கடி நடந்து வருகிறது. மயில்களை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜகம்பீரம் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் 25-க்கும் மேற்பட்ட மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் (வயது 50) என்பவர் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
குத்தகை எடுத்து விவசாயம் செய்த நிலத்தில் புகுந்து மயில்கள் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் நெல்லில் குருணை மருந்தை கலந்து மயில்களை கொன்றேன் என்று கைதான சந்திரன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 36). இவரது மனைவி முத்து மாரியம்மாள். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
குடிபோதைக்கு அடிமையான சரவணக்குமார் தனது டிரைவர் தொழிலையும சரிவர செய்யவில்லை.
வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து உயிருக்கு போராடியபடி இருந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக சரவணக்குமாரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி சரவணக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷிய நாட்டின் ராணுவத்துறை உளவுப்பிரிவில் உயரதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). சில ரஷிய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மாஸ்கோவில் இவர் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010-ம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது.
தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த மார்ச் 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது மகள் யூலியாவுடன் (33) மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் மிகவும் கொடூரமான ‘மர்ம விஷம்’ ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

லண்டன் மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த செர்ஜய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோரின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல்நலம் தேறிய யூலியா ஸ்கிர்பால் கடந்த மாதம் 9-ம் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், செர்ஜய் ஸ்கிர்பால் உடல்நலம் தேறியதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இவருவரும் பாதுகாப்பான மற்றும் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என பிரிட்டன் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. #SergeiSkripal